Thottal Thodarum

Apr 14, 2017

சாப்பாட்டுக்கடை - கும்குமப்பூ பிரியாணி. Saffron biriyani

நண்பர் ராஜவேல் உணவுகளின் காதலன். என்னுடய சாப்பாட்டுக்கடை பதிவுகளில் உள்ள அத்துனை கடைகளையும் தேடிச் சென்று சாப்பிட்டு விடுபவன். அவனிடமிருந்து ஒரு போன். “அண்ணே.. புதுசா ஒரு சின்ன புட் ஜாயிண்ட் ஆரம்பிச்சிருக்கேன். வந்து வாழ்த்தணும்” என்றான். என்னைப் போலவே சாப்பாட்டு பிரியனாயிருந்து பேலியோவுக்கு மாறியவன்.  அவன் ஒரு உணவு விடுதியை திறந்திருக்கிறான் எனும் போது ஆர்வம் அதிகமானது. பிரியாணி அதுவும் குங்குமப்பூவில் செய்தது என்றதும் மனசும் நாக்கும் கேட்கவில்லை.  நண்பருடன் உடன் ஆஜரானேன். ஒரு மட்டன் பிரியாணி, ஒரு சிக்கன், சிக்கன் 906, கரண்டி ஆம்லெட்,  கொஞ்சம் சாதம், ரசம்  என பேக்கேஜாய் அனுப்பியிருந்தான்.

பிரியாணி வாசனையும், குங்குமப்பூ வாசமும் சேர்ந்து மணத்தது. நல்ல நீட்டு நீட்டு பாஸ்மதி அரிசி. அதிக ஆயில் இல்லாமல். அதே நேரத்தில் தொண்டை அடைக்கும் ட்ரையாய் இல்லாமல், நல்ல தரமான மட்டன் பீஸ்களுடன், வழக்கத்தை விட கொஞ்சம் மசாலா அயிட்டங்கள் தூக்கலாக இருந்ததைத் தவிர குறையொன்றுமில்லை. உடன் கொடுக்கப்படும் கடலூர் சிக்கன் மல்லிக்  குழம்பு ஆஸம். சிக்கன் பிரியாணியில் மசாலாவின் அளவு சரியாகவேஇருந்தது. கொஞ்சம் காரம் குறைவாக சேம் குவாலிட்டியில். சிக்கன் பிரியாணி லெக்பீஸோடும்,  இரண்டு மக்காயா முட்டை மசாலா எனும் கரண்டி ஆம்லெட்  டேஸ்டோடும், கொஞ்சம் தக்காளி வெங்காய மிக்ஸுடன் ட்ரையாய், சாப்டாய். சூடாய் சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாய் இருந்தது. இதற்கும் கடலூர் சிக்கன் மல்லிக் குழம்பு செம்ம ஜோடி. பெரும்பாலான பிரியாணி கடைகளில் சிக்கன், மற்றும் மட்டன் என தனியாய் சமைப்பதில்லை. இல்லையேல் பெரிதாய் வித்யாசம் இருப்பதில்லை. கும்குமப்பூவில் ரெண்டுக்கும் ஆறு வித்யாசங்கள். உடன் சாப்பிட்ட நண்பர் சொல்லிச் சொல்லி மாய்ந்தார். கிரேவியும் ப்ரியாணியும் செம்ம.. என்று.

சென்னையில் மூலைக்கு பிரியாணி கடை திறப்பதற்கு முன் பிரியாணி சாப்பிட்டால் உடன் ஒரு கரண்டி சாதம் ரசம் தருவது நம்மூர் மரபு. பெருகி விட்ட செட்டிநாட்டுக்கார ஓட்டல்களினால் அது வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் தம்பி சிக்கனாகட்டும் மட்டனாகட்டும் ஒரு கப்பு சாதமும், ரசமும் அனுப்புகிறார். பேக்கேஜில். ரசம் அஹா ஓஹோ என்றில்லாவிட்டால் நன்றாகவே இருந்தது. 

சிக்கன் 906 என்று ஒரு அயிட்டம் புதியதாய் இருந்தது. சிக்கன் 65 போல ப்ரை செய்யப்பட்டு, மீண்டும் அதன் மேல் தக்காளி/மிளகாயில் அரைத்த பேஸ்டினால் மேரினேட் செய்யப்பட்டு, நம்மூர் டேஸ்டுமில்லாமல் சைனீஸாகவும் இல்லாமல் இருந்தது. புதிய ஒர் உணர்வை அளித்தது என்பதை மறுக்க முடியாது.  இரவில் நெய் இட்லியும், கடலூர் ஸ்டைல் கொத்ஸு என்று போட்டிருந்தார்கள்.  பின்பொரு நாள் ருசிக்க வேண்டும்.  வித்யாசமான நல்ல தரமான பிரியாணியை ருசிக்க 

Saffron Biriyani (குங்குமப்பூ பிரியாணி)
Near vadapalani temple axis bank ATM
Pillaiyar koil st, vadapalani
7550066366


Post a Comment

No comments: