கொத்து பரோட்டா -2.0-28
கொத்து பரோட்டா -2.0-28 எஸ்.பி.பி v/s இளையராஜா எஸ்.பி.பியின் வெளிநாட்டு கச்சேரியில் தன்னுடய பாடல்களை அனுமதியில்லாமல் பாடக்கூடாது என்று இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்றதும் இணையமெங்கும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷங்கள் முழங்க ஆரம்பித்துவிட்டது. சொல்லப் போனால் காப்பிரைட் சட்டப்படி அவர் கேட்டதில் ஏதும் தப்பேயில்லை. ஒரு இசையமைப்பாளராய் அதன் உரிமை முழுவதும் அவர் வைத்திருக்கும் பட்சத்தில் அது சரியே. ஆனால் நெடுநாள் நண்பர்களான எஸ்.பி.பிக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு என்ன பிரச்சனை என்ற கேள்வி ஒரு புறம் எழுந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இந்த காப்பிரைட் பற்றிய அறிவு கிடையாது என்பதே உண்மை. முன்பெல்லாம் தயாரிப்பாளருக்குத்தான் எல்லா உரிமையும் இருந்தது. என்றைக்கு பெயருக்குப் பின்னால் தயாரிப்பாளர்கள் ஓட ஆர்மபித்தார்களோ அன்றைக்கு வந்தது அவர்களுக்கு ஆப்பு. இளையராஜா உட்பட பல பெரும் ஜாம்பவான்கள் தங்களது வேலைப் பார்க்கும் படங்களுக்கு சம்பளத்தில் தான் வேலை பார்த்து வந்தார்கள். பின்னாளில் ராயல்டி, டிஜிட்டல் உரிமை என பல விஷயங்கள் வளர, வளர சம்...