கொத்து பரோட்டா -2.0-31
கொத்து பரோட்டா 2.0-31 காற்றில்லாமல் புழுங்கியபடி இருக்கும் தமிழ் சினிமா உலகிற்கு புத்துணர்ச்சி கொண்டு வருவதாய் உறுதியிட்டு பதவியேற்றிருக்கும் புதிய தலைவர்களுக்கு ஒர் வேண்டுகோள், பைரஸி, அதிக படங்கள், திரையரங்கு கட்டணம், என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கிடையே முக்கியமாய் பார்க்க வேண்டிய ஒன்று டிஜிட்டல் சினிமா. இனிமேல் நெகட்டிவ் வேண்டாம் டிஜிட்டலில் படமெடுத்தால் படப்பிடிப்பின் செலவில் பாதி குறைந்துவிடும் என்று அதை ப்ரொமோட் செய்தார்கள். படமெடுக்க மட்டுமல்ல இனி படத்தை ஒளிபரப்ப டிஜிட்டல் முறை ஒரு ப்ரிண்டுக்கு அன்றைய தொகை சுமார் அறுபதாயிரம். டி.டிஎஸ் ராயல்டியோடு. அதற்கு பதிலாய் திரையரங்கில் டிஜிட்டல் ப்ரொஜக்டரை வைத்துவிட்டு, டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பினால் வெறும் ஏழாயிரம் ரூபாய் தான் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் க்யூப் நிறுவனம். அட பரவாயில்லையே ஒரு பிரிண்ட் அறுபதாயிரத்துக்கு பதிலாய் ஏழாயிரத்து சில்லறையில் புத்தம் புதிய ப்ரிண்டாய் நூறு நாட்கள் ஓடுமே என்று தயாரிப்பாளர்களும் ஆதரிக்க, டிஜிட்டல் படப்பிடிப்பும், ப்ரொஜக்ஷனுக்கும் டிமாண்ட் வர, அதை திரையரங்குகளில் விதவிதமான வகைகளில் சுலப தவணை, விளம்ப்ர வரு...