கொத்து பரோட்டா -2.0-36
கொத்து பரோட்டா 2.0-36 The Affair -குறும்படம். தமிழில் தற்காலத்தில் வரும் பெரும்பாலான குறும்படங்களில் ஒரு கேரக்டரைக் காட்டி, இவர் பெயர் ராமசாமி. செம்ம காமெடியா பேசுவார்னு அறிமுகபடுத்தி ஆரம்பிப்பதுதான் லேட்டஸ்ட். வழக்கம். காமெடியா பேசுவார்னு முன்னமே சொல்லிட்டோமேன்கிற உரிமையில், பெரும்பாலான குறும்படங்கள், ப்ளாக், ப்ளூ, வொயிட் என பல கலர்களில் காமெடியாய் நினைத்து கொடுக்கும் பல விஷயங்கள் சோகமாய் முடிவதுண்டு. உறவுகள் பற்றியோ, அதன் முரண்கள் பற்றியோ பேசும் படங்கள் மிகக்குறைவு. பாஸ்ட் கட்டில்யே படம் எடுத்து பழகி, உணர்வுகளை வெளிப்படுத்த சில மாண்டேஜ் ஷாட்களோ, நிறுத்தி நிதானமாய் நடிக்க வாய்பிருக்கும் காட்சிகளோ வைத்தால் அது லேக் என்று முடிவாகி, சட்சட்டென எகிறும் எடிட் தான் சாஸ்வதம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படம் விதிவிலக்கு.. உடல்நலமில்லாத படுத்த படுக்கையான மனைவி, காதல் கல்யாணம் செய்ததால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட மகன், திருமணமான மகள். மகனின் மனைவி மூலமாய் தங்கள் அப்பாவிற்கு வேறு ஒரு சிறு வயது பெண்ணுடன் தொடர்பு என்று அறிகிறான் மகன். மகள் குமுறுகிறாள். இனி அம்மா...