கொத்து
பரோட்டா 2.0-38
Rarandoi
Veduka Chudham
அப்பா நாகார்ஜுனாவை வைத்து குஜாலான
சின்னி நைனா படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்,
பையன் நாக சைத்தன்யாவை வைத்து டிபிக்கல், தெலுங்கு டெம்ப்ளேட் காதல் குடும்பக்
கதை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண்.
ஆஸ்யூஸ்வல் கல்யாணத்தில் ஹீரோயின் சந்திப்பு. பார்த்தவுடன் பிடித்துப் போதல்.
சைத்தன்யாவின் ‘மச்சித்தனம்” பார்த்து ஹீரோயின் குடும்பமே இம்ப்ரஸ் ஆவது. ட்விஸ்ட்
என்னவென்றால் ஹீரோயின் அப்பாவும், ஹீரோ அப்பாவும் முன்னாள் நண்பர்கள் இன்னாள் விரோதிகள்.
காரணம் ஆஸ்யூஸ்வலான நட்பு துரோகம். தங்கையுடன் திருட்டுக் கல்யாணம் செய்ய முனையும்
போது தங்கையின் சாவு. ஆனால் பின்னணியில் ஒர் மொக்கை குடும்ப வில்லன். குடும்பத்தையும்,
காதலையும் சேர்க்க ஹீரோவின் முயற்சி என சகலவிதமான தெலுங்கு பட டெம்ப்ளேட்டுகளுடனான
கதை. ரசிக்கக்கூடிய ஒர் விஷயம் குளுகுளு ராகுல் ப்ரீதி சிங். தேவி ஸ்ரீ பிரசாத்தின்
ஒரிரு பாடல்கள். கலர்புல் ஒளிப்பதிவு மட்டுமே. ரொமான்ஸில் தம்பி இன்னும் ப்ரீகேஜியே
தாண்டவில்லை. அப்பாவை வைத்து இந்த கதையை எடுத்திருந்தால் மிண்டும் ஹிட்டடித்திருப்பார்
இயக்குனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Wild
Tales
Damian
sifron இயக்கத்தில் வெளியான
குறும்படங்களின் தொகுப்பு இந்த அர்ஜெண்டேனிய படம். இப்படத்தின் சுவாரஸ்யம் என்னவெறால் இப்படங்களின்
அடிநாதமான கண்டெண்ட். எல்லா படங்களின் அடிப்படை பழிவாங்கும் உணர்வும் அதை சார்ந்த செயல்களும்
தான். மொத்தம் ஆறு படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்தும்
படங்கள்.
முதல் படத்தில் விமானத்தில் இருபது பேர்களுக்கு மேல் இருக்க, அங்கிருக்கும்
ரெண்டு பேர்கள் பேஸ்தர்நாக் பற்றி பேசுகிறார்கள். இரண்டு பேரில் ஒருத்தி பெண். பேஸ்தர்நாக்கின்
முன்னாள் காதலி. இன்னொருவருர் அவனின் இசை விமர்சகர். அவனின் இசைத் தொகுப்பை கிழித்து
தொங்கவிட்டவர். கொஞ்சம் கொஞ்சமாய் விமானத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிய வருகிற
விஷயம் அனைவருமே பேஸ்தர்நாக்கை அறிந்தவர்கள், ஏதோ ஒரு விதத்தில் அவனின் மேல் அதிருப்தியை
வெளியிட்டவர்கள். அப்போது விமான பணிப் பெண் பதற்றத்துடன் ஓடி வருகிறாள். என்னவென்று
எல்லோரும் கேட்க, விமான பைலட் தன்னுடய கேபினை உள்பக்கமாய் பூட்டிக் கொண்டு திறக்க மறுக்கிறார்
என்று சொல்ல, அவரின் பேரை கேட்கிறார்கள் அனைவரும்
அவள் பதற்றத்துடன் “பேஸ்தர்நாக்” என்று சொல்ல, விமானம் பேஸ்தர்நாக்கின் பெற்றோர்கள்
மீது க்ராஷ் ஆகிறது.
மூன்றாவது படத்தில் டியாகோ தன்னுடய
ஹை எண்ட் காரில் ஹைவேயில் பயணித்துக் கொண்டிருக்கிறான். அவனின் முன் ஒரு லொடக்கா குட்டியானையை
வைத்துக் கொண்டு, வழிவிடாமல் போய்க் கொண்டிருக்கிறான் மரியோ. ஒரு கட்டத்தில் டியாகோ
கோபத்தில் அவனை முந்தி ஓட்டி, அவனை அவமானப்படுத்துவிதாமாய் செய்கை ஒன்றை செய்துவிட்டு,
முந்திச் செல்கிறார். சில மணிநேரங்களுக்கு பிறகு
டியாகோவின் கார் பஞ்சராகி நிற்க, டயர் மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மரியோ
தன் லொடக்கா வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான். தன் வழியை மறிக்கும் டியாகோவின் வண்டியின்
முன் நிறுத்திவிட்டு, அவனை நோக்கி வருகிறான். டியாகோ பயந்து போய் கதவை மூடிக் கொண்டு,
இருக்க, மரியோ வண்டியின் விண்ட்ஷீல்டை அடித்து உடைத்துவிட்டு, வண்டியின் மேல் ஆய் போய்
விட்டு கிளம்ப யத்தனிக்க, கோபம் கொண்ட டியாகோ அவனின் வண்டியோடு, இடித்து தள்ளுகிறான்.
வண்டி பாலத்தின் மீது மோதாமல், பாலத்தின் அடியில் உருண்டோட, சற்று தூரம் வண்டியோட்டிச்
சென்ற டியாகோ, எங்கே போலீஸ் பிரச்சனை ஏதாவது வருமோ என்று பயந்து திரும்ப அங்கேயே வருகிறான்.
வண்டியின் வீல் கழண்டு ஓடிய வேகத்தில் அவனது வண்டியும், அதே பாலத்தின் அடியில் மரியோவின்
வண்டியின் மீது வீழ்கிறது. டியோகோ காரின் சீட் பெல்ல்டில் மாட்டிக் கொண்டிருக்க, மரியோ
டீசல் டேங்கை உடைத்து, தன் கிழிந்த சட்டையில் டீசலை நினைத்து கொளுத்திவிட முயல்கிறான்.
டியாகோ அவனை எரித்துவிட்டு வெளியேற முடியாத படி கட்டி அணைத்துக் கொள்ள, வண்டி வெடிக்கிறது.
டோ வண்டிக்காரன் இருவரும் கட்டி அணைத்தபடி இறந்திருப்பதைப் பார்த்து காதலர்கள் என்று
நினைத்துக் கொள்கிறான்.
நான்காவது படத்தில் பிட்சர் பெரிய
பெரிய கட்டிடங்களை சீட்டுக்கட்டுக்களாய் வெடி வைத்து சரிக்கும் டெமாலிஷன் எக்ஸ்பர்ட்.
ஒரு நாள் தன் மகளின் பிறந்தநாளுக்காக கேக் வாங்க கடையின் முன் காரை பார்க் செய்துவிட்டு
போகிறான். அவனின் கார் நோ பார்க்கிங்கில் பார்க் செய்யப்பட்டதற்காக டோ செய்யப்படுகிறது.
பைன் கட்டும் இடத்தில் வந்து ”நோ பார்க்கிங்கிற்கான” மஞ்சள் கோடு போடப்படவேயில்லை என்று
வாதாடுகிறான். ஆனாலும் பணம் கட்டித்தான் வண்டியை எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்
அவனின் மகளின் பிறந்தநாள் பார்ட்டியை மிஸ் செய்கிறான். இன்னொரு முறையும் அதே போல தவறாய்
வண்டியை நோ பார்க்கிங்கிற்காக டோ செய்யப்பட்டுவிட, இம்முறை அவன் சண்டை போட, கைகலப்பாகி,
போலீஸாரால் அரஸ்ட் செய்யப்படுகிறான். இதனால் அவனின் வேலை மற்றும் குடும்பம் சிக்கலாகிப்
போக, ஒரு நாள் வண்டி முழுவதும் வெடிப்பொருட்களாய் நிரப்பி, நோ பார்க்கிங்கில் நிறுத்தி
வைக்க, வழக்கம் போல, வண்டியை போலிஸார் டோ செய்து கொண்டு போக, பார்க்கிங்கில் வைத்த
பின் தன் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து அந்த பார்க்கிங் லாட்டையே நாசப்ப்டுத்துகிறான்.
தான் செய்யும் தொழிலைக் காட்டி என் அனுமதியில்லாமல் வண்டியை டோ செய்ததினால் வெடித்தது
என்கிறான்.
இப்படியாக மொத்தம் ஆறு கதைகள்.
ஒவ்வொன்றும் வன்மம், வஞ்சம், பழிவாங்கலை மட்டுமே பேசும் கதைகள். பல விதமான பேக்ரவுண்டுகளில்.
எல்லாமெ நடிப்பில், மேக்கிங்கில் க்ளாஸ் என்றே சொல்ல வேண்டும். சிறந்த வெளிநாட்டு படத்துக்கான
ஆஸ்கர் நாமினேஷனைப் பெற்ற படம். மிச்சம் இருக்கும் மூன்று கதைகள் உங்களின் ரசனைக்காக
விடப்பட்டிருக்கிறது. என் ஜாய்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Black
Mirror – White Bear
அம்னீஷியாவிலிருந்து எழுந்தது போல
ஒரு பெண் கண் முழிக்கிறாள். தான் எங்கேயிருக்கிறோம்?
என்று கூட புரியாமல் மலங்க மலங்க முழித்தபடி தேட, ஒரு குட்டிப் பெண்ணின் படம் ஒன்று
அங்கே இருக்க, அவள் தன் மகள் என்று முடிவு செய்து கொண்டு அவளை தேடுகிறாள். இன்னொரு
டேபிளின் மேல் அவள் ஒர் ஆணுடன் இருக்கும் போட்டோவை பார்க்கிறாள். அவளுக்கு ஏதுவுமே
நியாபகம் இல்லை. டிவியில் ஒரு சிம்பள் ஒன்று மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
தனக்கு உதவ யாராவது இருக்கிறார்களா? என்று
எட்டிப் பார்த்தால் எல்லா ஜன்னல்களிலிருந்தும் அவரவர் மொபைல்களில் இவளை ஷூட் செய்து
கொண்டிருகிறார்கள். ஒன்றும் புரியாமல் வெளியே வருகிறாள். அப்போது தெருக்களில் கூட்டமாய்
யாருமே அவளுக்கு உதவ வராமல், அவளை வீடியோ எடுக்கிறார்களே தவிர உதவிக்கு வரவேயில்லை.
ஒன்றும் புரியாமல் அவர்களிடமிருந்து தப்பிக்க முயலும் போது முகமுடி போட்ட வண்டியிலிருந்து
ஒரு கூட்டம் இவளை துரத்துகிறது. துப்பாக்கியால் சுட முயல்கிறது.
அப்போது ஒரு பெண் அவளை காப்பாற்றுகிறாள்.
டிவியிலும், இண்டர்நெட்டிலும் ஒரு விதமான சிம்பல் ஒளிபரப்பாகி, அதனால் பாதிக்கப்பட்டவர்கள்
எதையும், எல்லாவற்றையும் பார்வையாளர்களாக மட்டுமே மாற்றிவிட்டிருக்கிறது என்றும். வாயரிசம்
போன்ற ஒரு பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டது என்கிறாள். என்னைப் போல உன்னைப் போலவே
இன்னும் சிலர் இந்த சிக்னலினால் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும், அதில் சிலர் குழுவாய்
அமைத்துக் கொண்டு, இன்னொரு குழுவை கொல்ல முயல்வதாகவும், இன்னொரு கூட்டம் காட்டுத்தனமாய்
நடந்து கொள்வதாகவும் சொல்கிறாள். வைட் பியர் எனும் இடத்தில் உள்ள ட்ரான்ஸ்மிட்டரை அழித்துவிட்டால்
எல்லாருக்கும் இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை அடைந்துவிட முடியுமென்கிறாள். அந்த
ட்ரான்ஸ்மிட்டரை அழிக்க முனையும் பயணத்தின் போதான பிரச்சனைகள், துரோகங்கள் எல்லாம்
கடந்து கதை முடியுமிடம் செம்ம ட்விஸ்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் -அரும்பு
குறும்படம் -அரும்பு
கொஞ்சம் பழைய படம் தான் என்றாலும்
இன்றைய சாதனையாளர்கள் பலரின் முதல் முயற்சியை இதில் பார்க்க முடியும். சிறுவர் சீர்திருத்த
பள்ளியிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. தந்தையை இழந்ததினால் வழியேயில்லாமல் படிப்பை பாதியில்
நிறுத்தி குடும்பத்துக்காக வேலைக்கு போகும் சிறுவனை அரசாங்க சட்டம் வாழவிடாத கதை. இயக்குனர்
கேபிபி.நவீனின் இக்குறும்படம் இன்றைக்கும் பொருந்தி வரக்கூடியதுதான். https://www.youtube.com/watch?v=DCZYIhqoL7A&t=2s
Post a Comment
1 comment:
படங்களின் தொகுப்புக்கு நன்றி.
Post a Comment