Thottal Thodarum

Sep 28, 2017

கொத்து பரோட்டா 2.0-42

Okja
நெட்ப்ளிக்ஸின் திரைப்படம். 2017 கான்ஸ் பெஸ்டிவலில் திரையிடப்பட்ட போது மிக்ஸ்ட் ரெவ்யூவே கிடைத்தாலும், படம் முடிகையில் நான்கு நிமிட ஸ்டாண்டிங் ஓவேஷன் கிடைத்தது என்றார்கள். திரையரங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட படமல்ல என்றதும் அதற்கு ஒரு எதிர்ப்பும் எழுந்தது. சரி..இப்படியான சர்ச்சைகளை மீறி அப்படி என்ன இருக்கிறது இந்த ஓஜாவில் என்று பார்ப்போம். 2007 மி மிராண்டா கம்பெனியின் லூசி மிராண்டா தங்களுடய பேக்டரியில் ஒர் புதிய வகை காண்டாமிருக சைஸ் பன்னியை உருவாக்குகிறார். அதில் 26 குட்டிகளை உலகமெங்கும் ஒவ்வொருவருரிடம்  கொடுத்து வளர்க்கச் சொல்லுகிறார். பத்து வருடங்கள் கழித்து  அவைகளில் ஒன்றை சூப்பர் பிக்காக தெரிந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். பார்க்கும்போது அஹா.. என்பது போல தோன்றினாலும், அவர்களது உண்மையான எண்ணம் ஜெயண்ட் சைஸ் பன்னியின் மாமிசம்.  

பத்து வருடங்கள் கழித்து சவுத் கொரியாவில் உள்ள ஒர் மலை கிராமத்தில் மிஜா எனும் சிறுமியுடன் ஓஜா அறிமுகமாகிறது. கிட்டத்தட்ட குழந்தையோடு குழந்தையாய் விளையாடுகிறது. மலை உச்சியிலிருந்து கீழே விழ இருக்கும் மிஜாவை தன் உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு துணிந்து செயல்பட்டு காப்பாற்றுகிறது. மற்றபடி,பெரிய பிரச்சனையில்லாத பிராணியாய் வளர்கிறது. மிஜா ஓஜாவின் வாயில் உட்கார்ந்து கொண்டு பல்லெல்லாம் தேய்த்துவிடுகிறாள். ஒரு நாள் கம்பெனியிலிருந்து ஆள் வந்து இந்த ஒஜாவை சூப்பர் பிக்காய் தெரிந்தெடுத்து நியூயார்க்குக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள். ஓஜாவை பிரிய மனமில்லாத மிஜா ஓஜாவை தேடி சிட்டிக்கு வருகிறாள். அங்கே ஓஜா ஒரு வேனில் ஏற்றபடுவதைப் பார்த்துவிட்டு,  அவள் ஓஜாவை தப்பிக்க வைக்க முயல, அனிமல் ஃப்ரீடம் க்ரூப் ஒன்று ஓஜாவை காப்பாற்றுகிறது. ஓஜாவின் காதில் ஒரு வீடியோ கேமராவை வைத்துவிட்டு, அதை நியூயார் அனுப்பி வைத்தால் அங்கே இவைகளுக்கு நடக்கும் கொடுமைகளை படம் பிடித்து முக்கிய நாளில் மிராண்டா கம்பெனியை ஒடுக்குவோம் என்று முடிவு செய்கிறார்கள். மிராண்டா கம்பெனி ஓனர் லூசியோ கொரிய பெண்ணையும் கூட்டி வந்து மக்களிடம் காட்டினால் அவர்களின் சாசேஸுகளுக்கு மார்கெட்டிங்கும் ஆகும் என அவளையும் ஓஜாவோடு கூட்டி வருகிறார்கள். பின்பு என்ன ஆனது என்பதை நீங்கள்  உங்கள் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி நெட்பிளிக்ஸ் திரையில் கண்டு கொள்ளூங்கள்.

சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் பூங் ஜூன் ஹோவை நவீன கால ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என கட்டுரையெல்லாம் வந்ததை வைத்து பார்த்தால், இதன் பின்னணியில் பெரிய புரட்டு மார்கெட்டிங் இருக்கிறது என்பது புரிகிறது. இத்தனைக்கும் சாதாரண இயக்குனரில்லை. மெமரீஸ் ஆஃப் மர்டர் புகழ் பெற்றவர்தான் என்றாலும், ஆங்கிலம் இல்லாமல் அமெரிக்காவில் ஒன்றும் வேலைக்காகாது என்றது ப்ளைட்டில் மிஜா ஆங்கிலம் கற்கும் புத்தகத்தை படிப்பதும்., க்ளைமேக்ஸில் அத்தனை நேரம் இவர் பேசும் பேச்சுக்கு ட்ரான்லேட்டர் வைத்திருக்க, நம்மூர் மாஸ் ஹீரோ தடாலடியாய் கட கட ஆங்கிலம் பேசுவதை போல, மிஜா ஆங்கிலம் பேசும் காட்சி. இவர்கள் வெளியேறும் போது இன்னொரு சூப்பர் பிக் ஜோடி தங்களது குட்டியை வேலிக்கு வெளியே தள்ளிவிட, அதை காவலர்களிடமிருந்து மறைக்க, ஓஜா தன் வாயில் மறைத்து வைத்துக் கொள்ளூம் காட்சியை பார்த்த போது என்ன இதுக்கு?  படம் பார்த்து முடித்த போது எல்லோரும் எழுந்து நான்கு நிமிடம் கை தட்டினார்கள் என்றே புரியவில்லை. சிஜி, கேமரா வேலைகள், ஆங்காங்கே மிக இயல்பான காட்சிகள், மிருக வதை, ஆர்டிபீஷியல் ஜீன்கள் மூலம் உருவாகும் புதிய வகை ஜி.எம் மிருகங்கள் என்பதைத் போன்ற விஷயங்களைத் தவிர, நம் ராம.நாராயணனின் துர்காவுக்கும் இதற்கு பெரிய வித்யாசமில்லை கொஞ்சம் ஹை ஃபை துர்கா மட்டுமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜி.எஸ்.டியுடன் தமிழக கேளீக்கை வரியும் கட்ட வேண்டுமென்ற சட்டம் வந்த மாத்திரத்தில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் தியேட்டர்கள் தங்களது கதவை இழுத்து சாத்தியதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஷால் இதே போன்ற ஒரு  போராட்டத்திற்கு தேதி சொல்லி கூப்பிட்ட போது, இது சரியில்லை. அரசிடம் முதலில் முறையிட்டு விட்டு, பிறகு ஒரு தேதிக்கு பிறகு போராடுவதே சரியானது என்று பேசியவர்கள் தான் இந்த திடீர் முடிவு எடுத்து கடையை மூடியவர்கள். இதனால் பாதிக்கப்பட்டது தமிழக அரசிடம் காசு கொடுத்து வரி விலக்க்கு வாங்கியவர்கள் வேறு வழியேயில்லாமல் ஜி.எஸ்.டி அமலுக்கு முன்னால் ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலை. அன்றைய தேதி வரை தமிழக அரசும் கேளிக்கை வரி பற்றி மூச்சுவிடாமல் இருக்க, என்ன தான் நடக்குது நம்ம நாட்டில என்று குழம்பியபடித்தான்  திரைத்துறையினர் இருந்தார்கள். ஜி.எஸ்.டி 18-28 % தமிழக கேளிக்கை வரி 30 % இரண்டையும் சேர்த்தால் 58% சதவிகிதம் வருகிறது.  120 ரூபாய் டிக்கெட்டில் 58 ரூபாய் போனால் மீதி 61 ரூபாயைத்தான் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும்.  இது ஆகாது என்று முடிவெடுத்ததுதான் இந்த கதவடைப்பு.

தொடர் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் இதன் பின்னணியில் குழு ஈகோ தான் பெரிய அளவில் விளையாடியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இதே 30 ஆம் தேதி இவன் தந்திரன் போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளியாகாமல் பெரிய படங்கள் வெளியாகியிருந்தால் நிச்சயம் இந்த கதவடைப்பு உடனடியாய் நடந்தேறியிருக்காது. சென்ற முறை விஷால் அழைத்த போது பாகுபலி பெரிய அளவில் கல்லா கட்டிக் கொண்டிருந்த நேரம். அதை இழக்க யாருக்கும் விருப்பமில்லை.

ஆனால் இந்த முப்பதாம் தேதி வெளியான இவன் தந்திரன், அதாகப்பட்டது மகாஜனங்களே, யானும் தீயவன், இவன் யாரென்று தெரிகிறதா உட்பட கிட்டத்தட்ட எட்டு படங்கள் மூன்றே நாட்களில் தியேட்டர்கள் அடைப்பினால் நிறுத்தப்படுகிறது. இந்த படத் தயாரிப்பாளர்களின் நிலை தான் என்ன? முதல் மூன்று நாள் வசூலை எங்களது பங்கு எடுத்துக் கொள்ளாம்ல மொத்தமாய் அவர்களுக்கே கொடுத்துவிடுகிறோம் என்று தியேட்டர் காரர்கள் அறிவித்திருந்தாலும், முன்பே ஈகோ இல்லாமல் பேசி வைத்து செய்திருந்தால் இந்த குற்றச்சாட்டை ஏற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வரியை விலக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு டிக்கெட் விலையும் உயர்த்தி கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாய் வரி விலக்கு காரணமாய் எந்த விதமான வருமானமும் கொடுக்காத தமிழ் சினிமா ஜி.எஸ்.டியின் வரவால் கிட்டத்தட்ட 9 முதல் 15 % வரி கொடுக்கும் போது எந்த காரணத்துக்காக லோக்கல் கேளிக்கை வரியை போட வேண்டுமென்று புரியவில்லை. கேரளா, கர்நாடகா, வங்காளம் ஆகிய மாநிலங்கள் தங்களது வரியை விலக்கியும், ஜி.எஸ்.டியின் வரும் தங்களது மாநில பங்கையும் திரும்பி அளிக்க முடிவெடுட்திருக்கும் நேரத்தில் ஏன்  இந்த குழப்பம்?.  அதற்கு ஒர் காரணம் கூட உள்ளது.

நமது அரசின் தற்போதைய ஆணைப்படி, மல்ட்டிப்ளெக்ஸுகள் அதிகபட்சம் 120 ரூபாயும், குறைந்த பட்சம் 10 ரூபாய் டிக்கெடு தான் விற்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அதே சிங்கிள் ஸ்கிரின் தியேட்டர்கள், காம்ப்ளக்ஸ் தியேட்டர்களின் விலை அதற்கும் கீழே தான். ஆனால் தமிழகம் எங்கும் அரசு நிர்ணையித்த விலையில் யாரும் டிக்கெட் விற்பதில்லை. மற்ற மாவட்டங்களில் 35 அதிகபட்ச டிக்கெட் விலை என்பது எல்லாம் வெறும் வாய் அளவில் தான். குறைந்த பட்சம் 80- அதிக பட்சம் 150 வரை விற்றுக் கொண்டிருப்பது அரசுக்கும் தெரியும், மக்களுக்கு தெரியும். அப்படியிருக்க, தற்போதைய ஜிஎஸ்.டியினால் அரசு நிர்ணையித்த விலைக்குத்தான் வரியுடன் வசூலாய் காட்ட வேண்டியிருக்கும், மீறி வாங்கும் மிகுதி பணம் மத்திய அரசின் சட்டப்படி, மணி லாண்டரிங் வகையில் சார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். அது மட்டுமில்லாமல் தற்போதையை புதிய கேளிக்கை வரியையும் சேர்த்தால் இன்னும் குழப்படிதான். இதனால் தான் வரி விலக்கு மட்டுமில்லாமல், கூடவே விலையுர்வையும் சேர்த்து கேட்டுக் கொண்டிருப்பது. பதினைந்து வருடங்கள் அபீஷியலாய் ஏற்றப்படாத டிக்கெட் விலையை அஃபீஷியலாய் ஏற்றிக் கொண்டுத்துவிட்டால் அட்லீஸ்ட் இந்த தில்லாலங்கடி வேலையாவது குறையும். எது எப்படியோ,இந்திய அளவில் தியேட்டர்களுக்கு அதிக மக்கள் வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அப்படியான தங்க வாத்தை அதிகப்படியான பேராசை காரணமாய் டிக்கெட் விலையை அநியாயமாயுயர்த்தி அறுத்துவிடக்கூடாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Spyder - My Opinion


Jai Lava Kusa - My opinion


Sep 8, 2017

சாப்பாட்டுக்கடை - பழனியப்பா மெஸ் - புதுக்கோட்டை

ஏற்கனவே இங்கே ஒரு முறை என் தயாரிப்பு நிர்வாகியோடு சாப்பிட்டிருக்கிறேன். டிபிக்கல் செட்டிநாடு மெஸ். புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.  வெளியேயிருந்து பார்க்க, ஏதோ குட்டி ஓட்டல் போலிருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல, அகண்டு விரிந்து ஏசி ஹால், நான் ஏசி ஹால் என போய்க் கொண்டேயிருந்தது.

சமீபத்தில் நண்பர்களுடன் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு கிளம்பும் போது சொன்னேன். அட்டகாசமான மதிய சாப்பாடு என. அனைவரும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். என் மேல் உள்ள நம்பிக்கையில். நான் கடையின் மேல் உள்ள நம்பிக்கையில் கிளம்பினேன். வழக்கம் போல கூட்டமாய்த்தான் இருந்தது. எல்லாருக்கும் லஞ்சும், ஒருவர் மட்டும் பிரியாணி ஆர்டர் செய்தார். சைட் டிஷ் ட்ரே எடுத்து வந்தார்கள். கோலா உருண்டை, ப்ரான், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி, என வகையாய் ஆர்டர் செய்த மாத்திரத்தில் வந்தது. 

மட்டன் கோலா மட்டும் ஆறியிருக்க, மட்டனை விட பருப்பு அதிகம் இருந்த்தாய் பட்டது. நாட்டுக்கோழி ஆசம், மட்டன் சுக்காவும், ப்ரானும் ஸ்பெஷலாய் பாராட்டப் பட வேண்டிய ஐட்டங்கள். முறையே சிக்கன், மட்டன், மீன் குழம்பு வகைகள். வயிற்றை பதம் பார்க்காத காரம். திருப்தியான உணவு. புதுக்கோட்டை போகிறவர்கள் மதிய உணவுக்கு இருந்தால் மிஸ் செய்யாதீர்.

Sep 6, 2017

கொத்து பரோட்டா 2.0-41

கொத்து பரோட்டா -2.0 -42
கக்கூஸ்
தமிழகத்தில் பல இடங்களில் திரையிட போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்ட ஆவணப்படம். மேனுவல் ஸ்கேவஞ்சிங் எனப்படும் மனிதனால் மனித கழிவுகளை அகற்றுகிறவர்களைப் பற்றியும், துப்புறவு பணியார்களின் பிரச்சனை, வேலை, உடல் நலம், அவர்களது ஜாதிப் பின்னணி, ஏன் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே இப்பணிக்கு தெரிந்தெடுக்கப்படுகிறார்கள்? அரசாங்கம் இவர்களது நலனில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது? விஷ வாயு மரணங்கள், அவர்களுக்கான இழப்பீடு? என பல விஷயங்களைப் பற்றி  இந்த ஆவணப்படம் பேசுகிறது.

சென்னை வெள்ளத்தின் போது தெருவெங்கும் கழிவுகள் மலை போல குவிந்து கிடக்க, அதை சுத்தமாக்க, அசலூர், மாநிலங்களில் இருந்து எல்லாம் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கும் போது பயமாய்த்தான் இருக்கிறது. அடைப்பட்ட, ட்ரைனேஜ், செப்ட்டிக் டேங்குகள், கிடைத்த இடத்தில் எல்லாம் ஒண்ணுக்கடிக்கும் சிவிக் சென்ஸ் இல்லாத நம் மக்கள், நாப்கின்களாலும், ரோட்டில் தூக்கியெறியப்படும் ப்ளாஸ்டிக்கினாலும் அடைபட்ட கக்கூஸ் ட்ரைனேஜுகள், என பல இக்கட்டுகளுக்கு நம்முடைய மோசமான சிவிக் சென்ஸே காரணம் என்ற குற்றவுணர்சியை கிளப்பிவிடும் ஆவணப்படம்.

மருத்துவ உதவி, இறந்தால் கிடைக்கும் இழப்பீடு, அதற்கான போராட்டம், நம்ம டாய்லெட் என்ற பெயரில் கட்டப்பட்டு மலக்கிடங்காகியிருக்கும் அவலம், நிரந்தர வேலையில்லாத நிலை, மிகக் குறைவான சம்பளத்திற்கு ஆள் எடுக்கும் கொடுமை. வேலை பார்க்கும் பெண்களிடம் பாலியல் தொல்லை தரும் அதிகாரிகள், மேஸ்திரிகள். சிறப்பு உபகரணங்களை அளிக்காத மாநகராட்சி நிர்வாகம். இந்த வேலையை செய்யும் இவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை அவமரியாதைகள். இவ்வளவு கஷ்டமிருக்கிறது என்று தெரிந்தும் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதில், இழப்பீடு வாங்குவதே பெரிய போராட்டம் என்றால் அந்த இழப்பீட்டை வாங்கித் தருவதாய் சொல்லி, ஏமாற்றும் அவர்கள் ஜாதி லோக்கல் தலைவர்கள். வாங்கி கொடுத்த பணத்தில் ஒன்னரை லட்சம் கட்டிங் போட்ட தலைவர்கள். மேனுவல் ஸ்கேவஞ்சிங்க் செய்ய பணித்தவரை கைது செய்யும் சட்டமிருந்தும் எத்தனை பேரின் மேல் இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது? என பல கேள்விகளை நம்முன் எடுத்து வைத்திருக்கிறது.

நிச்சயம் காட்சிக்கு காட்சி ரசித்து பார்க்க வைக்கக்கூடிய விஷுவல் இல்லை. சாப்பிடும் போது பார்க்கத் தகுந்த விஷயமில்லை. வீஷுவலில் பார்த்தாலே மூக்கை பொற்றிக் கொள்ள வைக்கும் காட்சிகள் தான் அதிகமென்றாலும் இத்தனைக்கும் காரணம் நாம் என்று நினைக்கும் போது ஏதாவது செய்யணும் பாஸ் என்கிற எண்ணம் நம்முள் தோன்ற வைக்கும் காட்சிகள் தேவையென்றாலும் மறுபடியும் மறுபடியும் காட்டப்படும் ஒரே ஷாட்களின் தொகுப்பு ஆயாசப்படுத்துகிறது. பரிதாபம் ஏற்படுத்த வேண்டுமெனபடுவதாய் திரும்பத் திரும்ப உயர்ஜாதிகளையும் அதிகாரிகளையும், சமூகத்தையும் குற்றம் சாட்டும்  பேச்சுக்கள் ஒன்சைட்டாகவே இருப்பதாய் தோன்றுகிறது. இவர்களது கையுறை, பூட்ஸுகள், முகமுடிகள் ஆகியவற்றை தருவதேயில்லை, தந்தாய் சொல்லி போட்டோ எடுத்து விட்டு திரும்பவும் வாங்கிக் கொள்வார்கள் என்ற  குற்றசாட்டை சொல்லும் போதே, இன்னொரு பக்கம் எங்களுக்கு அளித்தார்கள் ஆனால் நாங்கள் பயன்படுத்துவதில்லை என்று சொல்லும் காட்சிகளும் இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் க்ளவுசைப் போட்டால் கையெல்லாம் நாற்றமடிக்கிறது என்பதுதான். அது மட்டுமில்லாமல் இவர்கள் பெரும்பாலும் குற்றம் சொல்லும் முக்கிய மேலதிகாரி இவர்களுடய மேஸ்திரி தான். அவர் இவர்களின் குழுவில் இருந்து பதவியுவர்வு பெற்றவர்தான். அவர்கள் நினைத்தால் இவர்களது பல அடிப்படை விஷயங்களை அதிகாரிகளிடம் பேசி, போராடி பெற்றுத்தர முடியும். ஏன் அதைப் பற்றி பேசவில்லை இந்த ஆவணப்படம்.

மனித கழிவுகளை அகற்ற மனிதனுக்கு பதிலாய் மிஷின்களை வாங்கிட வழி வகுத்தால் அதற்குரிய மோட்டரை வாங்க ஒரு லட்சம் ஆகும் என மிஷினை கிடப்பில் போட்டு விட்டு, மனிதனை அனுப்பும் அரசாங்க அவலம் ஒர் நிதர்சனமென்றால், அதே மனிதன் இறந்தால் பத்து லட்சம் தர தயாராக இருக்கிறது இந்த அரசாங்கம் எனும் முரண் கொடுமையாய் இருக்கிறது.

ஊரையே சுத்தம் செய்யும் இவர்களது இருப்பிடங்கள் மட்டும் ஏன் குப்பை மேடாய், சுத்தமில்லாமல் இருக்கிறது எனும் கேள்வி நியாயமானதே. அவர்களும் நமது குடிமக்கள் தானே? அவர்களுக்குரிய உரிமை இல்லையா? எனும் கோபமும் சரியே. இவர்களது சமூகத்திலிருந்து படித்து உயர்ந்தவர்கள் கூட இவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல, முயல்வதில்லை என்கிற விஷயம் கூட பேசப்பட்டிருக்கிறது.

என் நெருங்கிய நண்பர் ஒருவர் துப்புரவு பணியாளரின் மகன். அடிப்படை கல்வி பெற்றவர். அவர்களின் தொழில் எனப்படும் துப்புரவு பணியை செய்யவில்லை. என்னுடன் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டு முதலாளியாகி, அரசு பணி கிடைத்து செட்டிலாகிவிட்டார். அவருக்கு முன்று குழந்தைகள். அவருடய தம்பியும் அவருடன் வேலை பார்த்து வந்தார். பின்னாளில் கார்பரேஷன் துப்புரவு வேலை கிடைத்து நண்பரின் தொழிலில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார். துப்புரவு வேலை அதிகாலையில் முடித்துவிட்டால் மீண்டும் அடுத்த நாள் வரை வேலை செய்யத் தேவையில்லை. மேஸ்திரியை சரி கட்டிக் கொண்டால் போதும் என்பார். இப்படித்தான் பெரும்பாலான ஆட்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் கணக்கோடு போய் கொண்டிருக்கிறார்கள். மேனுவல் ஸ்கேவஞ்சிங் நிச்சயம் ஒழிக்கபட வேண்டிய, குறிப்பிட்ட ஜாதியினர்களுக்கானது எனும் வரையரையை மாற்றியமைக்க வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்றுதான். அதே நேரத்தில் மேற்சொன்ன விஷயங்களை இப்படம் பேசியிருந்தால், கல்வி அவர்களுக்கு கொடுக்கும் உரிமை, பலம் போன்றவற்றையும், அவர்களில் ஒருவர் இதிலிருந்து வெளியே வந்திருப்பது பற்றி சொல்லியிருந்தால், ஒருதலை பட்ச ஆவணப்படமாய் ஆகியிருக்காது என்பது என் எண்ணம். இந்த ஆவணப்படத்தில் ஒலி சம்பந்தமான டெக்னிக்கல் குறைகள் இருந்தாலும், நிதர்சனத்தை அழுத்தமாய் எடுத்துரைத்த இயக்குனர் திவ்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  இப்படத்தை பார்த்துவிட்டு, இவர்களது நல்லதுக்காக போராடுகிறோமோ இல்லையோ? இவர்களது பல பிரச்சனைகளுக்கான காரணம் நாம் தான் என்பதை உண்ர்ந்து செயல்பட ஆரம்பித்தாலே வெற்றிதான்.  https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
7 Boxes
உலகளவில் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட பராகுவேயன் படம்.  பராகுவேயின் தலைநகரான அசான்காய்ன் நகரில் உள்ள மார்கெட்டில் தள்ளுவண்டி தள்ளுகிறவன் விக்டர்.  அங்கேயுள்ள டிவி கடையில் படம் பார்த்து கனா காண்கிறவன். பதினேழு வயது இளைஞன். வேடிக்கைப் பார்த்ததில் அவனுக்கு கிடைக்க இருந்த வேலை வேறு ஒருவனுக்கு போகிறது. உடனடியாய் அடுத்த வேலையை தேடியலையும் போது ஒருவன் அழைக்கிறான். அவனிடம் நூறு டாலர் நோட்டின் பாதியை கொடுத்து, ஒரு பேக்கிரியின் பின்னால் இருக்கும் ஏழு பெட்டிகளை எடுத்துக் கொண்டு, எட்டு ப்ளாக்குகள் தள்ளியிருக்கும் இடத்தில் சேர்த்துவிட்டால் மீதி பாதி டாலர் நோட்டை பெற்றுக் கொள்ளலாம் என்கிறான். நூறு டாலர் என்பது பெரும் பணம். சரி என்று ஒத்துக் கொள்கிறான். உடன் அவனை துரத்தும் காதல் தோழியுடன்.  நான்கைந்து ப்ளாக்குள் போய்க் கொண்டிருக்கும் போது அதில் ஒரு பெட்டியை ஒருவன் திருடிக் கொண்டு ஓடுகிறான்.

அதே நேரத்தில் இந்த வேலையை வழக்கமாய் செய்கிறவன் குழந்தையின் உடல் நிலை காரணமாய் மருத்துவமனைக்கு அலைந்துவிட்டு, லேட்டாய் வந்தால் வேலை வாய்ப்பு போய்விட, விக்டரிடமிருந்து அதை கைப்பற்ற வெறி கொண்டு அலைகிறான். ஒரு கட்டத்தில் அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் போது ஒரு பெண்ணின் உடலை துண்டு துண்டாக்கி பார்சல் செய்திருக்க, தான் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்கிறான் விக்டர்.


தொலைந்த பார்சலை தேட, அதை அனுப்பிய டீமே ஒரு பக்கம் துறத்துகிறது. இன்னொரு பக்கம் வேலை வாய்ப்பை இழந்தவன். இன்னொரு புறம் ராணுவ போலீஸ். இதன் நடுவில் நிறைமாத கர்பிணிப் பெண். அவளின் பிரசவம். கொரியனுக்கும் லோக்கல் பெண்ணுக்குமான சின்னக் காதல். இதற்கெல்லாம் காரணமான வில்லன். இவையனைத்து ஒரு நாள் இரவில் நடந்து முடிந்துவிடுகிறது. பரபர க்ளைமேக்ஸ், பின்னணியிசை, மேக்கிங் எல்லாம் பெரிய பலம் இப்படத்திற்கு. 2005ல் நடைபெறும் இக்கதையில் செல்போனின் ஆதிக்கம். அதன் மூலமாய் நடக்கும் பல நிகழ்வுகள் சுவாரஸ்யம்.

Sep 1, 2017

கொத்து பரோட்டா 2.0-40

கொத்து பரோட்டா 2.0-41
As Iam Suffering From காதல்
வழக்கமான டிவி சீரியலுக்கு இல்லாத சுதந்திரம், இண்டர்நெட் ஒரிஜினல் சீரிஸுக்கு உண்டு. முக்கியமாய் தடாலடி கருத்து கொண்ட கதைகளை சென்சாரில்லாமல்   சொல்ல முடிவது . டிவி சீரியல் ரேஞ்சுக்கு மொக்கையாக இல்லாமல், அமெரிக்க சிரீஸ் அளவுக்கு சூப்பராகவும் இல்லாமல் ஹிந்தியில் நல்ல தரமான, சீரீஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்போது தமிழில் இயக்குனர் பாலாஜி மோகனிடமிருந்து ஹாட்ஸ்டாரில். அதுவும் பிங்கி வாட்சிங் செய்ய ஏதுவாய் ஒரு சீசன் பூராவையும் ஒட்டுக்காய் போட்டிருக்கிறார்கள்.
கல்யாணம் ஆகி ஒருத்தரை ஒருத்தர் வச்சி செய்து கொண்டிருக்கும் பாலாஜி மோகன், தன்யா தம்பதி, லிவிங் டூ கெதரில் இருக்கும் சனானத்,  சஞ்சனா  ஜோடி,  எட்டு வருடங்கள் காதலித்து தங்கள் திருமணத்தை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நட்சத்திரா நாகேஷ், அபிஷேக் ஜோடி. டைவர்ஸ் ஆகி, வாரத்தில் இரண்டு நாட்கள் தன் ஸ்வீட் குழந்தைக்காக வாழும் டைவர்ஸி, ஆன்லைன் பிலிம் ரிவ்வீயூவர் சுந்தர் ராமு. இவர்களுக்குள் நடக்கும் கதை தான். கல்யாணத்துக்கு முன் பேச்சுலர் பார்ட்டியில் பேங்காக்கில், போதையில் நீவாசூயிடம், “Cock” யூஸ் செய்ததினால் தனக்கு துரோகம் செய்துவிட்டதாய் உணர்ந்த மனைவி முதல் ராத்திரியில் குடித்துவிட்டு, வேறொருவனுடன் மேட்டர் செய்துவிட, காதலித்து மணந்த இருவரும் எதிர் எதிர் துவங்களாய் வீட்டிற்குள் இருந்தபடியே இந்தியா பாகிஸ்தான் போர் நடந்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய ராத்திரியில் அவளுடன் இருந்தவன் யார்? என்பது கதையில் தெரிய வரும் போது செம்ம இண்டர்ஸ்டிங் ப்ளாட்டாய் மாறுகிறது.

அதிக பட்ச நுனி நாக்கு  ஆங்கில வசனங்கள், ஆங்கிலம், தமிழ் கெட்ட வார்த்தைகள், செக்ஸ் பற்றிய இயல்பான பேச்சுக்கிடையே, காதல், துரோகம் உறவுகள், நெகிழ்ச்சி என செம்ம கலாய் வசனங்கள். தன்யா, பாலாஜி மோகன், ஜார்ஜ், ஆகியோரின் மிக இயல்பான நடிப்பு. பட்ஜெட்டின் சிக்கனத்தை நடிகர்கள், காஸ்ட்யூம், விஷுவல்கள் மூலம் ரிச்சாய் ஆக்கியிருப்பது சாமர்த்தியம். பல இடங்களில் ஆர்.ஜே லவ் குருவின் கேள்விகளுக்கான  பதிலாய் கேமராவைப் பார்த்து பேசியபடி கதை நகர்த்தும் விதம் சுவாரஸ்யம்.

மொத்தமாய் பார்க்கும் போது ஆங்காங்கே 20 சொச்ச நிமிட எபிசோடில் ரோபோ சங்கர் வரும் காட்சிகள் எல்லாம் தொங்கினாலும், பாலாஜி மோகனின் ரைட்டிங் நிச்சயம் பெரிய ப்ள்ஸ். நிறைய இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. என்னங்கடா.. தமிழ் நாட்டில் பொண்ணுங்க, ஹிந்தி சீரியல் கணக்கா தண்ணியடிப்பது, பார்ட்டி, செக்ஸ் என காட்டி  கலாச்சார சீரழிவை செய்கிறார்களே?  என்றெல்லாம் குதிக்கும் ஆளாக இருந்தால் தயவு செய்து ஒரு பெண்ணுக்கு மூணு புருஷன் கதை வரும் டிவி சிரியலை மட்டும் பார்க்கவும். மற்றவர்கள் என்ஜாய். வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
13 Reasons why?
ஹென்னா பேக்கர். 17 வயது அழகி, கொஞ்சம் பூசினார்ப் போன்ற உடல் வாகு. இண்ட்ரோவர்ட். உயர்நிலை பள்ளி மாணவி. அவளைப் பற்றிய கதை தான் இந்த சீரிஸ்.  ஆனால் அவள் உயிரோடு இல்லை. சக மாணவன், உள்ளுக்குள் ஹேன்னா பேக்கரை காதலிப்பவன்.  இன்னொரு இண்ட்ரோவர்ட். க்ளே ஜென்சன். ஹேன்னா இறந்து இரண்டு வாரங்களுக்கு பின் அவனுக்கு ஒர் பார்சல் வருகிறது. அதில்  7 ஆடியோ கேசட்டுகள் இருக்க, அதில் ஹேன்னா தான் ஏன் தற்கொலை முடிவுக்கு வந்தேன் என்பதற்கான 13 காரணங்களை பேசி அனுப்பியிருக்கிறாள். ஒவ்வொரு பக்கமாய் கேட்கக் கேட்க சம்பந்தப்பட்ட்வர்களிடம் க்ளே ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறான். அதற்கு அவர்கள் சொல்லும் பதில் “ஹேன்னா ஒரு பொய்யி. அவள் சொல்வதை நம்பாதே. அது மட்டுமில்லாமல் உன் சைட் கேசட்டை கேட்டு விட்டு வா” என்கிறார்கள். அவள் அனுப்பிய கேசட்டோடு கேட்டு விட்டு யாரிடம் கொடுக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கதை ஆரம்பித்த விதத்திலாகட்டும், அதை அன்போல்ட் செய்த விதமாகட்டும் க்ளாஸ் ரைட்டிங் அண்ட் மேக்கிங். இன்றைய அமெரிக்க கலாச்சாரம். புல்லியிங், செக்ஸ், இண்டெர்நெட், ஸ்லட் பட்டம், ஹார்ட் டிரிங்க்ஸ், பீர், உறவுகளின் முக்யத்துவம், காதல், இன்பாச்சுவேஷன், சுதந்திரம், ரேப், என  சகலத்தையும் மிக அழகாய் பேசுகிறது இந்த சீரிஸ்.  எபிசோடின் கடைசி காட்சிகள் எல்லாம் கொஞ்சம் நம் மனதை பாதிக்கவே செய்கிறது. கதையில் வரும் மாந்தர்களின் குற்றவுணர்ச்சி உறுத்துவதைப் போல நம்முள்ளும் உறுத்த ஆரம்பிக்கிறது.  

2007ல் ஜே ஆஷர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த சீரீஸ்.  கிரிக்டிக்கலாய் பல பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும், க்ளைமேக்ஸில் காட்டப்பட்ட தற்கொலை காட்சியை பற்றிய விவாதங்களை பெருமளவில் எழுப்பியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இளகிய மனமிருப்பவர்கள் நிச்சயம் பார்த்தால் நான்கு நாளைக்கு தூங்க மாட்டார்கள். அதுவும் அந்த குழந்தைத்தனமான கேத்தரின் லாங் போர்ட்டின்  முகமும், பாத்டப் நிறைய தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் உட்கார்ந்து கொண்டு, அவள் கைகளை அறுத்துக் கொள்ளும் காட்சி..  அய்யோ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@