கொத்து பரோட்டா 2.0-44
கொத்து பரோட்டா 2.0-45 மூன்றே வாரத்தில் தமிழக சேட்டிலைட் சேனல்களின் ஜிஆர்.பியில் இரண்டாம் இடம் பிக் பாஸினால். ஊரே கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியாவுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு. இன்னொரு புறம், ஊரே நம்ம ஊரு தமிழச்சி என்று கொண்டாடிய ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்தே அவரை பிடிக்காமல் போனவர்கள் அதிகம். அது போல போன வாரம் கோபிநாத்தின் விவாத நிகழ்ச்சியில் கல்யாணத்திற்கு முன்னான காதலை சொல்வது நல்லதா இல்லை சொல்லாமல் விடுவது நல்லதா? என்று பரபரப்பாக போனது. நான் சொல்லிடுவேன்,சொல்லியிருக்கேன் என்று சொன்னவர்கள் கூட சொன்னது தப்போ என்று யோசிக்குமளவுக்கு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கையில், நான் எழுதிய துரோகம் எனும் சிறுகதை நியாபகத்திற்கு வந்தது. துரோகம் மிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “ எஃப் ” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு , சட்டென அடுத்த சேனலை மாற்ற … நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு , ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள். ” நடந்த...