கொத்து பரோட்டா 2.0-44
Dialouge in the dark
“நீங்கள்
அடையப் போவது ஒரு வித்யாசமனா அனுபவம். உள்ளே சென்ற பின் திரும்பி வர நினைத்தால் உங்கள்
பணம் திரும்பத் தர இயலாது. அதனால் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கே செலவிடும்
நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையின் திரில்லிங்கான நிமிடங்கள்” என்பது போன்ற வாசகங்களைப்
படித்துவிட்டும் தயாராய் வாசலின் முன் குடும்பத்துடன் நின்றோம். வெளிச்ச மண்டலத்தின்
அடுத்த பக்கம். சுவர் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஸ்லைடிங் டோர்
திறந்த மாத்திரத்தில் உள்ளிருந்து அழகிய பெண் குரல் கொஞ்சம் ஆளுமையாய். “சுதிர் யாரையும்
உள்ளே அனுப்பாதே. ஆட்கள் வருகிறார்கள்” என்றாள். நான்கைந்து பேர் வெளிவந்த மாத்திரத்தில்
அழைத்து வந்தவரின் கை பிடித்து நன்றி சொன்னதில் ஆழ்ந்த அன்பு இருந்தது போல தெரிந்தது.
அவர்கள் போன மாத்திரத்தில் அதே பெண் குரல் உங்கள் பெயர்களை தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். சொன்னோம். அடுத்த கணம் வெளிக்கதவு சாத்தப்பட்டது.
சட்டென்று கருகும்மென்ற இருட்டு. லேசாய் வயிற்றை புரட்டியது. ”ஐயம் பீலிம் அன் கன்பர்டபிள்
திரும்ப போயிரலாமா?” என்றேன். மனைவியும், மகன்களும் சிரித்தபடி “நோ” என்று சொன்னது
சுற்றிலும் கேட்டது.
”சங்கர்
சார்.. எல்லோரும் உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களை பிடித்துக் கொள்ளுங்கள். நான்
உங்களை வழி நடத்துகிறேன் என்று அவரின் கைகளை கொடுத்தார்.
உங்க
பேர்?
“சரிதா”
கைகளை
பற்றிக் கொண்டேன். பெண்ணின் கை. பிடித்த விதத்தில் அதுரமாய் இருந்தது.
”உங்களின்
ஒரு கையை வலது பக்கமாய் வைத்தால் சுவர் இருக்கும். இங்கே எங்கேயும் படிகள் கிடையாது.
ப்ளாட் தரை தான். வலது பக்க சுவரை பாலோ செய்து வந்தால் இடது பக்கம் ஒரு திருப்பம் வரும்
அப்போது உங்களது வலது கைகளை உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களில் மாற்றிக் கொண்டு,
இடது கையை இடது பக்கம் இருக்குற சுவரை பாலோ செய்யுங்கள். உங்கள் இடத்தை சுலபமாய் அடைய
முடியும்.” என்றாள்
இருட்டு
பழக கொஞ்சம் நேரம் ஆகுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். பழக ஆரம்பிக்கவில்லை போல. நிறுத்தி
நிதானமாய் நடக்க ஆரம்பித்தோம்.
“உங்களது
இருக்கை வந்துவிட்டது சங்கர் சார். உங்களது வலது பக்கம் ஒரு சேர் உள்ளது இல்லையா? என்று
என் கையை எடுத்து அதன் மேல் வைத்து, “அதை பாலோசெய்தால் மூன்றாவது சேரில் நீங்கள் உட்கார்ந்து
கொள்ளலாம். உங்களுடன் வந்தவர்கள் அதை பாலோ செய்தால் அவரவர்களின் இடத்தில் உட்கார முடியும்
என்றாள்.
தடவித்
தடவி ,என் சேரைப் பார்த்து உட்கார்ந்தபடி, பிடித்திருந்த என் மகனின் கையை அழுத்தி,
“டேய் அம்மாவோட கைய சரியா பிடிச்சிக்க.இதோ பார் என் பக்கத்து சேர். அதுல உக்காரு..
ம்மா.. நீயும் இவன் கைய சரியா பிடிச்சிக்க உட்கார்ந்த உடனே சொல்லு.. “ என்றேன் . என்
குரலில் பதட்டமிருந்தது. ஏன் இன்னமும் இருட்டு எனக்கு பழகவில்லை? கண்ணாடி போட்டுக்
கொண்டு இருட்டில் பார்க்க முடியாதவன் நான் ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
”உக்காந்துட்டீங்கன்னா..
உங்களுக்கு முன்னாடி ஒரு டேபிள் இருக்கு. அதுல ஒரு ப்ளேட் இருக்கா?” என்றாள் சரிதா.
தடவி
பார்த்தார்ல் டேபிளிலும் அதன் மேல் ஒரு ட்ரேயும் இருக்க, “யெஸ்” என்றோம்.
உங்களது
டோக்கனை கொடுக்கள் என்றாள்.
பூ
போன்ற டோக்கனை எடுத்து கொடுத்தோம்
“ஓகே
வெஜ். கொஞ்சம் இருங்கள்” என்று அவள் நகர, அவள் நகரும் திசையை லேசாய் உணர முடிந்தது.
இருட்டு இன்னும் பழகவில்லை.
‘இங்க
வேற யாராச்சும் இருப்பாங்க இல்லை?”
“டோண்ட்
வொரி சார்.. என்னை கூப்பிடுங்கள் அல்லது உங்களுக்கு உதவ சலீம் இங்கிருக்கிறான். “ என்றதும்
‘ஆமாம் சார் என்ற குரல் பின்பக்கத்திலிருந்து வந்தது. கைகழுவ சானிடைசர் கொடுக்கபடும்
போதே “ உங்கள் முன் ட்ரேயில் மூன்றடுக்கு கேரியர் ஒன்று உள்ள்து. அதில் உங்கள் உணவு
இருக்கிறது. எப்படி இதை அன்பேக் செய்கிறீர்களோ அது போலவே நீங்கள் சாப்பிட்டபின் பேக்
செய்து வைக்க வேண்டும்.”
வெளிச்சத்திலேயே
கீழே சிந்தி சாப்பிடுகிறவன் இருட்டில் எப்படி? என்ற யோசனையை மீறி சின்ன சவால் உள்ளுக்குள்
எட்டிப் பார்க்க, ஒவ்வொன்றாய் அன்பாக் செய்ய ஆரம்பித்தோம். முதல் அடுக்கில் பன்னீரும்,
காலிப்ளவர் ட்ரை சப்ஜி, நான்கு சப்பாத்திகள் ஒரு பேப்பரில் மடித்து வைத்திருக்க, அடுத்த
அடுக்கில் ஏதோ ஒரு புலவ், ஒரு இனிக்கும் சப்ஜி குருமா இருந்தது. அமைதியாய் சாப்பிட்டோம்.
இன்னமும் இருட்டு பழகவேயில்லை. சமீபத்தில் இவ்வளவு அமைதியாய் பேசாமல் சாப்பிட்டதேயில்லை.
அவ்வப்போது பக்கதில் இருக்கும் மகன்,மனைவியின் கையை தேடிப் பிடித்து அழுத்திக் கொண்டேன்.
எனக்கென்னவோ அந்த அழுத்தில் என்னுள் இருந்த பதட்டம் குறைந்து, அன்பை வெளிப்படுத்த முயன்றதாய்
தோன்றியது. சாப்பிட்டு முடித்தபின் அவர்கள்
சொன்ன படி மூன்றடுக்கை சரியாய் பிக்ஸ் செய்துவிட்டோம். கை துடைத்து, நீங்கள் கிளம்பலாம் என்றால் சொல்லுங்கள் உங்கள் அழைத்துச் செல்கிறேன்
என்றாள் சரிதா. தயார் என்றோம். சலீம் இவர்களை அழைத்துப் போங்கள் என்றதும் வந்த வழி
நியாபகம் வந்தது.
முதலில்
வலது பக்கம் நுழைந்து சிறிது நேரத்தில் இடது பக்கமாய் திரும்பி, நேரே போய் உட்கார்ந்தோம்.
ஸோ.. இப்போது நேரே போய், வலது பக்கமாய் பாலோ
செய்து, இடது பக்கம் திரும்பிப், போக வேண்டும் என்ற சலீம் என் கையை பிடித்து அழைத்துச்
செல்லும் முன்பே எனக்கு ரூட் புரிந்தது. இருட்டு பழகியிருந்தது.
வெளிச்சம்
வரும் கதவு அருகே இருந்த எலக்ட்ரானிக் உபகரணத்தில் லேசர் வெளிச்சம் வெகு நேரத்திற்கு
பிறகு லேசாய் கண்களுக்கு தெரிய கூசியது. ”உங்களது உணவும், இந்த புதிய அனுபவமும் உங்களுடய
இந்த மாலை பொழுதை இனிமையாக ஆக்கியிருக்கும் என்று நம்புகிறேன். இங்கு உங்களுக்கு உதவிய
சலீம் சரிதா ஆகிய நாங்கள் கண் பார்வையற்றவர்கள். உங்களுக்கு எங்களது உணவும், சர்வீஸும்
பிடித்திருந்தது என்றால் அதை உங்களது பீட் பேக் பகுதியில் தெரியபடுத்தினால் தன்யன்
ஆவேன் என்று கதவை திறந்தான். பளீரென்ற ப்ளோரசண்ட் வெள்ள வெளிச்சம் கண்களை தாக்க, சலீம்
குள்ளமாய் நின்றிருந்தான். அவனுக்கு வெளிச்சம் தாக்கவேயில்லை. அவனின் கையை பிடித்து
“ நன்றி சலீம். நிச்சயம் எழுதுகிறேன்” என்று நாங்கள் சொன்ன விதத்தில் நெகிழ்ந்த அன்பிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Prison Break Season 1
2005ல் அமெரிக்க சீரியல் உலகை ஒரு கலக்கு கலக்கியது
இந்த பிரசன் ப்ரேக். இந்த சீரிஸின் பாதிப்பில் ஏகப்பட்ட தமிழ், மற்றும் இந்திய மொழிப்
படங்கள் நிறைய வந்திருந்தாலும், கத்தியில் ஜெயிலிருந்து தப்பிக்கும் ப்ளான் காட்சி
அப்பட்டம். சரி விடுங்கள். கதைக்கு வருவோம். லிங்கன் பரோஸ் ஒரு கொலை குற்றவாளி. அமெரிக்க
வைஸ் ப்ரெசிடெண்டின் சகோதரனை கொலை செய்ததற்காக, ஃபாக்ஸ் ரிவர் ஜெயிலில் மரண தண்டனைக்காக
காத்திருப்பவன். மைக்கேல் ஸ்கோபீல்ட், அவனுடய தம்பி. புத்திசாலி. அதிகம் பேசாதவன்.
ஸ்ட்ரக்சுரல் இன் ஜினியர். செய்யாத கொலைக்காக ஜெயிலில் அடை பட்டிருக்கும் தன் சகோதரனை
அங்கிருந்து தப்பிக்க வைக்க ஒர் குற்றத்தை செய்து ஜெயிலினுள் நுழைகிறான். ஸ்ட்ரக்சுரல்
இன் ஜினியரான அவன் அந்த ஜெயிலின் வரை படத்தை தன் உடல் முழுவதும் மேப் போல பச்சை குத்திக்
கொண்டு, அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய அத்துனை காரியத்துக்கான குறிப்பும் அவன் உடலில்.
ஆஸ் யூஸ்வல் தப்பிக்க நினைக்கும் போது நடக்கும் இடர்கள், தேவையில்லாத நபர்களை உடன்
அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். கடைசி நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டு,
நம்பிக்கை, துரோகம், கொலை, டாக்டர் சாராவுடனான காதல். அந்தக் காதலினால் ஏற்படும் தயக்கம்,
என எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டிய பக்கா ஆக்ஷன் சீரியல்.
ஆரம்பித்த
எபிசோடிலிருந்து இருபது சொச்ச மொத்த எபிசோடும் அட்லிரினை பம்ப் செய்யாமல் விடாது. அதிலும்
கடைசி இரண்டு எபிசோடுகள். பிபியின் உச்சம். இந்த சீரியலின் சக்ஸஸ் கேரக்டரைசேஷன்கள்
தான். எதற்கு அசராத மைக்கேல், சட்சட்டென உணர்ச்சி வசப்படும் லிங்கன், நேர்மையான சிறை
அதிகாரி, கொஞ்சம் அப்படி இப்படியாய் இருந்தாலும் அம்மா கோண்டு சிறை ஆபீசர் அமைதியான
சிறை டாக்டர் சாரா, அடாவடி டி.பேக், அதிகாரிகளின் சூழ்ச்சியால் சிறைக்கு வந்து மனைவி
குழந்தைக்காக தப்ப நினைக்கும் ராணுவ அதிகாரி. முன்னால் டான், என எல்லாருமே செம்ம கேரக்டர்கள்.
முக்கியமாய் மைக்கேல் ஸ்கோபீல்டாய் நடித்திருக்கும் வெண்ட் வொர்த் மில்லரின் நடிப்பு
அட்டகாசம். இவரின் அத்துனை மேனரிசங்களையும் அப்படியே நம்மூர் மகேஷ் பாபுவிடம் பார்க்கலாம்.
ஆங்காங்கே கொஞ்சம் நம்ப முடியாத உட்டாலக்கடி காட்சிகள் தடாலென்று தூக்கியடித்தாலும்.
செம்ம.. சீரிஸ்.. அதிலும் முதல் பாகம் முடிக்குமிடம் நிச்சயம் அடுத்த பாகத்தை தேடச்
செய்யும்.
Post a Comment
1 comment:
Prison Break -ன் அனைத்து எபிசோடுகளின் டொரண்ட் கிடைத்தது. சப்-டைட்டில்கள் தனியே கிடைத்தது. பார்க்க ஆரம்பித்துள்ளேன். சீசன் 1 - 7.51 ஜி.பி ஆகிறது.
Post a Comment