கொத்து பரோட்டா 2.0-48
Trapped நூரிக்கு மூன்று வாரங்களில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் செளரியாவுக்கும், நூரிக்குமிடையே காதல். பாய்ஸ் ஆஸ்டலில் வசிக்கும் செளரியாவிடம் என் வீட்டை விட்டு வந்தால் நாம் எங்கு தங்குவது. பாஸ் ஆஸ்டலிலா?” என்று கேட்க, உடனடியாய் வீடு பார்க்கிறேன் என்று பார்க்கிறான். ரெண்டு நாளில் நூரியின் திருமணம் இருக்க, மும்பையின் அவுட்ஸ்கர்ட்டில் காலியாய் உள்ள முப்பது மாடி குடியிருப்பில் ஒரு வீடு கிடைக்கிறது.. அந்த பில்டிங் கோர்ட் கேஸில் இருப்பதால் இன்னும் யாருக்கும் குடி புக அனுமதியில்லை. ஒரு செவிட்டு வாட்ச்மேனைத் தவிர வேறொருவரும் இல்லாத அந்த ப்ளாட்டில் ராவோடு ராவாக அந்த வீட்டில் அவன் குடி புகுகிறான். அடுத்தநாள் காலையில் அவசரத்தில் கிளம்பும் போது போனை அறையில் விட்டு வர, ஆட்டோமேடிக் டோரில் சாவியை வைத்துவிட்டு எடுக்கப் போகிறான். காற்றில் கதவு மூடிக் கொள்ள அந்த வீட்டினுள் மாட்டிக் கொள்கிறான். கரண்ட், தண்ணீர் என எதுவுமில்லாத நிலை. மொபைலில் பேட்டரி இல்லை. இப்படி பல இல்லை. கிட்டத்தட்ட என்பது சதவிகித படம் ஒர் அறையில் மட்டுமே சுழல்கிறது. செளரியாவாக நடித்த ராஜ்குமார் ராவின் நடிப்பு அட்டகாசம். ஆர...