ஓ.டி.டி எனும் மாயவன்.
ஓடிடி
எனும் வார்த்தையை பல வருடங்களுக்கு முன் டெக்னாலஜி ஆட்கள் பயன்படுத்தியதை பார்த்திருப்பீர்கள்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸுகள் மூலம் ஒளிபரப்ப ஆரம்பித்த போது அந்த
டெக்னாலஜியை ஓடிடி சாப்பிட்டுவிடும் என்று சொன்னவர்கள் உண்டு. ஓ.டி.டி என்றால் என்ன? ஓவர் த டாப் டெக்னாலஜி. கேபிள்,
டிவி, டிஷ் போன்றவற்றின் மூலம் மட்டுமல்லாமல் இணையம் மூலம் ஒளீபரப்பாகும் முறைதான். இதைப் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நண்பர்களிடம்
நன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ ஓ இண்டர்நெட் மூலமாகவா.. நம்ம ஊரில் இண்டர் நெட்
ஸ்பீட் வந்து, அது ஸ்ட்ரீம் ஆகி… நடக்கிற கதையா சார்? இங்க 2ஜியே தத்தளிக்குது என்றார்கள்.
இல்லை நண்பர்களே இது நிச்சயம் மாறும், அதற்கான காலத்திற்கு நாம் தயாராகிறோமோ இல்லையோ
டெக்னாலஜி தயாராக்கிவிடும் என்றேன். அது தான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது.
ஜியோ
எனும் இண்டர்நெட் சுதந்திரம் கிடைக்க ஆரம்பத்திலிருந்து, வாட்ஸப்புக்கு டேட்டா பத்தாமல்
இருந்தவனெல்லாம் இருபத்திநாலும் மணி நேரம் ஆன்லைனில் இருக்க ஆரம்பித்திருக்க, போட்டிக்
கம்பெனிகளும் வேறு வழியேயில்லாமல் டேட்டாக்களை சல்லீசாக அள்ளிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்கு பின்னால் இருக்கும் வியாபார அரசியலைப் பற்றி பிறகு பேசுவோம். இந்த ஓடிடி ப்ளாட்பார்ம்
எத்தனை இளைஞர்களுக்கு, கலைஞர்களுக்கு, சினிமா வியாபாரத்துக்கு தன் அகண்ட அலைவரிசை கைகளை
விரித்து கதவுகளை திறந்துவிடப் போகிறது என்பதை இப்போது பார்போம்.
ஓ.டி.டி
ப்ளாட்பார்ம் என்றால் என்ன?. இணையம் மூலம் கண்டெண்டுகளை மொபைலில் ஆப்கள் மூலமாகவும்,
ஸ்மார்ட் டிவிக்கள் , ஆண்ட்ராய்ட் டிவிக்கள் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் சேனல்கள்.
இருக்குற சேனல்களையே பார்க்குறதுக்கு டைமில்லை இதுல மொபைலில் பார்க்குறதா? டீவியில
வரும் 400 சொச்ச சேனல்களை விடவா நல்ல நிகழ்ச்சிகள்
வந்துவிட முடியும? அதெல்லாம் பணக்காரங்க வச்சிருக்கிற டிவி. தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள்
வீட்டில் கலைஞர் கொடுத்த இலவச டிவி தான் இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் இன்னைக்கு
சாத்தியமேயில்லை. என்று பல கருத்துக்கள் உலாவரத்தான் செய்கிறது.
ஆனால்
உண்மையில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் டிஜிட்டல் ரைட்ஸ் எனும்
உரிமை, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு டிவி ரைட்ஸ் அளவிற்கு தனியே
விற்பனையாக ஆரம்பித்திருக்கிறது. அதை வாங்குதற்கு போட்டி வேறு. முன்பெல்லாம் டிவி ஷோரூமின்
வாசலில் கூட்டமாய் மக்கள் கிரிக்கெட் மேட் பார்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்றைக்கும்
அந்த கும்பல் பாதியாகிவிட்டது. ஏனென்றால் இளைஞர்கள் பல பேர் மொபைலில் சில நிமிட பின்தங்கிய
ஒளிபரப்பை இலவசமாய் ஹெச்.டி.தரத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மொபைலில்
படம் பார்பது எல்லாம் சரிப்பட்டு வராது சின்ன
ஸ்க்ரீனில் படம் பார்பது என்ன விதமான அனுபவத்தை கொடுத்துவிடக்கூடும். நல்ல டிவியிலேயே
அது கிடைப்பதில்லை அப்படியிக்க மொபைலில் நோ வே.. என்பார்கள். இன்றைக்கு தமிழில் பிரபலமாகிக்
கொண்டிருக்கிற வெப் சீரிஸ்களை பஸ், ரயில் என ட்ராவலில் பார்த்தவர்கள் தான் அதிகம்.
ஸ்மைல் சேட்டை முதல், புதிது புதியாய் பிரபலமாகிக் கொண்டிருக்கும் யூட்யூப் பிரபலங்களின்
மேடையே ரயில், பஸ், மற்றும் கம்ப்யூட்டர்கள்
தான் என்று சொன்னால் இப்போது ஒத்துக் கொள்வீர்கள். ஏனென்றால் இவர்களை நீங்கள்
அறிந்தது இணையம் மூலமாய்த்தான், சமீபத்தில் வெளியான மீசையை முறுக்கு திரைப்படத்தில்
பல யூட்யூப் பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இவர்கள் திரையில் தெரியும் காட்சிகளில்
எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் படத்திற்கு வந்த எஃபெக்ட்டை மக்கள் கொடுக்க, இணையத்தில் அவ்வளவாக
நடமாடாதவர்களுக்கு யார் இவரு? எதுக்கு இப்படி எல்லா பசங்களும் கத்துறானுவ?. ஒரு வேளை
கலாய்க்கிறாங்களோ? என்று புரியாமல் பார்த்தவர்கள் அதிகம். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு
முக்கியமான காரணங்களில் ஒரு காரணம் இளைஞர்களின் நெருக்கமான யூட்யூப் பிரபலங்கள் அதில்
இருந்ததும் தான்.
Netflix,
Prime video, Hot star, Sun nxt, Voot, Viu, ozee, Yupptv, SonyLiv,tubitv,
Altbalaji,Hungama,Eros Now,Daily motion, youtube, viu, yuv, jiotv, jio
movies,Airteltv, என வரிசைக் கட்டிக் கொண்டு
நிற்கிறது. பெரிய டிவி நிறுவனங்கள் எல்லாம் தங்களது பேக்கேஜ் சேனல்களை ஆப் மூலமாய்
கொடுக்க ஆரம்பித்திருக்க, இந்த ரேஸில் நாமும் இருக்க வேண்டி யூனானி, ஆயுர்வேத, டேபிள்
டாப்களை மட்டுமே விற்கும் குட்டி சேனல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு ஆஃப்பை போன வாரம்
லாஞ்ச் செய்திருக்கிறார்கள். என்பதை கவனிக்கும் போது மொபைலில், ஆஃபுகளின் மூலமாய் நிகழ்ச்சிகளை
பார்ப்பது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. வெறும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கத்தான் இந்த ஆஃபுகள்,
ஓ.டி.டி ப்ளாட்பார்மா? என்றால் இல்லை. அதன் வீச்சே வேறு.. என்னவென்று அடுத்த கட்டுரையில்..
Post a Comment
3 comments:
விரிவாய் சொல்லியிருக்கிறீர்கள்...
தொடருங்கள்.
நீங்க 6 மாசம் பின்னாடி இருக்கீங்க,Smile Settai எல்லாம் old, Madras Central தான் இப்ப hot. சீக்கிரம் அப்டேட் ஆகுங்க Uncle.
Good, Very informative,,,, Waiting for next ...
Post a Comment