Fidaa
ஃபிதா.
பிரேமத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மலர் டீச்சர் சாய் பல்லவி தான் நாயகி.
வழக்கம் போல ஸ்ட்ராங்கான ஹீரோயின் கேரக்டர். அன்பான அப்பா, குடும்பம், வேல்யூஸ், அன்பு
பாசம், சின்னச் சின்ன நெகிழ்வுகள், கோபங்கள் என புதியதாய் ஏதுமில்லாத சேகர் கம்மூலாவின்
களம் தான். பட்.. அதை மிக அழகாய் கட்டவிழ்த்த விதம், சாய் பல்லவியின் துள்ளலும், கொண்டாட்டமுமான
நடிப்பு. வருண் தேஜ் எனும் அழகன். இயல்பான, ஆடம்பரமில்லாத ஆண்மை. அழகான விஷுவல்ஸ்,
ஸூத்திங் இசை என நம் மனதை ஃபிதா ஆக்கி விடுகிறது.
மனைவியை
இழந்த அண்ணன் மீண்டும் திருமணம் செய்ய எண்ணி, கிராமத்து பெண்ணை பார்க்க வருகிறான்.
பார்த்த மாத்திரத்தில் பெண்ணை பிடித்தாலும், தன் தம்பி வந்து தான் முடிவெடுக்க வேண்டும்
என்று சொல்ல, “அதென்ன தம்பி பார்த்து சொல்லுறது என்ற காண்டாகிறாள் தங்கையான சாய் பல்லவி.
தம்பி வருண் தேஜை ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க ஆரம்பிக்குமிடத்திலிருந்து இருவருக்குமான
லடாய், ஊடல், மெல்ல கல்யாணத்தின் போது ட்ரான்பர்மேஷனாகும் காதல். முக்கியமாய் கல்யாண
வீட்டில் சாய்பல்லவி போடும் ஒரு க்யூட் ஆட்ட
பாட்டில் இருவருக்குமான ரியாக்ஷன்கள் எல்லாம் சேர்ந்து காதல் வருமிடம். பின்பு பிரிவு,
இரண்டாம் பாதி முழுவதும் அமெரிக்கா, மொக்கை மேட்டர் தான் காதலர்களின் பிரிவுக்கான பெரிய
விஷயமாய் அமையும். இதிலும் அஃதே. அது கொஞ்சம் கொஞ்சமாய் மண்டிப் போய், வார்த்தைகள்
தடித்து, உருவாகும் அழுத்தம் என போய் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.
கொஞ்சம்
ஹம் ஆப்கே ஹை கோனின் ஸ்லீக் வர்ஷனாய் தெரிந்தாலும், வசனம் தான் பேசுகிறார்கள் என்பதாய்
இல்லாமல் நடக்கும் கான்வர்ஷேஷன்கள் ஆஸ்யூஸ்வல் க்ளாஸ்.. சாய் பல்லவியின் அட்டகாசமான
நடிப்பு, நடனம். வருண் தேஜின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ். எங்கேயும் திணிக்கப்படாத காட்சிகள்.
அழுத்தமான நாயகி கேரக்டர். க்ளைமேக்ஸில் எத்தனையோ படங்களில் பார்த்த உணர்வுதான் என்றாலும்
லேசாய் கண்களில் கண்ணீர் நிற்க நெகிழ வைத்த சாய்பல்லவி, மற்றும் இயக்குனர் சேகர் கம்மூலாவுக்கும்
வாழ்த்துக்கள். தெலுங்கில் அழகான ஒரு ஃபீல் குட் ஹிட் படம். டோன் மிஸ் வச்சிந்தே சாங்.. தமிழில் இந்த மாதிரியான ஃபீல்
குட் படங்களுக்கான கேப் இருந்து கொண்டேயிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Bigg Boss
ஷோஷியல்
மீடியாவே அலறிக் கொண்டிருக்கிறது. எந்த டைம் லைனைப் பார்த்தாலும் பிக்பாஸ்தான். ஓவியா
கொலைவெறி படை தான். சேவ் ஓவியா டேக் தான். டிவி சீரியல்களை பார்க்காதவர்கள் எல்லாம்
கூட கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிட்டால் கை நடுங்க ஆரம்பித்துவிடுகிறார் போல ட்க்டக்கென
டிவி முன் ஆஜர் ஆகிவிடுகிறார்கள். இலவசமாய் இத்தனைநாள் கொடுத்துக் கொண்டிருந்த ஹாட்ஸ்டார்
ப்ரீமியம் கண்டெண்ட் என்று மாற்றி காசு கேட்க ஆர்மபித்துவிட்டது. இன்னொரு பக்கம் இத்தனை
நாள் போராட்டத்தில் சேனல் ஜி.ஆர்.பியில் மூன்றாவது, நான்காவது லிஸ்டில் போட்டிப் போட்டுக்
கொண்டிருந்த சேனல் இந்த நிகழ்ச்சியால் இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. இரவு நேர
அர்பன் டி.ஆர்.பி எல்லா சேனல்களுக்கும் அடி என்றே சொல்கிறது விளம்பர உலகம்.
இத்தனை
களேபரங்களுக்கும் காரணமான இந்த நிகழ்ச்சியின் வெற்றி சாமானியர்கள் முதல் அறிவு ஜீவியாய்
தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விழையும் ஆட்கள் வரை எங்கேயும் பேச வைத்ததுதான். முழுக்க முழுக்க நாடகம். செட்டப் என்று ஒரு குற்றச்சாட்டு
சொல்லப்பட்டாலும் அப்படி ஒரு நிகழ்வு சாத்தியமே இல்லை. 24 மணி நேரமும் ஸ்கிரிப்ட் எழுதி
நடித்துக் கொண்டேயிருக்க முடியாது. ஆனால் இந்த நிகழ்வை பார்க்கிற, ரெக்கார்ட் செய்கிற
பின்னணியில் உள்ளவர்கள் இவர்களின் பேச்சு, நடவடிக்கையை வைத்து நிச்சயம் சக்திக்கு பிடித்த
ஒரே ஆங்கில வார்த்தையான “ட்ரிக்கர்” பண்ண முடியும். அதுதான் நடக்கிறது. பிக் பாஸ் பார்ப்பதும் அதை பற்றி டைம்லைனில் எழுதுவதும்
ஏதோ மோசமான ரசனையுடையவர், பர்வர்ட், ஃபீட்டிஸ் என்பது போன்ற பல வார்த்தைகளை பிரயோகித்து
தங்களின் ஈகோவை வெளிப்படுத்தும் கும்பல் ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம், நாட்டில்
எத்தனை பிரச்சனை இருக்கிறது அதையெல்லாம் பற்றி எழுதாமல், ஓவியாவைப் பற்றி எழுதுவது
என்ன மாதிரியான நியாயம்?. தமிழகம் எப்படி உருப்படும் என்று தூற்றுகிறவர்கள் கூட நாலு
வரி பிக்பாஸையும் ஓவியாவையும் திட்டிவிட்டுத்தான் எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஹிந்தி, கன்னடம், எல்லா பிக்பாஸும்,
அட்லீஸ்ட் ஒரு சீசனாவது பார்த்திருக்கிறேன். இதிலும் அஃதே. எல்லா இடங்களிலும் ஹிட்.
இங்கேயும் அட்லீஸ்ட் நாலு சீசனாவது ஹிட்டடிக்கும். அது மட்டுமில்லாமல் மற்ற விஷயங்களில் எல்லாம் என்னதான் பத்தி பத்தியாய் சேவ்
தமிழ்நாடு, சேவ் கூடங்குளம், என்று டேக் போட்டு போராடினாலும் நம்மால் காப்பாற்ற முடியாத
போது அட்லீஸ்ட் சேவ் ஓவியா என்று போட்டு ரெண்டு வாரத்துக்கு காப்பாத்த முடியுதேங்கிற
சந்தோஷம் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி.
இங்கு
ஆரம்பித்த ரெண்டு வாரத்திற்கு பிறகு தெலுங்கில்
ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கு மாவில் ஆரம்பித்திருக்கிறார்கள். சொல்லப்
போனால் நிஜமான அடாவடி பட்டாசு தெலுங்கு வர்ஷன். நம்மூரைப் போல நூறு நாட்கள் இல்லை.
வெறும் எழுபது நாட்கள் தான். விமர்சகர், பாடகிகள், நடிகர், டிவி சிரியல் ஆர்டிஸ்ட்,
கரண்டில் வளர்ந்து வரும் காமெடியன். நம்ம சம்பூர்ணேஷ் பாபு, முமைத் கான், ஜோதி என கலந்து
கட்டித்தான் டீம் இருக்கிறது. ஆரம்பித்து பத்து நாட்களுக்குள் ஏகப்பட்ட மசாலா தனமான
சண்டைகள், கூட்டணி, பாசம், எமோஷன் என போகிறது. முதல் பிரச்சனையே அவர்களில் எல்லாரும்
சேர்ந்து தம் அடிப்பதுதான். பிக் பாஸ் காண்டாகி ஒருத்தர் தான் தம் ரூமுக்குள்ள போகணும்
என்று கண்டீஷன் போடுமளவுக்கு ஆண், பெண் எல்லாரும் சேர்ந்து ஒட்டுக்கா தம் அடிக்கும்
காட்சிகள், இயல்பான டீசிங், ப்ராங்க், ரொம்பவும் பாசாங்கு இல்லாமல் ஏற்படும் உரையாடல்கள்
காமெடி, இன்னும் பொரணி பேச ஆரம்பிக்காத பெண்கள். எல்லாவற்றையும் விட, தமிழில் கமல்
மெஜெஸ்டிக்காய் ரூட்டை எடுத்துப் போய்க் கொண்டிருக்க, என்.டி.ஆர் கலந்து கட்டி, சினிமா
போலவே பாடி லேங்குவேஜ், சத்தம் என தடாலடியாய் போய்க் கொண்டிருக்கிறார். பட் வெரி ப்ளீஸிங்.
சும்மாவே அண்ணா, தங்கச்சி போன்ற் தமிழ் பிக் பாஸ் போன்ற பாச ஃபேக் சீனெல்லாம் இல்லை.
கேம் கூட லவ் ப்ரோபோஸ் செய்வது, போன்ற சீனெல்லாம் வைத்த் சூடேற்றுகிறார்கள். இன்னமும்
நம்மளவுக்கு எமோஷன் லெவல் பிக்கப் ஆகவில்லை என்றாலும், முதல் எவிக்ஷனாய் நம்ம ஸ்ரீ
போல, சம்பூர்ணேஷ் பாபு மெண்டல் டென்ஷனாகி, வெளீயேறியிருக்கிறார். எலிமினேட் ஆகி போகிறவரிடம்
உங்களுக்கு யார் சப்போர்ட் செய்திருப்பார் என்று கேட்க, அவர் இவர் எனக்கு சப்பொர்ட்
செய்திருப்பார் என்று சொல்கிற்வரே தனக்கு எதிராய் ஓட்டு போட்டிருப்பதை என்.டி.ஆர் போட்டுக்
கொடுத்துவிட்டு, உங்களுக்கு எதிராய் ஓட்டு போட்டவர்களுக்கு நீங்க பிக் பாம் ஒன்று போடலாம்
என்று ஆஃபர் கொடுக்கிறார். பழி வாங்க சந்தர்ப்பம். வீட்டுக்கு வெளியேயும் வஞ்சம்,
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்
சினிமா திரையரங்கு வர்த்தகம் இந்த வாரம் சற்றே அசுவாசப்பட்டிருக்கிறது. தியேட்டர் ஸ்ட்ரைக்,
ஜி.எஸ்.டி, விலையேற்றம் போன்ற பல காரணங்களால் கடந்த ரெண்டு வாரமாய் ஆள் இல்லாமல் ஈ
ஓட்டிக் கொண்டிருந்த அரங்குகள் இந்த வாரம் விக்ரம் வேதா, மீசைய முறுக்கு, தெலுங்கு
ஃபிதா, இங்கிலீஷ் டன்க்ரிக்கினால் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. துவண்டு போயிருந்த
நெட் புக்கிங் பிக்கப் ஆகியிருக்கிறதாம். கண்டெண்ட் தான் எல்லாமே என்று தயாரிப்பாளர்கள்,
இயக்குனர்கள் பேட்டி கொடுப்பதற்கு பதிலாய் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு டிக்கெட் புக்கிங்காரர்கள்
பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம் வருமானம் சின்ன கல்லு பெத்த லாபம்
அடைபவர்கள் பேசாமல் என்ன செய்வார்கள்?. ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதலே சென்னை,
கோவை, செங்கல்பட்டு ஏரியா மல்ட்டிப்ளெக்ஸைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் இரண்டு இலக்க
ஆடியன்ஸ் ஆகிவிட்டார்கள் என்று ரிப்போர்ட். காரணம் ரிப்பீட் ஆடியன்ஸ் இல்லை என்பதும்,
அதிக பணம் என்பதும் ஒர் காரணம் கண்டெண்ட் தான் கிங் என்பதை மறுக்கவில்லை. அதை விற்பதும்,
சேர வேண்டியவர்களிடம் சேர்த்து காசாக்குவதும் முக்கியம். எல்லாரும் சேர்ந்து யோசிக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்
மகனின் இன் ஜினியரிங் கல்லூரி அனுமதிக்காக சில கல்லூரிகளுக்கு போயிருந்தேன். பெரும்பான்மையானவர்கள்
நல்ல மார்க் வரும் என்று நம்பிக்கையிருந்தாலும், கவுன்சிலிங்கை பெரிதாய் நம்பியவர்களாய்தெரியவில்லை.
முன்பே கல்லூரிகளில் நடக்கும் தெரிவு தேர்வில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவுடன்
சீட்டை ப்ளாக் செய்து கொள்கிறார்கள். அம்மாதிரியான நிகழ்வுகளில் கவுன்சிலிங்கின் போது
யாருடைய போன்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. வாசலில் வாட்ச்மேன் வைத்து டோக்கன் கொடுத்துவிடுகிறார்கள்.
அட்வான்ஸுக்கோ, டொனேஷன் பற்றிய பேச்சுக்களையோ, யாரும் ரெக்கார்ட் செய்துவிடக்கூடாது
என்கிற முன் ஜாக்கிரதை போல. எந்த ஒரு தொகைக்கும் பில்லாய் ஏதும் தராமல் ஏதோ ஒரு கோட்
வேர்ட் போல நம்பர் எழுதி தருகிறார்கள். பல விதங்களில் மக்களிடமிருந்து பணம் சுரண்ட
எத்தனை வழிவகைகளிருக்கிறதோ அத்தனை விதத்தையும் பயன்படுத்துகிறார்கள். நான் என் கொள்கையில்
பிடித்தமாய் இருப்பவன். பையனும் அவன் கல்வியில் அழுத்தமாய் இருந்ததால் பெரிய அக்கபோர்
இல்லாமல் சீட் கிடைத்தது. என்ன அஃபீஷியல் பீஸ் கட்ட கண்ணு முழி பிதுங்குது.
Post a Comment
No comments:
Post a Comment