A
Death In Kunj
பிரபல நடிகை
கொங்கனாசென் எழுத்து இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம். எழுபதுகளில் நடக்கும் கதை.
படத்தின் முதல் காட்சியில் இரண்டு இளைஞர்கள் அம்பாஸிட்டர் காரின் டிக்கியில் ஒர் உடலை
வைத்து மூடி அடர்ந்த காடுகளை கடக்கிறார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான ரியாக்ஷனுமில்லை.
ப்ளாஷ்பேக்காய் கதை விரிகிறது. நந்து தன் மனைவி போனி, கஸின் ஷோட்டு மற்றும், போனியின்
தோழியான கல்கியுடன் தன் பெற்றோர்களை பார்க்க குஞ்ச் கிராமத்திற்கு கிளம்புகிறான். அங்கே போய் சேர்ந்த
நேரத்தில் மேலும் இரு கஸின்கள் விக்ரமும், ப்ரெயினும் சேர்ந்து கொள்ள, குடும்பம் கொண்டாட்டமாய்
புது வருடத்தை வரவேற்க தயாராகிறது.
விக்ரம் அரகண்டானவன். எதையும் சத்தமாய்
ஆர்பாட்டமாய் செய்பவன். சமீபத்தில் வெளியே கூட்டிக் கொண்டு வர தயங்கும் சிறு கிராமத்துப்
பெண்ணை திருமணம் செய்தவன். அவனுக்கும் கல்கிக்கும் தொடர்பு இருக்கிறது. ஷோட்டு ஒரு
இண்ட்ரோவர்ட். லோ செல்ப் எஸ்டீம் கொண்டவன். சிறந்த படிப்பாளி. ஆனால் அவனுடய எம்.எஸ்.சி
தேர்வில் தோல்வியடைந்து கல்லூரியையும், ஹாஸ்டலையும் விட்டு துரத்தியடிக்கப் பட்டு நந்துவுடன்
திரிந்து கொண்டிருக்கிறான். நந்துவின் குட்டிப் பெண் மட்டுமே அவனை மதிக்கிறவள். பெரும்பாலான
நேரம் அவளுடனேயே செலவிடுகிறான். விக்ரமின் ஆர்பாட்டம் அவனுக்கு பிடிக்கவில்லை. பேயை
அழைத்துப் பேசுகிறோம் என்று இவனை வைத்து கலாட்டா செய்கிறார்கள். ஷோட்டு பயந்து போகிறான்.
அவனுடய மனம் இன்னும் புழுங்குகிறது. விக்ரம் அவனது புது மனைவியை அழைந்துவர, அவளுக்கு
எதிரே கல்கி அவனுடனான நெருக்கத்தை காட்ட விழைய, விக்ரம் அவளை தவிர்க்கிறான். அவன் மீதான
கோபத்தை வெளிப்படுத்த கடும் போதையில், ஷோட்டுவை தன் அறைக்கு அழைத்து சென்று செட்டியூஸ்
செய்கிறாள். ஷோட்டுவுக்கு அன்றிரவு நடந்த உடலுறவும், கல்கியின் நெருக்கமும் ப்யூஸ்
போன பல்ப்பாய் இருந்தவனின் முகத்தில் வெளிச்சம்.
அவளின் நெருக்கத்தை வளர்க்க விக்ரமின்
புல்லட்டை எடுத்துக் கொண்டு கல்கியுடன் வெளியே செல்கிறான். அந்நேரத்தில் நந்துவின்
மகள் காணாமல் போக, வீடே அல்லோலகல்லோலபடுகிறது. எல்லாவற்றிக்கும் காரணமென்று இவனையும்
திட்டுகிறது. ஷோட்டு தேடப் போக, மிருகங்களுக்கு பரித்து வைத்த பள்ளத்தில் மாட்டிக்
கொள்கிறான். அவனைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எல்லோரும் போய்விட, வேலைக்காரன் உதவியாய்
அவன் வரும் போது மொத்த குடும்பமும், அவனைப் பற்றி கவலைப் படாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
அவனது சுய மரியாதை, இன்னும் கீழிறங்கிப் போக, குறுகிப் போய் நிற்க, கல்கியிடம் பேச
விழையும் போது அவனை அவள் மதிக்காமல் இக்னோர் செய்ய, அவன் செய்யும் ஒர் செயல் மொத்த
குடும்பத்தையும் அதிர்ச்சிக் ள்ளாக்குகிறது.
ஆங்கிலோ இந்தியக் குடும்பம். குடும்பமாய்
குடி, தம் என கொண்டாட்டிக் கொண்டிருக்கும் அவர்களது வ்ழக்கம். தடாலடியான குடும்பத்தில்
மிகவும் இண்ட்ரோவர்ட்டான தோல்வியின் விளீம்பில் தொங்கும் இளைஞன். அவனது கேரக்டர்கள்.
செக்ஸ். மிக இயல்பான வசனங்கள். கல்கி, ஓம்பூரி போன்றோரின் நடிப்பு. மிக இயல்பான எடிட்டிங்.
விக்ரமுக்கும், ஷோட்டுவுக்குமிடையே ஏற்படும் வஞ்சம். கொஞ்சம் ஸ்லோவாக போனாலும், க்ளைமேக்ஸ்
சும்மா ஜிவ்வுன்னு நிக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்
– பெப்ஸி வேலை நிறுத்தம் ரொம்ப நாளாகவே எதிர்பார்த்ததுதான். இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே
வெடித்தது. பின்பு அப்போதிருந்த சங்கம் காம்பரமைஸாகிப் போனது. அதன் பின் மன்சூர் அலிகான்
தனியாய் ஒர் தொழிலாளர் கட்டமைப்பை ஆரம்பித்து, காம்படீஷன் கமிஷனிடம் முறையிட்டு, இவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டுமென்பது
கிடையாது என்று கோர்ட் சொன்னது. பின்பு வழக்கம் போல நீரு பூத்துக் கொண்டிருந்த சண்டை
பில்லாபாண்டி படப்பிடிப்பை நிறுத்தியதால் பற்றிக் கொண்டிருக்கிறது. இம்முறை நிச்சமய்
சமரசமாய் போக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அதனால் தான் பெப்ஸியின் தரப்பில் அவர்களுடய
சங்கத்து ஆள் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. சம்பந்தப்பட்டவரும் மன்னிப்பு கோரியுள்ள
நிலையில், நாங்க உங்களோட வேலை செய்ய மாட்டோம்னு சொல்லலை. உங்களோட மட்டுமே வேலை செய்ய
மாட்டோம்னுதான் சொல்லுறோம். அதும் எங்க சம்பள விதிமுறைகளுக்கு உட்பட்டால் என்கிறது
தயாரிப்பாளர் தரப்பு. இந்த முறை தயாரிப்பாளர்களிடமிருந்து மிகப் பெரிய ஆதரவு தயாரிப்பாளர்
சங்க தலைவர் விஷாலுக்கு . அந்த அளவுக்கு பட்டிருக்கிறார்கள்.
முன்பு போல ரொம்ப ஸ்ட்ரிக்டாக இல்லாவிட்டாலும்
இவர்களைத் தவிர வேறு யாரையும் வைத்து வேலை செய்ய முடியாது என்பதாலேயே கிட்டத்தட்ட மோனோபாலியாய்
ஆகிவிட்டதால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாய் சகித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது
பொங்கி எழுந்திருக்கிறார்கள். டிஜிட்டல் வந்தால் செலவு குறையும் என்று வரவேற்ற தயாரிப்பாளர்களுக்கு
அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பது போல, உதவியாளர்கள் மூன்று பேர், மானிட்டருக்கு ஒருத்தர்.
ஸ்பெஷல் லென்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் என ஆயிரக்கணக்கில் பேட்டா கொடுத்து பிலிம் கேமராவுக்கு
இணையாய்தான் இன்றைய பேட்டா இருக்கிறது. தேவையேயில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இத்தனை
பேரை வைத்துக் கொண்டே ஆக வேண்டுமென்பது எல்லாம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அராஜகம்
என்றே சொல்ல வேண்டும். இனி மோனோபாலி ஒர்க்கவுட் ஆகாது. யோசித்துப்பாருங்கள் மூன்று
வேளை சோறு போட்டு, சம்பளம் கொடுக்கும் ஒரே தொழில் சினிமா மட்டுமே. கடின உழைப்பு, என்று
சொல்லுவார்கள். இன்றைக்கு சினிமா அல்லாது இவர்களை விட கடின உழைப்பு உழைக்கும் எத்தனை
சித்தாள், கொத்தனார்களுக்கு சோறும் போது வீட்டிலிருந்து கிளம்புவதற்கு பஸ் கட்டணம்,
காலை வீட்டிற்கு அருகில் டிபன் சாப்பிட பேட்டா எல்லாம் கொடுத்து சம்பளம் கொடுக்கிறார்கள்.
இவக்ரளை விடவா கடின உழைப்பு சினிமாவில். நிச்சயம் இல்லை.
உலகில் எந்த வேலைக்கும் நாம் செய்யும்
நாட்களுக்கு மட்டுமே சம்பளம் என்றிருக்க, சினிமாவில் மட்டுமே என் வேலைக்காகத்தான் இவன்
பயணப்படுகிறான் என்று ட்ராவல், சாப்பாடு என கால்ஷீட் விகிதத்திலேயே சம்பளம் கொடுத்து
கூட்டி வரும் காமெடி நடக்கிறது. இன்றைய நிலையில் இது புரிந்த்தால் தான் தீவிரமில்லாமல்
இருக்கிறது. பெரிய படங்களுக்கு ஒரு விதம். சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு விதம் என்று
அட்ஜெஸ்ட்மெண்டை பெப்ஸி செய்தாலும் இன்னும் இலகுவாகுவதற்கு இரு தரப்பும் விட்டுக் கொண்டுத்தலே
நல்லது. நிச்சயம் இனி ஒரு குமுவை சார்ந்து மட்டுமே வேலை செய்யும் முறை நிச்சயம் தொடர
வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் நாட்டு சென்சாரும் எப்போதுமே
வில்லங்கம்தான். ஊரு மொத்தமும் கழுவி ஊத்துறா மாதிரி சீன் இருக்கிற படத்துக்கு யூ சர்டிபிக்கேட்
கொடுக்கும். ஒண்ணுமேயில்லாத படத்துக்கு தடை பண்ணும். இந்த மாதிரியான பிரச்சனை சமீபத்தில்
ராமின் தரமணிக்கும். விழித்திரு, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? எனும் படத்துக்கு
நடந்திருக்கிறது. ராமின் கதை அர்பன் ஜோடிகளைப் பற்றியது. பப், ஐடி. நைட் லைஃப் என போகும்
படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டியின் காரணமாய் வரி விலக்கு கந்தாயம் இல்லாததால் எது கொடுத்தாலும் ஓகே மனநிலையில்
வரட்டும் என வாங்கி வந்து மேடையில் இந்த படம் நிச்சயம் குழந்தைகளுக்கானது இல்லை என்று
ராம் பேசினாலும் விளம்பரங்களில் சென்சாரை கழுவி ஊற்றி தான் ஸ்டேடஸ் போடுகிறார்கள்.
தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்துக்கு சென்சார் சர்டிபிகேட்டே கொடுக்க
முடியாது என்றிருக்கிறார்கள். ஏற்கனவே சென்சார் செய்ய பல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனால்
க்யூவில் வந்து நிற்கும் நிலையில் மீண்டும் ட்ரீப்யூனலுக்கு போய் விளக்கி, சென்சார்
வாங்கி என சின்ன படங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நசுக்கதான் படுகிறது என்றே தோன்றுகிறது.
இங்கு மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான மதூர் பண்டார்கரின் படம். லிப்ஸ்டிக் அண்டர் மை
புர்க்கா போன்ற படங்களுக்கு இதே நிலைதான். பெரிய கான் நடிகர்கள் படங்களுக்கு இம்மாதிரியான
பிரச்சனைகள் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.வரிவிலக்குக்கு கொஞ்சம் ரிலீப்
கிடைத்தார் போல இந்த சென்சார் மேட்டருக்கும் ரிலீப் வந்தால் நல்லாருக்கும். வருமா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"Despacito"
உலகமே
கொண்டாடிக் கொண்டிருக்கும் தற்போதை அமெரிக்க ஸ்பானிஷ் பாடல். லூயிஸ் பென்ஸியுடன், பிரபல
ராப்பர் டாடியாங்கி இணைய, செக்ஸுவல் ரிலேஷன்சிப்பைப் பற்றிய பாடல். ஆஸ்யூஸ்வல் ரேகே பாப் ஸ்டைல் பாடல் தான் இதே போன்ற
பல பாடல்களை நாம் பல் முறை கேட்டிருப்போம். இப்பாடலுக்கான பெரிய ப்ளஸ் விஷுவல்கள்.
கேட்ட மாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்து, மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. அதனால்
தான் கிட்டத்தட்ட முப்பது கோடி ஹிட்ஸ். இப்பாடலின் வெற்றிக்கு ஜஸ்டின் பைபரும் ஒர்
காரணம் இதன் ஆங்கில ரீமிக்ஸ் வர்ஷனை அவர் வெளியிட்ட பின்பு டெஸ்பாஸிட்டோ இன்னும் பெரிய
ஹிட்டாம். ஹிப்பாப், ரேக்கே, ஸூத்திங் விஷுவல்ஸ். அழகிய பெண்கள். க்யூட்
https://www.youtube.com/watch?v=kJQP7kiw5Fk
Post a Comment
2 comments:
கொத்துப்பரோட்டா அருமை.
not 30 crores,,,more than 400 crores...
Post a Comment