O.T.T. எனும் மாயவன் -5
காட்டுப்பூக்களாய் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள்
பூக்க ஆரம்பித்திருக்க, அத்தனை பேருக்கும் மிக அத்யாவசிய தேவை கண்டெண்டுகள். அமேசான்
போன்றோர், பர்ஹான் அக்தரின் எக்ஸல் எண்டர்டெயிண்டோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, பிரம்மாண்டமான
வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் முக்கிய தயாரிப்பு
நிறுவனங்களோடு அவர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை தயாரிக்க பணித்துவிட்டார்கள்.
எல்லாமே பெரிய பட்ஜெட். சமீபத்தில் எக்ஸெல் தயாரித்து அமேசானில் வெளியிட்ட “இன்சைட்
எட்ஜ்” சீரீஸின் ஒரு எபிசோட் செலவு கிட்டத்தட்ட ஒரு கோடி என்கிறார்கள். இவர்களின் அடுத்த
சீரீஸான மிர்சாப்பூரின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட அதே என்கிறார்கள். நெட்ப்ளிக்ஸும்,
ஷாருக்கான், அமீர்கானிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இல்லை அக்ரிமெண்ட்
கையெழுத்தாகிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டேதானிருக்கிறது. இந்தி மொழி, உலகளாவிய
மார்கெட் எல்லாம் சேர்ந்து பெரும் முதலைகள் இதில் இறங்கியிருக்கிறார்கள்.
இவர்களுக்கான லாபம் பர்ஸ்ட் காப்பி
அடிப்படையில் இத்தனை ரூபாய் எங்களுக்கான பட்ஜெட். அந்த பட்ஜெட்டுக்குள் அமேசானின் தர நிர்ணையத்துடன், தயாரித்து, அதில்
அவர்கள் லாபம் பார்க்க வேண்டும். இது ரொம்பவும் சேஃப்பான விளையாட்டு. இரண்டு பக்கமும்.
ஏனென்றால் அமேசான் போன்ற டீப் பாக்கெட் நிறுவனங்களுக்கு சாத்தியமான பட்ஜெட். பின்பு
அம்மாதிரியான பட்ஜெட்டை டீல் செய்யக்கூடிய தகுதியுடய தயாரிப்பு நிறுவனங்கள். இருவருமே
பழம் தின்று கொட்டை போட்டவர்கள். சிம்பிளாய் ஒரு நல்ல டீல் தொடர்ந்து ஹிட் கொடுக்கும்
பட்சத்தில் இருவரிடையே ஆன தொழிலுறவு மேம்படும்.
அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு
தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, பெரிய நட்சத்திரங்களின் படங்கள், சீரிஸ்கள் என
போட்டிப் போட்டு தங்களது லைப்ரரியில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட
டீவி சேனல்கள் ஒரு காலத்தில் போட்டிப் போட்டதைப் போல. மாதா மாதம் நான் ஏன் இந்த ஓ.டி.டி
ப்ளாட்பார்முக்கு பணம் கட்ட வேண்டுமென்று யோசிக்கும் அளவுக்கு கண்டெண்டுகள் இருந்தால்
நஷ்டம் ஓ.டி.டி ப்ளாட்பார்முக்குத்தான். அவர்களை தக்க வைக்கத்தான் இந்த பெரிய பட்ஜெட்
தூண்டில்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்களின் வெப் சீரிஸ் எனும் போது உடனடியாய் விளம்பரமாவதும்,
கண்டெண்ட் நன்றாக உள்ள பட்சத்தில் புதிய சப்ஸ்கிரைபர்கள் சேருவதும் தான் வியாபாரம்.
அப்படியானால் இங்கேயும் சின்ன பட்ஜெட்,
பிரபலமில்லாத நிறுவனங்கள், ஸ்டார்டப், போன்றோருக்கு வாய்ப்பு குறைவுதானா? என்றால் கொஞ்சம்
மையமாய் தலையாட்ட வேண்டிய சூழ்நிலைதான் இங்கே. பெரும்பாலான இரண்டாம் தர ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள்
ஹிந்தி மட்டுமில்லாமல் மற்ற ரீஜினல் மொழிகளிலும் கண்டெண்டுகளை உருவாக்க, அந்தந்த மாநிலங்களில்
உள்ள பழம் பெரும் தயாரிப்பாளர்களை அணுகுகிறது. அப்படியான தயாரிப்பாளர்கள் ஒன்று தற்போதைய
சினிமாவிலிருந்தே விலகியிருப்பவர்களாய் இருக்கிறார்கள். யாரோ ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்க
சொல்கிறது. அதற்கு பணம் கொடுக்கப் போகிறார்கள் முடிந்தவரை சின்னதாய் எடுத்துவிட்டு
லாபம் சம்பாதிப்போம் என்ற எண்ணத்திலேயே தான் நிறைய நிறுவனங்கள் வெப் சீரிஸ் பற்றிய
போதிய ஞானமில்லாமலும், இண்டர்நெட்டில விட்டா யாரு பார்பார்கள்? என்ற கேள்வியோடே தயாரித்து
கொடுப்பதுமாய் இருப்பதால் இம்மாதிரியான லோக்கல் கண்டெண்டுகள் பெருமளவில் ஒர்க்கவுட்
ஆகாமல் போய்க் கொண்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிச்சயம் லாபம். ஆனால் பேஷண்ட்
டெட். நிலைதான்.
இது தவிர சில நல்ல ஸ்டார்டப் நிறுவனங்கள்
சிரத்தையாய், நல்ல சுவாரஸ்யமான கண்டெண்டுகளை தயாரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
மெதுவாய், அவர்களது டீமின் நடிகர்கள் மக்களிடையே பிரபலமாகிக் கொண்டுதானிருகிறார்கள்.
அவர்களை வைத்து தயாரிக்கப்படும் யூட்யூப் சீரிஸ்கள் மெல்ல லாபகரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் அதிகம் இணைய கண்டெண்டுகளில் உழல்கிறவர்கள். சாதிக்க துடிக்கிற்வர்கள் என
இளமையான பட்டாளம் களமிறங்கி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலங்களில் குறும்படங்கள் எடுத்தவர்கள்
எல்லாம் வெப் சீரிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று இறங்கும் நாள் அதிக தூரத்தில்
இல்லை.
பெரிய நடிகர்களால், கொடுக்க முடியாத,
தொட முடியாத பல விஷயங்களை, பெரிய, சின்ன திரையில் அவ்வளவு சுலபமாய் சொல்ல முடியாத விஷயங்களை
சொல்லக்கூடிய இடமாய் இணையமிருப்பதால், செக்ஸ், காதல், கஸ் வேர்ட் எனும் கெட்ட வார்த்தை
பிரயோகங்கள், சென்சார் இல்லாத சுதந்திரம் இவையெல்லாம் பல திறமையாளர்களின் கதவை திறந்திருக்கிறது.
எத்தனை கதவுகள் திறந்தாலும் நிறுபித்த
நிறுவனங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும், உடனடி அங்கீகாரமும் இவர்களுக்கு கிடைக்காவிட்டாலும்,
நட்சத்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட திரையுலகம் போலில்லாமல், இணையத்தில் கண்டெண்ட்
மட்டுமே நிரந்தரம் என்பதால் மெல்ல, புதியவர்களின் கை ஓங்க ஆரம்பித்திருக்கிறது.
இன்றைய தேதிக்கு யூட்யூப்பில் வரும்
விளம்பரம் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பான வெப் சீரீஸ்களை கொடுக்கும்
நிறுவனங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் நல்ல மார்கெட்டிங் தெரிந்த நிறுவனங்கள்
முன்பே சொன்னது போல பிரபல ப்ராடெக்டுகளை இவர்களுடய ப்ராண்ட் பார்ட்னர்களாய் சேர்த்துக்
கொண்டு, போட்ட முதலை எடுக்க முயற்சித்து வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இனி வரும் காலங்களில் வளர்ந்து
வரும், வளரப் போகும் அத்துனை ஓ.டி.டி நிறுவனங்களுக்கும் கண்டெண்ட் தேவை எத்தை தின்றால்
பித்தம் தெளியும் என்று புரியாமல், பல விதமான பரிசோதனைகளை செய்து விழ்ந்தோ, எழுந்தோ
நிற்பார்கள். ஆனால் ஒரு விஷயம் இந்த துறையில் லாபம் என்பது வேறு ஒரு நிறுவனங்களுக்கு
தயாரித்து கொடுத்தால் உடனடியாய் லாபம். அதே நேரத்தில் உங்களது நேரடி தயாரிப்பு. உங்களது
ப்ளாட்பார்மிலேயே வெளியிட்டீர்கள். என்றால் உடனடி லாபமில்லை என்றாலும் எத்தனை வருடமானாலும்
வருமானம் வரக்கூடிய வாய்ப்பு ஓப்பனாய் இருப்பது இதன் பெரிய பலம். எனவே ஓடிடி ப்ளாட்பார்மும்,
கண்டெண்ட் தயாரிப்பாளர்களும் அவரவர் தகுதி, தரத்துக்கு ஏற்ப களத்தை கணித்து, மக்கள்
மனதை வென்றெடுக்கும் போதுதான் இதன் முழூ வியாபார வீச்சு புரிய வரும். அதற்கு ரொம்ப
வருடங்கள் எல்லாம் தேவையில்லை. மிக விரைவில் புரிபட ஆரம்பிக்கும் அதுவரை லெட்ஸ் வெயிட்
அண்ட் வாட்ச்.
Post a Comment
No comments:
Post a Comment