கொத்து பரோட்டா 2.0-53
கொத்து பரோட்டா 2.0-53 எங்கு பார்த்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு பற்றியும், தற்கொலைகள் பற்றியுமே பேச்சாகவும், செய்திகளாகவும் இருக்கிறது. எல்லா பசங்க கையிலேயும் போன் இருக்க, அவங்க அதை வச்சி என்ன பண்ணுறாங்கன்னு வாட்ச் பண்றது எப்படினு கைய பிசைஞ்சிட்டு இருக்கிற பெற்றோர்கள் நிறைய பேர். கம்ப்யூட்டரை காமன் ஹால்ல வையுங்க. பாஸ்வேர்ட் எல்லாம் எதுன்னு பசங்க கிட்ட பேசி தெரிஞ்சுக்கங்க, என்ன விளையாடுறாங்கன்னு பார்த்துட்டேயிருங்க என்றெல்லாம் நிறைய அட்வைஸ்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தாலும், பெற்றோர்கள் இருக்கிற பிஸியில் இதுங்க நம்மளை தொல்லை பண்ணாம அதும் பாட்டுக்கு ஏதோ விளையாடிட்டு இருக்குதுங்கனு விடுற பெற்றோர் தான் அதிகம். பிரச்சனை அங்க தான் ஆரம்பிக்கிறது. நாம் அவர்களை தனியே விட விட, அவர்கள் மேலும் அவர்களின் செயல்களில் மிக ஆழமாக ஈடு படுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் யூஸ் பண்ணாதே, போன் எதுக்கு என்றெல்லாம் கேட்பதை விட, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். பள்ளி, ட்யூஷன், பாட்டுக்கிளாஸ், ஹிந்திக்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ் என நம்மை விட படு பிசியாய் இருக்கும் நம் குழந்தைகளுக்...