Posts
Showing posts from February, 2018
கொத்து பரோட்டா 2.0-24
- Get link
- X
- Other Apps
கொத்து பரோட்டா 2.0-54 Saheb Bibi Golaam பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது. ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய்...
பைரஸியும் சினிமாவும் -4
- Get link
- X
- Other Apps
பைரஸியும் சினிமாவும் -3 டிஜிட்டலானாதால் இருக்கும் பாதுகாப்பின்மை ஒரு ரிஸ்க் என்றாலும், பெரும்பாலானவர்களின் அடிப்படை நேர்மையினால் பைரஸிக்கு துணை போகாவிட்டாலும், ஒரு சில படங்களின் வீடியோக்கள், ஏன் சில படமே வெளிவந்ததற்கான காரணம் அங்கிருந்த மனசாட்சி இல்லாத ஒரு சில அரைவேக்காட்டு பண தேவை மிகுந்த அப்ரசண்டிகள் தான் காரணம். முன்பெல்லாம் வெளிநாட்டு வீடியோக்கள் மூலம் வந்ததைப் போல டிஜிட்டல் கேமராக்களின் வளர்ச்சி இன்றைக்கு மொபைலிலேயே அட்டகாச படமெடுக்கும் வசதி வரை வந்து விட்டதால் சுலபமாய் போய்விட்டது. தியேட்டர் ஆப்பரேட்டர்களின் உதவியுடன் கேமரா பிரிண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. பல தியேட்டர்களை ஒரிஜினல் ஓனர்கள் நடத்தாமல் லீசுக்கு விட்டு விட்டு மாச காசு மட்டுமே வாங்கிக் கொண்டிருக்க, பெரும்பாலான பி, சி செண்டர் தியேட்ட்ரகளின் ஓனர்கள் தியேட்டர் மேனேஜரும், ஆப்பரேட்டருமாகவே இருக்க, சொற்ப சம்பளம், இவர்களின் தேவையை அதிகரித்திருக்க, லம்பாய் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கிடைக்கக் கூடிய வாய்ப்பை யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்?. இப்படியாக தியேட்டர் பிரிண்டுகள் வர ஆரம்பிக்க, க்யூப், யூ எப்.ஒ போன்ற நிறுவனங்க...