திருநெல்வேலிக்கு போனால் நிச்சயம் வைரமாளிகை பரோட்டாவையும், தேங்காய் எண்ணையில் பொரித்த நாட்டுக்கோழியையும் சாப்பிடாமல் வரமாட்டேன். சில வருடங்களுக்கு முன் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடமியில் உள்ள காப்பிஷாப்பில் ஆரம்பித்தார்கள். ஆனால் கூட்டம் தான் வரவில்லை என்றார்கள். வாசல்ல ஏகே 47 வச்சிட்டு நின்னுட்டிருந்தா எவன் பரோட்டா சாப்பிட வருவான்? என்று கேட்ட ஒரிரு மாதத்தில் கடையை ஏறக்கட்டிவிட்டார்கள்.
அவர்கள் இப்போது டிநகர் வித்யோதயா ஸ்கூலின் எதிரில் தங்களது புதிய சென்னைக் கிளையை திறந்திருக்கிறார்கள். அதே மொறு மொறு பரோட்டா, தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக்கோழி, அதன் உடன் கொடுக்கப்படும் பாயா டேஸ்டில் கொடுக்கப்படும் வெஜ் கிரேவி. தற்போது உடன் நான் வெஜ் கிரேவியும் கொடுக்கிறார்கள்.
பரோட்டாவை பிய்த்து போடாமலேயே சால்னாவை ஊற்றி ஊற வைத்து, பிய்த்தாய் அப்படி இலகுவாய் பரோட்டா பிய்ந்துக் கொண்டு வரும். வாயில் வைத்தால் லபக்கென வழுக்கிக் கொண்டு ஓடும். நாட்டுக்கோழி ஆஸ்யூஸுவல் அட்டகாசம். நான் வெஜ் கிரேவி நம்மூர்காரர்களுக்கான விஷயமாய் இருந்தாலும், ஒரு பரோட்டா வெஜ் கிரேவிக்கும் இன்னொன்று நான் வெஜ்ஜுக்கு என்று மாற்றி மாற்றி அடிக்கலாம். முடிக்கும் போது கலக்கி ஒன்றை ஆர்டர் செய்தால் சும்மா தளதளவென வெங்காயம் போட்ட கலக்கி வாழையில் வைத்து கொடுப்பார்கள். லாவகமாய் எடுத்து அப்படியே வாயினுள் போட வேண்டும் டிவைன்.
மிக முக்கியமான ஒன்று விலை. பார்டர் கடை போல அநியாய விலை இல்லை. நான்கு பரோட்டா, ஒரு கலக்கி, ஒரு சிக்கன் எல்லாம் சேர்த்து 197 ரூபாய் தான்.
Post a Comment
1 comment:
What about paleo diet
Post a Comment