Posts

Showing posts from May, 2018

சப்பாத்திக்கடை - விருகம்பாக்கம்

Image
விருகம்பாக்கத்தில் 5 ரூபாய்க்கு சப்பாத்தி கிடைக்கிறது. கூடவே தால், பன்னீர், சிக்கன், கடாய் சிக்கன், மட்டன், என கிரேவியுடன்  என்றார்கள். ஒரு சப்பாத்தியின் விலை 5 ரூபாய் மட்டுமே என்றவுடன் ஒரு நடை போய்ட்டு வந்துருவோம்னு என்று கிளம்பினோம். ஏவிஎம் காலனி, காமராஜ் சாலையில் இருந்தது அந்த சின்னக்கடை. வாசலிலேயே சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர் சப்பாத்தி தால் ஆர்டர் செய்ய, நான் சப்பாத்தி கடாய் சிக்கன்.  நல்ல மிருதுவான சப்பாத்தி, உடன் கொடுக்கப்பட்ட தால் நன்றாக இருந்தது. விலை ரூ. 30. கடாய் சிக்கன் ரூ.60. மசாலா அதிகமில்லாமல் சப்பாத்திக்கு மிகத்தோதாய் மிகவும் கிரேவியாய் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் இருந்தது சிக்கன். கொடுக்கப்படும் கிரேவி மூன்றிலிருந்து நான்கு சப்பாத்திக்கு வரும். நிச்சயம் வயிற்றையும், பர்ஸையும் பதம் பார்க்காத உணவை கொடுக்கிறார்கள். ஆரம்பித்து ரெண்டு மாதம்தான் இருக்கும். நாளைக்கு நானூறு சப்பாத்தி போவதாய் சொல்கிறார்கள்.  சாலிக்கிராமம், வளசரவாக்கம், விருகம்பாக்கம்  பகுதிகளுக்கு டோர் டெலிவரியும் செய்கிறார்கள். ஒரு முறை ட்ரை செய்து பாரு...

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -7

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -8 தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாவான வடபழனியில் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு டீக்கடை முக்கு உண்டு. பிரசாத ரெக்கார்டிங் முன்பு பார்த்தால் நிறைய உதவி இயக்குனர்கள், ஏன் ஒரு படம் செய்து அடுத்த படத்திற்காக காத்திருப்பவர்கள். முதல் பட தோல்விக்கான காரணங்களை நின்று அலசுகிறவர்கள் என பெரும்பாலும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே அதிக்கம் செலுத்துமிடம் காவேரி கார்னர். அடுத்து கொஞ்சம் தூரம் போனால் மரங்கள் அடர்ந்த பாரதியார் தெரு. நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்க்கிறவர்கள் என்றால் நீங்கள் பல படங்கள் பார்த்த,அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவில் பிரபலமான பல துணை நடிகர்களை அங்கே பார்க்கலாம். அந்த தெரு ஒரு நம்பிக்கை தெரு. அந்த தெருவிலிருந்துதான் சூரி, மூனீஷ்காந்த், என பல நடிகர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். அங்கே கூடும் ஒவ்வொருக்கும் எனர்ஜி கொடுக்ககூடிய ஒர் முக்கிய விஷயம் அவர்களின் வெற்றிதான். “தோ.. இங்கதான் நானும் சூரியும் தெனம் முனை கடையில டீ குடிச்சுட்டு, ஆபீஸ் ஆபீஸா ஏறிட்டு வருவோம்” எனும் நண்பரை நீங்கள் நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள். “என்ன...

கொத்து பரோட்டா 2.0-56

கொத்து பரோட்டா 2.0-56 ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையர...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6 சில வருடங்களுக்கு முன் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர். திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக் கொள்வார். ஒரு நாள் வழக்கம் போல அழைத்தார். படம் ஒண்ணு ஓகே ஆயிருக்கு. நம்ம காமெடிக்கதைதான். ப்ரொடியூசர் ஓகே சொல்லிட்டாரு. ஆபீஸ் பார்க்க சொல்லியிருக்காரு. என்றார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ”அப்ப நாம உடனே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு காமெடிய சேர்த்துருவோம்’ என்றேன். நண்பரும் உற்சாகமாக தலையாட்டினார். அங்கே இங்கே என அலைந்து ஒரு வழியாய் கோயம்பேடில் அலுவலகம் வாடகைக்கு பிடித்தாயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் அலுவலக பூஜை போடப்பட்டது. தயாரிப்பாளர் மட்டுமே வந்து கலந்து கொண்ட நிகழ்வு. உடன் யாரும் வரவில்லை. தயாரிப்பாளருக்கு 50 வயது இருக்கும். நல்ல ஸ்லிம்மாய், வயது தெரியாமல் இருந்தார். இருந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் எந்த அறையை அவருக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று கேட்டோம். இரண்டு அறைகளில் பால்கனி உ...

எங்கும் நிறைந்தவன் பாலகுமாரன்.

Image
பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம் . முதன் முதலில் ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்து மிரண்டு போயிருந்தேன் . சிறுகதையின் பெயர் நியாபகமில்லை . மனைவி கர்ப்பம் . காரணம் அவளுடய கள்ளக்காதலன் . அவள் கலைக்க சொல்கிறாள் . ஏன் என்று கேட்டதற்கு “ அந்த பையன் கருப்பு ” என்கிறாள் . கருக்கலைப்பில் இறக்கிறாள் . அவளது இறுதி ஊர்வலத்தில் ரோட்டோரம் நின்று அழும் அந்த கள்ளக்காதலனையும் பாடை சுமக்க அழைத்துகிறான் கணவன் . ப்பா .. என்ன ஒரு கதை என்று மிரண்டு போய் பாலகுமாரனின் அத்தனை நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன் . எனது தலைவன் சுஜாதா தான் என்றாலும் இன்னொரு தலைவனாய் பாலகுமாரனை ஏற்றுக் கொண்டேன் . அத்தனை புத்தகங்களை படித்தேன் . இன்னும் வீட்டின் லைப்ரரியில் வைத்திருக்கிறேன் . ’ உனக்கென்ன சாமி பூதம் கோயில் குளம் ஆயிரமாயிரம் ஜாலியாய் பொழுது போகும் ... வலப்பக்க கடல் மணலை இடப்பக்கம் இறைத்திற...