கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -12
சினிமா அவ்வளவுதான் இனி அது மெல்லச் சாகும் என்று சொல்லும் போதெல்லாம் ஓர் புதிய டீம் வந்து எல்லாவற்றையும் தலைகீழாய் போட்டு புரட்டி புத்துயிர் கொடுத்துவிடும். ஒரு தலை ராகம், புது வசந்தம், சேது, காதல், பீட்சா, என பெரிய லிஸ்டே இருக்கிறது. அது போலத்தான் சினிமாவை நம்பி வரும் புதியவர்களும். புதியவர்கள் என்றவுடன் இளைஞர்கள் என்று தோன்றினால் அது தவறு. சினிமாவில் எந்த அளவிற்கு இளைஞர்கள் வருகிறார்களோ அதே அளவிற்கு 50ஐ கடந்தவர்களின் வரவும் அதிகம். அந்த காலத்துல எம்.ஜி.ஆரே 40க்கு மேலத்தான் வந்து ஜெயிச்சாரு. எனக்கு என்ன 45 ஆறது. அட்லீஸ்ட் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆயிட மாட்டேனா? என்ற நம்பிக்கையோடு தினம் ஒவ்வொரு ஆபீஸாய் ஏறி, தன் போட்டோவை கொடுத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டரை கைக்குள் போட்டுக் கொள்ள மாதத்தில் ஒருவர் என முறை வைத்து சரக்கடித்து, நட்பு கொண்டாடி, சரக்கின் நன்றிக்காக, அவர் கோ டைரக்டரிடம் அறிமுகப்படுத்திவிட, சிகப்பாய் இருந்தால் கோயில், கல்யாணம், ஆபீசர், கொஞ்சம் வசனம் பேச வரும் என்றால் டாக்டர் போன்ற கேரக்டர்கள் கிடைக்கும். இப்படி பல லாபி செய்து கிடைக்கும் வாய்ப்பை டயலாக் ஒழுங்காய் ப...