கொத்து பரோட்டா 2.0-61
கொத்து பரோட்டா 2.0-61 மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக...