Thottal Thodarum

Jul 18, 2018

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15
தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான்.   ஆனால் அதே நேரத்தில்  டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார்? என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போய் விட்டது. அதனால் இன்னமும் விலை குறைத்து ஆட்களை உள்ளே இழுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் நிலையில் தியேட்டர்காரர்கள் விலையை ஏற்றி வாங்குவதாகவும், அதை குறைப்பதாக சொல்லுவதும் செம்ம காமெடியாய் இருக்கிறது.

தொடர் பெரிய படங்களின் தோல்வியின் காரணமாய் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், எம்.ஜி கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்ட படியால் நேரிடையாய் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்க முடிவு செய்து தான் இந்த கோரிக்கை. ரஜினி படமோ, விஷால் படமோ வெளிவரும் போது யாரும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்று கூவப் போவதில்லை. ஏனென்றால் இத்தனை நாள் மறைமுகமாய் வாங்கிக் கொண்டிருந்த அதிக விலையை, லீகலாய் வாங்க ஏதுவாக ஏதாவது சான்ஸ் இருக்கிறதா என்பதற்காக வழிதான் இது.

தியேட்டர்காரர்களுக்கு தெரியும் நிச்சயம் அரசு தன் கேளிக்கை வரியை விட்டுக் கொடுக்காது என்று. மற்ற கோரிக்கைகள் எல்லாம் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்டது. அதை சட்டமாக்க வேண்டியதைத் தவிர பெரிய கோரிக்கை  கேளிக்கை வரி மட்டுமே. தியேட்டர்களுக்கும் க்யூப் போன்ற நிறுவனத்திற்கும் இடையே உள்ள அக்ரிமெண்ட் காரணமாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கும் வி.பி.எப் தொகை மற்றும் விளம்பர கட்டணம் காரணமாகவும் ஆட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் அவதிப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் வெளிவர தயாராக இருக்கும் ஆட்கள்.  ஆனால் வெளிவந்தால் சில பல லட்சங்கள் நஷ்ட ஈடு கொடுத்தால் மட்டுமே வெளிவர முடியும் என்பதால் ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று அமைதியாய் இருக்கிறவர்கள் ஒரு பக்கம். எங்களூக்கு படம் தர மாட்டேன் என்கிறீர்கள் என்றால் நாங்கள் தியேட்டரே நடத்தவில்லை என்று அறிவிப்புக்கு பின்னால் க்யூப் போன்ற நிறுவனங்களின் கீ இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன் பத்து நாட்கள் தியேட்டரை மூடி வைத்ததினால் பார்வையாளர்களை இழந்து அவர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வர பட்ட பாடு அவர்களுக்கு தெரியும். தெரிந்தே இந்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த மார்ச் மாதம். இந்த மாதத்தில் சாதாரணமாகவே மக்கள் தியேட்டருக்கு வருவது மிகவும் குறைவாகவே இருக்கும் மாதம். பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிட்சை என்பதால் தியேட்டர்களுக்கு வரும் அதிகப்படியானவர்கள் ஆப்ஸென்ட். புதிய படங்கள் வேறு வராத காரணத்தால் எல்லா திரையரங்குகளீலும் முப்பது பெரும் நாற்பது பேரும் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெல்ல குறைந்து 5 -15 பேர் என்றாக, ஏசிக்கு கூட காசு வராது என்பதால் ஸ்டரைக் அறிவித்திருக்கிறார்கள்.

இம்மாத இறுதியில் விஷால் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையிட்டிருக்க, ரஜினி படம் வேறு லிஸ்டில் இருக்க, ஐபிஎல் வேறு சென்னை சூப்பர் கிங்க்ஸோடு களமிறங்க காத்திருக்க, மக்களுக்கு எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லை. பட்.. இந்த லிஸ்டை மீறீ படங்கள் வராமல் போனால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் வரும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு, யூட்யூப், அமேசான், நெட்ப்ள்க்ஸ் என மாறி விடுவார்கள். இழப்பு இரண்டு பக்கத்துக்கும்தான். இதை புரிந்து கொண்டோ, அல்லது அமிக்கபிள் செட்டில்மெண்ட் ஆகி, இம்மாத இறுதிக்குள் மீண்டும் தங்கள் வேலைகளை ஆரம்பித்தே ஆக வேண்டிய கட்டாயம் இரு பிரிவினருக்கும் இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் தியேட்டர் சீட் குறைப்பு, லைசென்ஸிங் முறை, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என பல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் மிகத் தேவையான விஷயமே.. அத்தனைக்குமான தீர்வை நோக்கித்தான் இந்த போராட்டம் என்றால் அது நல்லதே.. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு பிம்பிலாக்கிபிலாக்கி போராட்டமாய் போய்விடக்கூடிய எல்லாம் வாய்ப்பும் இருக்கிறது.



Post a Comment

1 comment:

Jayaprakash said...

Rajini OK, but Visual பெரிய நடிகர் ஆனது யோப்பா