சமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள்.
மிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன்.
முதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்கள். இட்லி மீன் குழம்பு.. ஓக்கே.. ஆசம்..ஆசம் என்று அதை ஊற்ற, நிஜமாகவே ஆசம். தோசையும் நல்ல முறுகலாய் வர, அதையும் மீன் குழம்போடு ஒரு ஊறவைத்து சாப்பிட்டாகிவிட்டாயிற்று.
பள்ளிப்பாளையம் சிக்கன். நல்ல காரத்துடன், இடையிடையே நெருடும் தேங்காயோடு, நன்கு வெந்திருந்ததும், சுவையை மேலும் கூட்டியது. பினிஷிங் டச்சாய் கலக்கி என்றேன். வெளிர் மஞ்சளில் நல்ல வெங்காயம் போட்ட தளதள கலக்கி வர, ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு பில் கேட்டால் நூற்றிச் சொச்சம் என்றார்கள்.
ரெண்டொரு நாள் கழித்து, நண்பர் ஒருவர் சாப்பிடக்கூப்பிட, அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் லஞ்சுக்கு சாவித்ரி மெஸ். சுமாரான கூட்டமிருந்தது. வெஜ் அண்ட் நான் வெஜ் மீல்ஸ் வைத்திருக்கிறார்கள். சிக்கன்,மீன் குழம்பு அருமை. மட்டன் குழம்பு கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. டேஸ்ட் ஓகே. ரசம் வழக்கம் போல கொங்கு நாட்டு அதே சுவை. லேசான புளிப்புடன். இம்முறை வஞ்சிரம் மீனும், மட்டன் சுக்காவும். பள்ளிப்பாளையம் சிக்கனும் ஆர்டர் செய்தோம். மட்டன் சுக்காவும் நல்ல சுவையுடன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்டாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.
பட் நல்ல திருப்தியான சாப்பாடு. என்பது ரூபாய்க்கு மீல்ஸ் இரண்டு நான் வெஜ் சைட்டிஷ் என எல்லாம் சேர்த்து முன்னூறுக்குள்தான்.
கோவையில் இண்டஸ்ட்ரியல் கிச்சன் வைத்திருந்தவர்கள் இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல சுவை. மலிவான விலை. மிக சுத்தமான சூழ்நிலை என தரமாய் இருக்கிறது. கோவை சைட் சாப்பாட்டை சாப்பிட அநியாயமாய் ஈரோடு குப்பண்ணாவில் சொத்தை இழப்பதை விட, இங்கே மினிமம் கியாரண்டி.
கோவை சாவித்ரி மெஸ்
பாஸ்போர்ட் அலுவலகம் அருகில்
பரணி ஸ்டூடியோ முன் தெரு.
சாலிகிராமம்.
பரணி ஸ்டூடியோ முன் தெரு.
சாலிகிராமம்.
Post a Comment
1 comment:
cable JI
Ore NON Veg samasaraam irukku , ennai pondra athi theevira saiva makkalaiyum konjam kavaningal
Post a Comment