Posts
Showing posts from September, 2018
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?
- Get link
- X
- Other Apps
இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும், முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என...
சாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி
- Get link
- X
- Other Apps

பிரியாணிக்கடை என்றதும் ஒரு விதமான சலிப்பு கூட ஏற்படும் அளவுக்கு சென்னையெங்கும் பிரியாணி கடைகள். ஹைதராபாத் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, ஆற்காடு பிரியாணி, என வகை வகையாய் பிரியாணி கடைகள். மக்களின் பாஸ்ட் புட்டாக மாறிவிட்டது பிரியாணி கடைகள். இத்தனை பிரியாணிக்களில் வெகு சில பிரியாணிக்களே பிரபலம். அதற்கு காரணம் அதன் தனிச்சுவையும் சர்வீஸும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான பிரியாணிப் போட்டிக் காலத்தில் புதிய பிரியாணிக்கடை பக்ரா பிரியாணி. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறாமல், இடது பக்கம் சர்வீஸ் லேனில் நுழைந்தால் சின்னதாய் இருக்கிறது இந்த பிரியாணிக்கடை. ப்ளாக் அண்ட் வொயிட் காம்பினேஷனில் வித்யாசமான லுக்கில் ஒர் பிரியாணிக்கடை. டேக்கவே மட்டுமே அங்கு இருக்கிறது. அதனால் சூடான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோலா, என கலந்து கட்டி வாங்கி வந்தோம். அலுவலகத்துக்கு வந்து முதலில் சாப்பிட ஆரம்பித்தது மட்டன் பிரியாணியை. நன்கு வெந்த மட்டன் பீஸ்கள். நெஞ்சைக் கரிக்காத மசாலா என ஜமாய்த்தது. உடன் தொட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்த கத்திரிக்காய் அட்டகாசம். அதன் சுவை பிரியாணியை இன்னும் ...
கொத்து பரோட்டா 2.0-66
- Get link
- X
- Other Apps
கொத்து பரோட்டா 2.0-66 Raju Kari Gadhi 2 முதல் பாகம் முழுவது சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. அதிரிபுதிரி வெற்றியின் காரணமாய் அதே தயாரிப்பாளர் இம்முறை மாமனார் மருமகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். நாகார்ஜுன், சமந்தாவைத்தான் சொல்கிறேன். வழக்கம் போல ஒரு தனி பங்களா. அதை விலைக்கு வாங்கி ரிஸார்ட் நடத்தும் மூன்று இளைஞர்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர் ஒரு பிகரை உசார் செய்து அறைக்கு போகும் போது வித்யாசமான அனுபவங்கள் கிடைக்கிறது. போர்ன் படம் பார்க்க விரும்பும் போதும், இன்னொரு இளைஞர் தன் காதலியுடன் ஸ்கைப்பில் அவரை டாப்லெஸாக காட்டு என்று கேட்கும் போதும், அமானுஷ்யங்கள் நடக்க, வியாபாரம் படுத்து விடும் என்று பயப்பட ஆர்மபிக்கிறார்கள். அப்போது வருகிறார் நம் நாகார்ஜுன். பேய் ஓட்டுகிறவர் என்று சொல்லாமல் அவரை மெண்டலிஸ்ட் என்கிறார்கள். பேசும் போதே எதிராளியின் மனங்களை படித்து, போலீஸுக்கு ஒரிஜினல் குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்குமளவுக்கு மிகுந்த திறமைசாலி. அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கேயிருப்பது பேய் தானா? அப்படியானால் ஏன் அது அங்கேயிருக்கிறது. கில்மா விஷயங்கள் நடக்கும் போது மட்டும் ஏன் ஆ...
கும்பகோணம் டூ சென்னை
- Get link
- X
- Other Apps
நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது. இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இரு...
சாப்பாட்டுக்கடை - கூரைக்கடை (எ) விக்னேஷ் மெஸ் - தேனி
- Get link
- X
- Other Apps

சமீபத்திய தேனி பயணத்தில் முக்கியமாய் போக வேண்டிய இடங்கள் என்று லிஸ்டில் முதலிடம் இருந்தது இந்த உணவகம். நண்பர்கள் நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். காலை உணவை ஒர் அருமையான 50 வருட பாரம்பரிய குட்டியூண்டு மெஸ்ஸில் முடித்துவிட்டு, வெளிப் பயணங்களை முடித்துக் கொண்டு சரியாய் ஒரு மணிக்குள் போய் சேர்ந்தோம். அந்த மெஸ்ஸைப் பற்றி விரிவாய் தனி பதிவில். ”சீக்கிரம் போகலைண்ணா.. காலியாயிரும்ணே” என்று சொல்லிக் கொண்டே வண்டிய வேகமாய் விரட்டினார் மேற்கு தொடர்ச்சி மலை “அரண்மனை சுப்பு”. போகிற வழியில் அப்படத்தின் இயக்குனர் டீம் லீஸுக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டை காட்டினார். கொஞ்சம் தூரத்தில் விக்னேஷ் மெஸ். ஹை வே ரோட் கடை போன்ற தோற்றத்தில் தான் இருந்தது கூரைக்கடை என்கிற விக்னேஷ் மெஸ். நெருங்க நெருங்க. கோழியின் வாசனை மூக்கை துளைத்தது. சீக்கிரம் போயிருந்த படியால் கூட்டமில்லை. சாப்பாடு என்றதும் தலைவாழை இலை போடப்பட்டது. ஒரு கூட்டு, தயிர் வெங்காயம், வழக்கம் போல நான் வெஜ் உணவகப் பெரியல். நாட்டுக்கோழி ஆர்டர் செய்தோம். நல்ல தொக்காய் வந்தது. நல்லெண்ணெய் மணம் வேறு கமகமத்தது. சாதம் பரிமாறப்ப...
பேஸ்புக் போஸ்டும் ஒலக சினிமாவும்
- Get link
- X
- Other Apps
சினிமா நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். சில பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பும் போது சமீபத்தில் வெளியாகி பேஸ்புக்கில் சூப்பர் ஹிட்டாயிருக்கும் ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச்சு வந்தது. எப்படி? என்றார். ”நல்ல படம்” என்றேன். ”நீங்க பல படம் பாக்குறவரு நீங்களே நல்ல படம்னு தான் சொல்றீங்க” “அது என் கருத்துங்க. ஏன்னு நான் கட்டுரை எழுதியிருக்கேன்” ”எனக்கெல்லாம் உக்கார முடியலை. என் பொண்டாட்டி வாங்க போலாம்.. வாங்க போலாம்னு நச்சு. கிளம்பலாம்னு பார்த்தா பக்கத்து சீட்டுல பிரபல விமர்சகர் ஒருத்தர் நாலாவது வாட்டி பாக்குறதா சொல்லி உட்கார்ந்திருந்தாரு. எழுந்தும் வர முடியலை. வெளிய வந்து படம் பார்த்த நாலைஞ்சு நண்பர்கள் கிட்ட கேட்டா மொகத்த ஒரு மாதிரி வச்சிக்கிட்டு “ம்ம்ம்”னு தலையாட்டினாங்க. அது நல்ல படம் இல்லைனு சொல்ல வரலை. எனக்கு செட்டாகல. காக்கா மூட்டைய பாராட்டுனாங்க.. அத பார்த்த போது எனக்கு பிடிச்சிது. இது பிடிக்கலை அதுக்காக எனக்கு பிடிக்கலைன்னு கூட சொல்லுற சுதந்திரம் இல்லாம போயிருச்சு. சொன்னா நம்மளை முட்டாள். அறிவிலி. சினிமாவுக்கே லாயக்கில்லை. அப்படின்னு சொல்லி அவமானப்படுத்துறாங்க. உன...
சாப்பாட்டுக்கடை - கருப்பையா மெஸ்
- Get link
- X
- Other Apps

மெஸ் என்கிற பெயரில் எதை ஆரம்பித்தாலும் தமிழகத்தில், குறிப்பாய் சென்னையில் ஏகோபித்த ஆதரவை தரத் தயாராக இருக்கிறார்கள் என்றதும் ஏகப்பட்ட மெஸ்கள்முளைத்துக் கொண்டேயிருக்கிறது. அதைப் போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். சிவகங்கை மாவட்டத்துக்காரர்களின் உணவகம் என்றதும் நாக்கு சப்பு கொட்ட ஆரம்பித்தது. ஃபேம் நேஷனல் மாலில் உள்ளே அமைந்துள்ள இந்த உணவகத்தின் மெனு கார்ட் போட்டைப் பார்த்ததும் உள்ளே போகத் தூண்டியது. பிச்சிப் போட்ட கோழி, வஞ்சிரம் மீன், நண்டு, மட்டன் சுக்கா என லிஸ்ட் போடப்பட்டிருக்க மெனுவில் சிக்கன், மட்டன், மீன் என மீல்ஸ் வகைகள். கூடவே சீரக சம்பா மட்டன் பிரியாணி என பரந்து விரிந்த மெனுக்கள். ஒரு மட்டன், ஒரு சிக்கன், மீன் மீல்ஸ் ஆர்டர் செய்தோம். சிக்கன் மீல்ஸில் சிக்கன்சுக்காவும், மட்டன் மீல்ஸில் சுக்காவும், மீன் மீல்ஸில் வஞ்சிரம் மீனும், அயிரை மீன் குழம்பும் வந்தது. நன்கு வெந்த சின்ன துண்டுகளோடு மட்டன் சுக்கா நல்ல காரத்துடன் வைத்தார்கள். உடன் கொடுக்கப்பட்ட, மட்டன், சிக்கன், மீன் கிரேவிக்கள் கெட்டியாக இருந்தது. மிளகு அதிகம் போடப்பட்டிருந்தாலும் அந்த கார...
கொத்து பரோட்டா 2.0-65
- Get link
- X
- Other Apps
கொத்து பரோட்டா 2.0-65 கந்து வட்டி, காரணமானவர்களை அரஸ்ட் செய் என்று கூக்குரலிட்டு ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி, பிரச்சனைக்குரிய படங்களுக்கு போட்டிருந்த தடை விலகியது. பஞ்சாயத்துக்களின் வீரியம் குறைந்தது. இதனிடையில் விஷால் திடீர் அரசியல் பிரவேசம் திரையுலகினரை கலகலக்க வைத்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் என அடுத்தடுத்து ஒவ்வொரு பதவியாய் போட்டியிட்டு பெற்றவர் இப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவுக்காக போட்டியிருகிறார். கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, வரும்.. ஆனா வராது என்கிற ரீதியில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் போர் வரவில்லை என்றெல்லாம் வழக்கம் போல பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் அறிவிப்புகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ரஜினி இவர்களுக்கிடையே விஷாலின் இந்த திடீர் அரசியல் நுழைவை பலர் ஆதரிக்கவும் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே விஷாலை பதவி விலக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் திரைப்பட த...
Sudani From Nigeria - Malayalam film
- Get link
- X
- Other Apps

சூடானி ஃபர்ம் நைஜீரியா ஒவ்வொரு வாரமும் மலையாள படங்களைப் பார்க்கும் போது, எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படியான கதைக்களன்கள் கிடைக்கிறது என்ற யோசனை வருவதை தவிர்க்கவே முடிவதில்லை. பூமரம் ஒரு வகையான படமென்றால் சென்ற வாரம் பார்த்த சூடானி ஃபர்ம் நைஜீரியா இன்னொரு வகை. அதற்கு இன்னொரு காரணமாய் நான் நினைத்தது. அவர்களுடய விளையாட்டு, கலாச்சாரம். ஒரு பெரிய வரம். மலப்புரத்தில் உள்ள ”Myc Accode” எனும் டீமில் ஏழு மேட்ச் விளையாடி ஹைஜீரியாவிலிருந்து ராபின்சன் எனும் புட்பால் வீரனை அழைத்து வருகிறார்கள். அந்த டீமின் மேனேஜர் மஜீத். முப்பதுகளை கடந்து, இன்னமும் திருமணம் ஆகாமல் இருப்பவன். காரணம் பெரிய விளையாட்டு வீரனாகவும் இல்லாமல், நிரந்தர வருமானம் இல்லாதவனாகவும் இருப்பது ஒர் முக்கிய காரணம். ராபின்சன் என்னதான் தான் நைஜீரியாவிலிருந்து வந்தவன் என்று சொன்னாலும் ஊர்காரர்களைப் பொறுத்தவரை அவனைப்போன்ற ஆட்களை சூடானிலிருந்து வந்தவன் எனக் கூறி சூடானி என்றே அழைக்கிறார்கள். சிறந்த வீரனாய் இருக்கும் ராபின்சனுக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு, கால் முறிந்து போகிறது. டீம், மற்றும் மஜீத்தின் நிதி நிலை மிக மோசமாய்...