தமிழ் சினிமா இன்றைய நிலை.
தமிழ் சினிமா இன்றைய நிலை. புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களானால், ரெண்டு மாதத்திற்கு முன் என்ன நிலையோ அதை விட கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ரிலீஸான மெர்க்குரி, முந்தல் போன்ற படங்களின் வசூல் நிலை மோசம் என்பதுதான் தகவல். படம் வெளியான பிறகு அதன் தகுதிகேற்ப படத்தின் வசூல் அமைவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பிரபல இயக்குனரின் படம் ஒன்று வெளியாகும் போது அட்லீஸ்ட் மல்ட்டிப்ளெக்ஸுகளிலாவது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட அம்மாதிரியான விஷயம் நடக்க வில்லை. என்பதை பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது. இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் தியா, பக்கா, பாடம் ஆகியவை. கூடவே ரெண்டு மலையாள படங்கள், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ். மக்கள் திரைப்படம் பார்க்கவே விரும்பவில்லையோ, என்று சந்தேகப்படும் காலத்தில், அவெஞ்சர்ஸ் வெளியான அத்துனை திரையரங்குகளிலும் காலைக் காட்சியே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். ஆனால் வெளியான தமிழ்சினிமாவின் நிலை மிகப் பரிதாபம். படத்தின் கண்டெண்ட் ஒரு பக்கம் நன...