நடிகையர் திலகம் வெற்றியா?
நடிகையர் திலகம் வெற்றியா? நடிகை சாவித்திரியின் வாழ்கையை பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்ட போதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் காஸ்டிங் பற்றி தெரிய வர, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்து கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான காஸ்டிங் என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது அவரது வாழ்க்கை பயணத்தில் ஏறி இறங்கிய அத்துனை சம்பவங்களையும சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாய் நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும்? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது. ஏனென்றால் பயோ பிக் எனும் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கையாளும் லாவகம் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களை காட்டவே முடியாது. இந்திய அள...