Posts

Showing posts from 2019

Gantumoote - காதலெனும் சுமை.

Image
எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால்  ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய்.  இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான்.  சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை ப...

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்

Image
  ரொம்ப வருடங்களுக்கு முன் திருச்செந்தூரில் மணி அய்யர் கடையில் டிபன் சாப்பிட்டிருக்கிறேன். மணி அய்யர் ஓட்டலை நினைத்தவுடன் சட்டென நாக்கில் சாம்பார் நியாபகம் வந்துவிடும் எனக்கு. சென்னையில் பத்து நாட்களுக்கு முன் ஆரம்பித்திருக்கிறார்கள். அசோக்நகரில்.  ஆர்வமாய் போன வாரம் போன போது க்ளோஸ் ஆயிருச்சு என்றார்கள். நேற்றைக்கு நண்பருடன் போனேன். 10.30 மணிக்கு நல்ல கூட்டம். சாம்பாரின் வாசம் மூக்கை துளைத்தது.  நானும் நண்பரும் போய் உட்கார்ந்தோம். எதில ஸ்டார்ட் பண்ணலாம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் “பொங்கல் இருக்கா? “ என்றேன். “இல்லீங்க ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்” என்றார்கள். ”சரி ஆளுக்கு ரெண்டு இட்லி கொடுங்க” என்று ஆர்டரை ஆரம்பித்தோம். இட்லி ரொம்பவும் மிருதுவாக இல்லாமல் இருந்தது கொஞ்சம் குறைதான். பட் சூடான சாம்பார். மூன்று சட்டினிகள், கூடவே பூண்டு போட்ட, மிளகாய்பொடி. அதற்கு தனியாய் பணம் எல்லாம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக் கொள்ளலாம். சாம்பாரையும், பூண்டு மிளகாய் பொடியும் ஆசம். அடுத்ததாய் நல்ல மொறு மொறு ரவா தோசை. நிஜமாகவே ராவா தோசை என்று சொன்னால் மிகச் ...

Meeku Mathrame Chepputha

Image
தெலுங்கு படங்கள் இப்போதெல்லாம் டெம்ப்ளேட்டுகளிலிருந்து விலகி படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான ஒன்றுதான் இந்த “மீக்கு மாத்ரமே சொப்புதா” அதாவது ரகசியங்களை சொல்லும் போது உனக்கு மட்டுமே சொல்லுறேன். யார் கிட்டேயும் சொல்லிராதனு சொல்லி சொல்லுவாங்க இல்லை அதான் படத்தோட தலைப்பு. ராகேஷ் ஒர் மொக்கை டிவி சேனல் ஹோஸ்ட். இருந்திருந்து போராடி ஸ்டெப்பி எனும் டாக்டரை கரெக்ட் செய்து, வீட்டில் சம்மதிக்க வைத்து கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி, இன்னும் ரெண்டொரு நாளில் கல்யாணம் என்கிற போது. சினிமாவில் நடிக்க ஆவலாய் இருந்த காலத்தில், படமாக்கப்பட்ட ஒரே காட்சியான ஹனிமூன் பெட்ரூம் காட்சி  லீக் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கண்டீஷன்களோடு காதலிக்கும் ஸ்டெப்பிக்கு தெரிந்துவிட்டால் தன் திருமணம் ஹோகயா என்று, வீடியோவை அழிக்கும் முயற்சியில் தன் உயிர் நண்பன் காமேஷ், மற்றும் ஹேக்கர் நண்பனோடு அலைகிறான். வீடியோவை அழித்தானா இல்லையா? என்பது மட்டுமல்ல கதை. க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டும் தான் கதை. ரொம்ப நாளாச்சு ஃப்ரீஸியாய் ஒர் காமெடி படம் பார்த்து. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால் படம் நெடுக புன்ம...

இரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்

Image
இந்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வெப்சீரீஸுகளுக்கு மத்தியில் தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான வெப்சீரீஸ் என்றால் அது ஆட்டோ சங்கர் மட்டுமே. தொடர்ந்து பல தமிழ் வெப் சீரீஸ்கள் வந்தாலும் அவைகள் எல்லாமே டிவி சேனலில் காசு வாங்கிக் கொண்டு பணத்தை சுருட்டி எடுத்துக்கொடுத்தது போல் தான் இருக்கிறதே தவிர, வெப் சீரீஸுக்கான மேக்கிங், எழுத்து என எந்த மெனக்கெடலும் இல்லை. பெரிய நிறுவனங்கள். பெரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றும் ஒப்பேற மாட்டேன் என்கிறது தமிழ் வெப் சீரீஸ் உலகம். அந்த வகையில் புதியதாய் வந்திருக்கும் இந்த இரு துருவம் வெப் சீரீஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இன்ஸ்பெக்டர் விக்டரின் மனைவி காணாமல் போய் ஆறு மாதமாகிறது. அவனுக்கு ஒரே மகள். மனைவியை அவர் கொலை செய்துவிட்டு காணாமல் நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அந்நேரத்தில் நகரில் ஒர் கொலை நடை பெறுகிறது. அது தொடர் கொலையாய் மாறுகிறது. தொடர் கொலை செய்பவன் யார்? அவன் ஏன் இப்படி செய்கிறான்...

சாப்பாட்டுக்கடை - குழம்புக்கடை

Image
குழம்புக்கடை என்று பெயர் பார்த்ததும், சேலத்தில் ஒரு தெருவெங்கும் இம்மாதிரியான குழம்புகள் விற்கும் கடை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போலா? என்று யோசனையுடன் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். ஆம். அது போலத்தான். கறிகுழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, எறா குழம்பு, சிக்கன் மசாலா, கறி சாப்ஸ், சிக்கன் கைமா, கறி தோசை, சிக்கன் கறி தோசை, தலைக்கறி, போட்டி,  இட்லி, பரோட்டா, இடியாப்பம், வடைகறி, சாம்பார், வத்தக்குழம்பு என இரவு நேரங்களில் வரிசைக்கட்டுகிறார்கள் என்றால், பகலில் வெஜ் மற்றும் நான் வெஜ் சாப்பாடும் போடப்படுகிறதாம் சிக்கன் கறி தோசை அட்டகாசம். முட்டையோடு அடித்து ஊற்றப்பட்ட சிக்கன் கைமா நல்ல எண்ணையில் முறுகலாய் எடுக்கப்பட்டு, உடன் தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவியோடு ஒரு விள்ளல் வைத்தால் அட அட அட.. நிஜமாகவே டிவைன் தான்.  முட்டை லாபா நன்கு சாப்டான பரோட்டா மாவில் செய்யப்படுகிறது சூடாக சாப்பிடும் போது அபாரமான சுவை. உடன் மட்டன்குழம்பு ஆசம். ஞாயிறுகளில் ஸ்பெஷல் அயிட்டங்களாய், நண்டு, எறால், சுறா என நான் வெஜ் குழம்பு வகைகள் வரிசைக் கட்டுகிறது. எந்த...

ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.

Image
ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும். செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே.   திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது? இண்டர்நெட் ஏது?, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள்? அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா? என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார்.   அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர...

நான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு

Image
இணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும்? என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது.  புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க்  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url இத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங் இரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform?usp=pp_url

அத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x

Image

மக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x

Image

திருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆர். | Chat With X| Bhaskar Sakthi

Image

சாப்பாட்டுக்கடை - அக்கா கடை

Image
சென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது.  அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள். மாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள். அடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் க...

பொன்னி

Image
வெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.  பொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம். இன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில்  தங்க விலையுர்ந்து  கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க். கிபி  இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது? எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது? கோலார் தங்க வயல், அதன்  பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்...

Igloo- அன்பின் கதகதப்பு

Image
Igloo- அன்பின் கதகதப்பு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட...

Post Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்

Image

செலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள். அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்த...

Article 15

Article 15 ஆயுஷ்மான் குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும் கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின் கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை. மூன்று ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப் செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்க...

எண்டர் கவிதைகள் -28

உன்னைக் காண ஓர் நீண்ட பயணம் ஆயிரம் காரணங்கள் எனை வரவேற்க நீ இல்லாமல் போனதற்கு மீண்டுமொரு நீண்ட பயணம் உனைக் காண நீ இல்லாமலிருக்க ஆயிரம் காரணங்களிலிருக்குமென்று  எதிர்பார்த்தே பயணிக்கிறேன். அன்புதான் எத்தனை வலியை சுமக்க பழக்குகிறது.

எண்டர் கவிதைகள் -27

அன்பு எங்கேயும் போகவில்லை. உனக்கான பிரவாகமாய்  என்னுள்ளேயே இருக்கிறது அது உனக்கு தெரிந்தே இருந்தாலும்,  கிடைக்கபெறும் அன்பின் மிகையால்  என் அன்பை தவிர்க்கிறாய் தூக்கிப் போடுகிறாய். அது ஏன் என என்னால்  புரிந்து கொள்ள முடிவதற்கான காரணம் அன்பு. எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை, என்றைக்கும் உன்னை நேசிப்பதை கைவிடுவதுமில்லை.

N.G.K - கேள்வியின் நாயகன்.

N.G.K - கேள்வியின் நாயகன். என்.ஜி.கே படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட பெரிய டெக்னீஷியன்கள் கூட்டமே என்னை செம்மத்தியாய் ஏமாற்றி விட்டார்கள் என்று கடுப்பேறி விட்டது. காரணம் படத்தில் உள்ள அபத்தங்களின் அணிவகுப்பு. முழுக்க முழுக்க ஸ்பாயிலர் பதிவு. படம் பார்க்காதவங்க ஓடி போயிருங்க. படத்தின் முதல் காட்சியில் இடி மின்னல்களுக்கு இடையே மண்ணிலிருந்து புறப்படத் தாயார் போல எழுந்து கொள்கிறார். பின்னர் வீட்டின் அருகே பைக்கை வைத்துவிட்டு, தன் வீட்டிற்கே பைப் பிடித்து ஏறுகிறார்?. ஏதாவது தீவிரவாத செயலில், புரட்சி கூட்டத்தின் தலைவனா? என்று பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. எம்.டெக், பிஎச்டி படித்துவிட்டு, ஆர்கானிக் விவசாயம் பார்க்கிறாராம். நட்ட நடு ஹாலில் அம்மாவின் முன்னால் ஒரே குல்பியை ஆளுக்கொரு முறை சப்பிக் கொள்கிறார்கள். என்.ஜி.கே இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இவரால் நான் ஆர்கானிக் வியாபாரம் படுத்துவிட்டதால் எல்லோரும் சேர்ந்து இவர் ஆர்கானிக் விவசாயம் செய்ய கூடாது என்கிறார்கள். அதனால் இவரின் வயல் வெளிகளை விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கெடுக்கிறார்கள். வீட்டை எல்லாம் அடித்து நொறுக்குகிறார...

எலி - என் கதை.

பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன். வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.” “கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன். ”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார். ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோட...

சாப்பாட்டுக்கடை -கும்பகோணம் சுப்பையா மெஸ்

Image
ஒரு காலத்தில் பவன் என்று சைவ ஓட்டல்களுக்கு பெயர் வைத்தால் பெரிதாய் கல்லா கட்டலாம் என்று நினைத்து ஏகப்பட்ட பவன்கள் திறந்தார்கள். அதில் தரமானது மட்டுமே நிலைத்திருக்க மற்றவை வழக்கம் போல.  அது போலத்தான் மெஸ் எனும் தாரக மந்திரத்தை தற்போது யார் வேண்டுமானாலும் வைத்து பணம் பண்ண பார்க்கிறார்கள். ஆனால் இங்கேயும் அதே விஷயம் தான் தரமும் பணமும் மட்டுமே மெஸ்ஸின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வளசரவாக்கத்தில் ’கும்பகோணம் சுப்பையா மெஸ்” என்ற பெயர் பலகை என் ஆர்வத்தை தூண்டியது. முழுக்க முழுக்க சைவ மெஸ். காலையில் பேக்கேஜாய் பூரி, பொங்கல், இட்லி, வடை, கல்தோசை என வரிசைக்கட்டி டிபன் வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி, கொஞ்சம் பொங்கல் இது 45 ரூபாய்க்கு மினி டிபனும்,  மதியம் 60 ரூபாய்க்கு அட்டகாசமான அன்லிமிடெட் மீல்ஸ். ஒரு கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், காரக்குழம்பும், மோர் என சுவையான சாப்பாடு.  அதுவும் ஏசி ஹாலில். பொரியல் வகைகள் நாளுக்கு நாள் மாறுகிறது. வெஜிட்டேரியன் சாப்பாடு அதுவும் மெஸ்களில் அத்தனை சிலாக்கியமாய் இருப்பதில்லை. அப்ப...

உறுத்தல் - விகடன் சிறுகதை.

பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள். சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சுந்தர் மாமாவே தான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது. @@@@@@@@@@@@@@@ ”நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம...