ராமின் பேரன்பு
கற்றது தமிழ் , தங்க மீன்கள் , தரமணி என ராம் எடுத்த மூன்று படங்களிலும் நான் முரண்பட்டேயிருக்கிறேன் . ஆனால் என்றைக்கும் ராமின் படங்கள் பிடிக்காமல் போனதில்லை . படங்களின் மேல் விமர்சனங்கள் வைத்திருந்தேனேயன்றி , குற்றம் சாட்டியதில்லை . ராமின் படங்கள் விமர்சனங்களை மீறி என்னை அலைக்கழிக்காமலும் இருந்ததில்லை . ஆனந்தியை மறக்க முடியுமா? , பறவையே எங்கு இருக்கிறாயையோ ? ‘ நிஜமாத்தான் சொல்லுறியா ?” என்கிற அப்பாவி ஆனந்தியின் கேவலையோ மறக்கத்தான் முடியுமா ?. இன்றளவில் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பயணப்பாடலை காணவேயில்லை. ராமின் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம் தான் . அப்படியொரு அனுபவத்தை காண ராம் அழைத்த போது எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் தான் அமர்ந்தேன் . படம் ஆரம்பித்த முதல் ப்ரேமிலேயே நான் படத்துள் மூழ்கிப் போனேன் . “ நீங்க வாழுற வாழ்க்கை எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு என்னோட கதையக் கேட்டா புரியும் ” என்கிற வசனம் ஒலித்த போது பெரிதாய் பாதிக்கவில்லை . படம் முடிந்து வெளியே வரும் போது புரிந்தது . ஆம் .. நான் ஆசீர்வதிக்கப்பட்ட ...