Thottal Thodarum

Apr 25, 2019

விமர்சன சர்ச்சைகள்


விமர்சனச் சர்ச்சைகள்
சமீபத்தில் சர்சைக்குண்டான விமர்சன விஷயத்தை தடுப்பதற்காக அப்படத்தின் இயக்குனர் ஒரு வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்திருந்தார். ப்ளூ சட்டை மாறன் போன்றோர் எல்லாம் முட்டைப் பூச்சிப் போல, கொசு போன்றவர்கள் என்றிருக்கிறார். மூட்டைப் பூச்சி என்றால் நசுக்கிவிடுவேன்.கொசு என்றால் அடித்துவிடுவேன். அது போலத்தான் இவரும் என்கிறார். அதற்கு திரைத்துறையிடமிருந்து மூன்று விஷயங்களை கேட்கிறார். அது கூட அவருடய படத்திற்கோ, அவரது தயாரிப்பாளருக்கோ அல்ல..வருகிற வாரம் வெளியாகப் போகும் படங்களின் தயாரிப்பாளர்களுக்காக என்றிருக்கிறார்.

1. அவருக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் விளம்பரம் கொடுக்ககூடாது என்பது.

அது சாத்தியம். தயாரிப்பாளர் சங்கம் ஒன்று பட்டு இருக்கும் பட்சத்தில். இதுக்காகவாவது நடந்தா சந்தோஷம்தான். ஆனால் இன்னொரு பக்கம் விளம்பரம் கொடுத்ததுக்காகவே சொம்படிக்கிற விமர்சகர் ஒருத்தர் நல்லா கல்லா கட்டிட்டு இருக்காரு. அவரோட பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சிருச்சு. ஸோ.. பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படும் விமர்சனமாகிவிட்டது. இப்படித்தான் இணையம் வருவதற்கு முன் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட பல விமர்சனங்களின் மீதான மதிப்பு, இணையம் வந்த பிறகு சினிமா பின்னணியில்லாமல் மனதில் பட்டதை எழுத ஆரம்பித்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது என்பது நிதர்சனம்.


2. இனிமேல் அவரை அவரது சேனலில் விமர்சனம் செய்ய கோர்ட்டு ஏறி தடை உத்தரவு வாங்க வேண்டும்.
அதற்கு வாய்ப்பேயில்லை என்று அவர்கள் கொடுத்த கொலை மிரட்டல் புகார் போல நிச்சயம் தெரியும். அப்படியே வாங்கினாலும் அவர் கருத்து சொல்ல வேறோர் தளத்தை பயன்படுத்த தடை வாங்க முடியாது.  


3. வேறு யாரேனும் விளம்பரம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றிருக்கிறார்.


அது கற்பனைக்கும் எட்டாத சாத்தியமில்லாத விஷயம். அப்படியானால் அவரது சேனலுக்கு விளம்பரம் கொடுக்கும் யூட்யூபையே கேள்வி கேட்பதற்கு சமம். அது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனையால் அவரது விமர்சனம் ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. இதனால் அவர்களது விளம்பரதாரர்களுக்கு நல்ல விஷயம் தான்.

எந்த நிகழ்ச்சி அதிகப் பேரால் பார்க்கப் படுகிறதோ அதில் தங்கள் விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே வியாபாரிகள். மக்களிடம் சென்று சேருவது முக்கியம்.

வேறொரு தயாரிப்பு நிறுவனம் நடத்தும் விமர்சன சேனலில் விமர்சிப்பவருக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும் என்பதை வெளிப்படுத்த சமீபத்திய பட விமர்சனம் உதவியிருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் வாசிக்க்கும் போது சிங்கில் இல்லையாம் நடிகர்கள். மற்ற வாத்தியங்கள் எல்லாம் சிங்கில் இருக்கிறதாம். மற்ற வாத்தியங்கள் எல்லாம்  சின்க்கில் இருக்கிறது என்று எப்படி கண்டு பிடித்தார்?. எல்லா வாத்தியங்களையும் வாசிக்க தெரிந்தவரா? என்றால் இல்லை. அதே போல இவரும் தவரான தகவலைத் தருகிறார். அதாவது உன்னால் முடியும் தம்பி படத்தைப் பற்றி பேசி தூங்காதே தம்பி தூங்காதேவை சொல்லுகிறார். இது தவறு என்று தெரிந்திருந்தால் அந்த மூன்று நிமிட வீடியொவை ரீஷூட் பண்ண முடியும். அது தெரியாததால் அதை அபப்டியே அப்லோட் செய்திருக்கிறார். இது தான் இன்றைய விமர்சன உலகம். ப்ளாக் காலத்தில் கோச்சடையான் படத்தில் லொக்கேஷன்கள் எல்லாம் அற்புதம் என்றும், ஜிகர்தண்டா படத்தில் பாசமலர் பாடல் ஒலிக்கும் அந்த பின்னணியிசை அற்புதம் என்றும் எழுதியவர்கள் சூழ் உலகம் தான் இந்த விமர்சன உலகம். மரியாதையாக குறை சொல்லப்பட வேண்டும் என்று சொல்வதும். அதற்கான ஆக்‌ஷன் எடுப்பதை விட, மிக முக்கியமான விஷயம் இவர்கள் தரமில்லாதவர்கள் என்றால் அவர்களை பிரபலப்படுத்துவது.  ஸோ.. ஆகஷன் எடுக்குறது நல்ல விஷயம். அதை லாஜிக்கா எப்படி எடுக்கணும்னு யோசிக்கணும். லாஜிக்கோட.. :)


Apr 24, 2019

2018 – ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -4


கள்ளச்சிரிப்பு
கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் ஜீ5 தயாரிப்பில் வெளியான தமிழ் வெப் சீரீஸ். ஒரு வருஷம் தான் என்கிற அக்ரிமெண்டோடு வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்யும் பெண். ஆக்ஸிடெண்டலாய் தன் கணவனை கொலை செய்து விடுகிறாள். அதன் பின்னால் நடக்கும் கதைதான் இந்த சீரீஸ். இப்படி நேரிடையாய் சொன்னால் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. எனவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவர்களிடையே திருமணத்திற்கு பிறகும் உறவு இருக்கிறது. அப்பாவும் மகளுக்கும் புரிந்துணர்வு கிடையாது. அம்மாவிடம் பெண் தேவையேயில்லாமல் மாஸ்ட்ருபேஷன் பற்றி சைகையோடு பேசுவாள். கொலை செய்து விட்டு, ரொம்பவே பழக்கமானவள் போல நடந்து கொள்வாள். அவ்வப்போது பொருந்தாத இடங்களில் ‘ஓத்த’ ஃபக்’ போன்ற வசை வார்த்தைகளை அப்பனிடமே சொல்வாள். போன்ற பற்பல சுவாரஸ்யங்கள் வைத்திருப்பதாய் நினைத்திருந்தாலும், நிஜத்தில் கள்ளக்காதலனாய் நடித்தவரின் நடிப்பும். நான் லீனியரில் சொல்லப்பட்ட திரைக்கதையைத் தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஒன்றுமில்லை.
அமெரிக்க மாப்பிள்ளை
பெயரைப் பார்த்ததும் சபா டைப் நாடகத்தின் மறுவடிவமாக இருக்குமோ என்று யோசித்தபடிதான் பார்க்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தனமான டயலாக்குகள். கொஞ்சம் ரசனையான விஷுவல் என ஆரம்பித்ததும் ஓக்கே.. என்று தொடர்ந்த சீரீஸ். அமெரிக்காவிலிருந்து வரும் ஒர் இளைஞனுக்கு பெண் பார்க்க விரும்புகிறார்கள். அவனுக்கு அதை அவாய்ட் செய்ய எதையாவது சொல்ல வேண்டும் என்று தான் ஒரு “கே” என்று சொல்கிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு யார் அந்த பையன் என்று கேட்க, அவன் தன் நண்பனை சொல்லிவிடுகிறான். அதன் பின் என்ன ஆகிறது? ஏன் அவன் தன்னை கே என்று சொன்னான்? என சில பல ஈஸி டிவிஸ்டுகளோடு அலசுகிறார்கள். இந்தி, ஆங்கிலத்தை பொறுத்தவரை கே பிரச்சனைகளை அவர்கள் ஒர் பிரச்சனையாகவே பார்ப்பதில்லை. அதை தாண்டி வந்துவிட்டார்கள். இங்கே அது இன்னும் தொடப்படாத, முகம் சுளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இக்கதையிலும் உயர் ஜாதி குடும்பம். அவர்கள் ஏற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் தான் என்றாலும் அதை எப்படி அணுக வேண்டும். எப்படி இந்த பிரச்சனையை டீல் செய்கிறார்க்ள் என்பதை சுவாரஸ்யமாய் அதே நேரத்தில் வாத்தியார்த்தனமாய் இல்லாமல் ப்ரசெண்ட் செய்தது பாராட்டுகுரியது.
Mana Mugguru Love Story
சென்ற வருட பிக்பாஸ் ஹிட்டுக்கு பிறகு நவ்தீப் பிரபலமானவராய் வலம் வந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த யப் டிவி ஆப்பின் தெலுங்கு வெப் சீரீஸ். வழக்கம் போல முக்கோணக் காதல் கதைதான். பணக்கார முதலாளி. அழகிய குழப்பமான பெண். துறு துறு மிடில் க்ளாஸ் இளைஞன் என டெம்ப்ளேட் காதல் கதை கேரக்டர்கள் தான். பட் அதை பிரசண்ட் செய்த விதத்தில் தான் இந்த வெப் சீரீஸ் சுவாரஸ்யத்தை தந்தது.

காதல் கதைகளில் என்னத்த பெருசா என்கிறவர்களுக்கு தெலுங்கு மக்களின் சினிமா ரசனையை கருத்தில் கொண்டு அதிலிருந்து மெல்ல வெளியே கொண்டு வர மகா பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிலர் செய்கிற இம்மாதிரி முயற்சிகள் வரவேற்க்கப்பட வேண்டியவை. கொஞ்சம் ஆர்.பி.சவுத்ரி காலத்து கதைகளன் தான் என்றாலும் அழகிய  நாயகிகள் எப்போதுமே சுவாரஸ்யம். அதிலும் ப்ளீஸிங் விஷுவல்ஸோடு வரும் போது நிச்சயம் ஒரு முறை ஜஸ்ட் லைக் தட் பார்க்கலாம் என்கிற வகை சீரிஸ்
பல சீரிஸ்களில் இருக்கும் பிரச்சனை வெளிநாட்டு சீரிஸ்களில் வரும் பெண் கேரக்டர்களை அடிப்படையாகக் கொண்டு கேரக்டர்களை வடிவமைப்பது. அங்கே அவர்களது வாழ்வியல் வேறு. நிறைய விஷயங்களுக்கு காரணம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்திய படங்களைப் பொறுத்த வரை குடும்பம் சார்ந்த அமைப்பு தான் பெரும்பாலும் எனவே ஒவ்வொரு கேரக்டர் செய்யும் செயல்கள் எந்தவிதத்தில் நியாயம் அல்லது தவறு என்பதற்கான விளக்கம் தேவை.  உதாரணமாய் இந்திய அளவில் சீரியல் கில்லர் கதைகள் ஏன் அவன் சீரியல் கில்லர் ஆனான் என்கிற நியாயமான விளக்கம் சொல்லாத படங்கள் என்னதான் டெக்னிக்கலாய் அதிரிபுதிரி செய்திருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டதேயில்லை. காரணம் நம் நாட்டின் குடும்ப அமைப்பு. என்னதான் நாலு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தத்தாரியாய் போய்விட்டான் என்றாலும் ஏதோ ஒரு வகையில் கரித்துக் கொட்டிக் கொண்டாவது  அவனை ஆதரித்துக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்பு. அவன் சீரியல் கில்லர் ஆக ஒரு லாஜிக்கல் காரணம் தேவை. அப்படியில்லை என்றால் அது இந்திய அளவில் படங்களில் மட்டுமல்ல. சீரீஸ்களுக்கு ஒத்து வராது. எங்கிருந்தாவது சுடுகிறவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டிய ஒன்று.


Apr 22, 2019

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3


2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -3
நிலா நிலா ஓடிவா
பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ் வெப் சீரீஸ். ரொம்ப நாளாகவே இந்தியிலும், தெலுங்கிலும் கால் பதித்திருந்த வியூ எனும் ஸ்டீரிமிங் ஆப் தமிழில் ஆட்டத்தை ஆரம்பித்த சீரீஸ். ஒரு ட்ராகுலா பெண்ணுக்கும் நார்மலான இளைஞனுக்குமான காதல். ட்ராகுலா கூட்ட பிரச்சனை. அந்த ட்ராகுலாக்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஆபீசர் ஒருவர் அந்த ட்ராகுலாக்களை அழிக்க ஒர் தனிப்படை அமைக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியான ட்ராகுலாவுக்கும் பிரச்சனை வருகிறது பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. கதைக்களன் என்னவோ சுவாரஸ்யம் தான். ட்ராகுலாவாக நடித்த அழகு சுனைனாவும், ஸ்மார்ட் அஸ்வின் காக்கமானுவும் நடித்திருந்தாலும் மகா மொக்கையான காட்சிகள். சக்திமான் காலத்து சிஜிக்கள். காமெடி எனும் பெயரில் கருப்பு பெண், அசமந்த உதவியாளன். கொஞ்சமே கொஞ்சம் கூட மெனக்கெடாத திரைக்கதையமைப்பு. தூர்தர்ஷன் காலத்து படமாக்கல் என எல்லாமே சொதப்பல் தான். நந்தினியிடமிருந்து பெரிதும் எதிர்பார்த்தேன்.

இதே ஆஃப்பில் கேங்ஸ்டர் டைரி, கல்யாணமும் கடந்து போகும், மெட்ராஸ் மேன்ஷன், போன்ற அபத்த குறும்பட அந்தாலஜி சீரீஸ்களும், 403 போன்ற வெகு சுமார் இளைஞர்களுக்கான சீரீஸ் என்கிற பெயரில் எப்போதும் யாராவது கஞ்சா அல்லது சரக்கு பற்றி பேசிக் கொண்டோ, அல்லது பாவித்துக் கொண்டோ இருக்கிறார்கள். ஆண்கள் வீடுகளில் தொடை தெரியவும், பெண்கள் பின்புட்டம் தெரியும்படியான டைட்ஸில் காட்சியளிப்பது, சில கிஸ்சிங் காட்சிகளைப் பார்க்கும் போது லைட்டாக சுஸ்தாக வாய்ப்பிருக்கிறது. அதற்கு மேல் தொடர்வது போதை அதிகமானால் ஏற்படும் குமட்டலுக்கு சமம்.

Behind Closed doors
சென்ற ஆண்டில் நான் பார்த்த தரமாக, எழுதப்பட்ட, படமாக்கப்பட்ட, நடிக்கப்பட்ட வெப் சீரீஸ் அந்தாலஜி. மொத்தம் 12 பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒர் கதை. பெரும்பாலும் உரையாடல்களாகவே காட்சியமைக்கப்பட்ட கதைகள். சிங்கிள் மதருக்கும், டீன் ஏஜ் பையனுக்கும் இடையே ஆன உரையாடல். நிச்சயம் ஆன பெண் கொடுக்கும் பார்ட்டியில் விருந்தினராக வரும் ஒர் இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலும், அந்த உரையாடல் பாடலாய் மாறுவதும் அருமையான உணர்வு. ஒர் பெண்ணின் இன்னாள் காதலன் நெருங்கிய நண்பன். இருவரும் சேர்ந்து அவளுக்கு பிறந்தநாள் ஆச்சர்யத்தை கொடுக்க முனைந்து கொண்டிருக்கும் போது நண்பன் அவளுக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று சொல்லிக் கொண்டே வர, காதலனுக்கு சந்தேகம் வருகிறது. அதன் பின் நடக்கும் விஷயம் படு சுவாரஸ்யம். அதே போல பெட்ரோல் பங்கில் வேலைப் பார்க்கும் சற்றே குள்ளமான காதலன். ஒரு கேக் ஷாப்பில் வேலை செய்யும் ஓங்கு தாங்கான பெண்ணுக்கிடையே ஆன காதல். தனிமை. தனிமையின் உச்சத்தில் கொடுக்கப்பெறும் முத்தம் என க்யூட் மொமெண்டுகள் அடங்கிய சீரீஸ்.  மாமனாருக்கும் வரப்போகும் மாப்பிள்ளையும் ஒன்றாய் தண்ணியடிக்க ஆர்மபித்து பேச, அதன் முடிவு என பல சுவாரஸ்ய வாழ்க்கை முரண்கள். உறவுகளின் நெருக்கம், நெருக்கத்தினால் வரும் புழுக்கம் என குட்டிக் குட்டி கதைகளாய் தரமாய் விரிகிறது. பார்கவ் ப்ரசாத் இந்த சீரீஸின் எழுத்தாளர். நவீன் பல எபிசோடுகளை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் பார்த்த தரமான தமிழ் வெப் சீரீஸ் என பரிந்துரைப்பேன்.

கரண்ஜீத்கவுர் -சொல்லப்படாத கதை
நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை கதை. அவரை வைத்தே எடுக்கப்பட்டது. கரண் ஜீத் கவுர் எப்படி சன்னி லியோன் ஆனார். எதனால் போர்ன் நடிகையாக மாறினார். எது அவரை அந்த துறைக்கு துறத்தியது? போன்ற பல கேள்விகளுக்கான பதில் இந்த வெப் சீரீஸில் இருக்கிறது. நாயகியாய் சன்னி லியோனே நடித்திருப்பதால் சொல்லப்படும் காட்சிகளில் நம்பகத்தன்மையின் மேல் கேள்வி இருந்தது. ஆனால் போகப் போக தான் ஏன் இந்த துறையில் ஈர்க்கப்பட்டேன் என்பதற்கான கதையில் வழக்கம் போல கொஞ்சமே கொஞ்சம் குடும்ப ஏழ்மை போன்ற டெம்ப்ளேட் விஷயங்கள் இருந்தாலும், தன்னுடய ஆசை. காதல். காதலன் தன்னை பயன்படுத்திக் கொண்டது. அம்மாவின் குடிப் பிரச்சனை. தம்பியின் அன்பு. இத்தொழில் கொடுக்கும் பணம், புகழ் போன்றவற்றின் மீதான விருப்பம். என பல உண்மைகளை வெளிப்படையாய் சொன்னதும். ஒரு டிவி  இண்டர்வியூவில் தான் அவமானப்படுத்தப்பட்டதை உணர்ந்து அந்த பேட்டியிலேயே அந்த அவமானத்தை டீல் செய்த விதத்தை அடிப்படையாய் வைத்து சொல்லப்பட்ட திரைக்கதை. சன்னி லியோனின் நடிப்பு, என திருப்திகரமான ஹிந்தி வெப் சீரீஸ். தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஜீ 5 ஆப்பில் பார்க்க முடியும்.
மேலும் தொடரும்.

Apr 8, 2019

சாப்பாட்டுக்கடை - திருச்சி சேதுராமன் மெஸ்

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்சுக்கு முன்னால் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தோழி ஒருவர் ஊரிலிருந்து வந்திருக்க, விருந்தோம்பலுக்கான அங்கே போனோம்.  அதுவும் இரவு சாப்பாட்டிற்கு . அம்முறை மட்டன் தோசையும், சிக்கன் தோசையும், காடையும் ஆர்டர் செய்திருந்தோம். தோசையின் நடுவில் சிக்கன் மற்றும் மட்டன் தொக்குகளை ஸ்ப்ரெட் செய்து முறுகலாய் கொடுத்திருந்தார்கள். காடை கொஞ்சம் சவசவவென்றே இருந்தது மட்டுமில்லாமல் தித்திப்பாகவும் இருந்தது எனக்கு உவப்பாக இல்லை. அது பற்றி சொன்னேன். நீங்க மதிய சாப்பாடு சாப்ட்டிருக்கீங்களா? என்று கேட்டார் கடையின் சிப்பந்தி. இல்லை என்றேன். ஒரு நா வந்து சாப்டு போங்க என்றழைப்பு விடுத்தார்.

இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நானும் என் உதவியாளர் சுரேஷும் அகோர பசியில் மதிய சாப்பாட்டுக்கு போனோம். கிட்டத்தட்ட மூன்று மணியளவில். இலை போடப்பட்டு தயாரானவுடன், “சார்.. நெத்திலி கருவாட்டு தொக்கு போடலாமா?” என்று கேட்டு ஆரம்பித்ததுதான் வரிசைக்கிரமமாய் அயிட்டங்களின் அணிவகுப்பு. ஒரு கூட்டு, ஒரு பொரியல், சாதம், சிக்கன் தொக்கு, மட்டன் குழம்பு,  மீன் குழம்பு, நண்டு குழம்பு, எரா தொக்கு, காடை தொக்கு, ரசம், மோர் அல்லது தயிர் என வரிசைக்கட்டியது. 

சிக்கன் தொக்கில் லேசான தித்திப்பு இருந்தது. மட்டன் குழம்பு நல்ல மணத்துடன் குழம்பு பதத்தில். நண்டு குழம்பும், மீன் குழம்பும் நல்ல சுவை. காடை, மற்றும் எரா தொக்கில் லேசாய் காரம் அதிகம் எனக்கல்ல. என்னுடன் வந்தவருக்கு. சைட்டிஷாய் ஆர்டர் செய்யபட்ட மட்டன் சுக்காவில் நல்ல காம்பினேஷனாய் இருந்தது. சுக்காவில் பெப்பர் அதிகமாய் போடப்பட்டு செய்திருந்தார்கள். கூடவே ஆர்டர் செய்த கோலா ஓக்கே தான். 

பட்டுக்கோட்டை காமாட்சியை கம்பேர் செய்தால் கொஞ்சம் சுவை கூட மாடத்தான் என்றாலும் வேளச்சேரியில் நல்ல அசைவ மெஸ் டைப் உணவகம் இந்த திருச்சி சேதுராமன் மெஸ்.


1st Cross Street, 4th Main Road, Udaynagar, Velachery, Chennai - 600088

Apr 7, 2019

எண்டர் கவிதைகள் -27


கார் முழுவதும்

பரவிக்கிடக்கிறது 
உன் வாசனை
நீ இல்லாவிட்டாலும்
என் மூளையிலிருந்து
பெருகும் காமம் போல
உன் வாசனையும்

Apr 3, 2019

எது ஆபாசம்?

எது ஆபாசம்?

சில மாதங்கள் முன்பு நண்பர் ஒருவர் தொலைபேசியிருந்தார். எடுத்த மாத்திரத்தில் “இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்றார். எனக்கு ஏதும் புரியவில்லை. என்ன என்று கேட்டதற்கு “நேற்றுதான் குடும்பத்தோடு வடசெனை படம் பார்த்தேன். மக்குகூதின்னு எல்லாம் வசனம் பேசுறாங்க. வயசு வந்த பொண்ணு பையன், பொண்டாட்டியோட போய் அசிங்கமா போச்சு. இதையெல்லாம் எழுத மாட்டீங்களா?” என்றவரின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“ஏங்க அதான் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க இல்லை. நீங்களும் சினிமால இருந்திருக்கீங்க. உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த சர்டிபிகேட் கொடுத்த படத்துக்கு குழந்தைகளோட போகக்கூடாதுன்னு தெரியுமில்லை?”

“என் பொண்ணு தனுஷ் பேன்.”

“அதுக்காக அவர் எப்பவும் குடும்பத்தோட பார்குறா மாதிரியான படங்களில் தான் நடிக்கணுமா?”

“ஒரு பெரிய ஆர்டிஸ்ட் படம்னா குடும்பத்தோட தான் சார். பார்பாங்க. லேடீஸ் எல்லாம் நெளியிறாங்க இல்லை”

எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. “லேடீஸுக்கு பிடிக்காதுன்னு நீங்க சொல்லாதீங்க. அவங்க அப்படி சொல்லைன்னா நீங்க அவங்கள தப்பா நினைப்பீங்கன்னு கூட அப்படி சொல்லி பழகியிருக்கலாம். முன்னயெல்லாம் அவங்களுக்கு பிடிச்ச படமா மேட்னி, மார்னிங் ஷோல பெண்களுக்காகனு டிக்கெட் கொடுத்த ஊரு இது. இன்னைக்கு வீட்டுல வர்ற சீரியல்ல நீங்க சொல்ற கெட்ட வார்த்தையை விட மோசமான கண்டெண்ட் வருது. ஏன் நீங்க தண்ணி பிடிக்க ரோட்டுக்கு போறது இல்லை. பிடிக்கிற பெண்கள் கிட்ட கேளுங்க.. படத்துல பேசுன கெட்ட வார்த்தைய விட அதிகமா அவங்களே பேசக்கூட செய்திருக்கலாம். அதோட எல்லா படத்தையும்  குடும்பத்தோட பாக்கணுங்கிறத விடுங்க. காலம் மாறியிருக்குது. அவங்களுக்கு ஏத்த ரசனைக்கு படம் வர ஆரம்பிச்சிருச்சு. மொபைல்ல படம் பாக்குறாங்க. உங்க பொண்ணுக்கு என்ன வயசு? 18 ஆயிருச்சா?”

“ஆயிருச்சுங்க. அவங்களுக்கு படம் பிடிக்கலை”

“அப்படித்தான் சொல்வாங்க. அதே படத்தை அவங்க வயசு ப்ரெண்ட்சோட பாக்கும் போது என்சாய் பண்ணுவாங்க”

“என் பொண்ண நான் அப்படி வளக்கலைங்க”

“இன்னைக்கு இருக்குற இண்டர்நெட் காலத்துலயா?”

“அதுதான் எல்லாரையும் கெடுக்குது. அதுனாலத்தான் யாருக்கும் போன் கிடையாது.வீட்டுல இண்டர்நெட் கிடையாது ஸ்ட்ரிக்ட்”
எனக்கு சிரித்து விட்டேன். நண்பர் அவர் காலத்தில் கொஞ்சம் “அப்படி இப்படி” இருந்தவர்தான்.

“என்ன காமெடியா சொல்லிட்டேன்’

‘இண்டர்நெட் இல்லாத காலத்துலேயே நீங்க எப்படி இருந்தீங்கன்னு தெரியாதா? அப்ப எது உங்களை தவறா வழி நடத்திச்சு?. ஸோ.. உங்களுக்கு பயம். நாம அந்த காலத்துலேயே எல்லாத்தையும் ஒரு ரவுண்ட் வந்திருக்கோம். இப்ப இண்டர்நெட் எல்லாத்தையும் காட்டிருது. கெட்டுப் போயிருவாங்களோனு பயம்.

ஒரு விஷயம் நண்பா. நீ என்ன கட்டுப்பாடு போட்டாலும் அதது அந்தந்த வயசுல நடக்கத்தான் செய்யும். கண்காணிக்கிறது தப்பில்லை. அதுக்காக எதையும் அவங்களுக்கு கொடுக்காம இருக்க ஆர்மபிச்சா. அவங்க திருட்டுத்தனம் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. நீங்க உங்க வீட்டுல உங்க வயசுல பண்ணா மாதிரி.” என்றதும் கோபமாய் போனை வைத்துவிட்டார்.

மார்பு குலுக்கல்களும், பின்புற ஆட்டங்களும், ஆண் பெண் சேர்க்கை செய்கைகளும், அதற்கான ஆபாச குறீயிடுகளையும், பொம்ளேன்னா இப்படித்தான் வாழணும்னு எட்டு பொண்ணை ரேப் பண்ணவன் அட்வைஸ் பண்றதையும், அதீத ரத்தம் தெரிக்கும் வயலன்ஸும் கொண்ட “யு” சர்டிபிகேட் படங்களை குடும்பத்தோடு பார்த்தவர்கள் தான் நாம். கெட்ட வார்த்தை பேசும் படங்களால் கெட்டுப் போய்விடுவோம் என்று நம்புவது ஆச்சர்யமாய் உள்ளது.

“ஏ” படங்கள் வயது வந்தவர்களுக்கானது. வயது என்றால் 18 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு அதுவும் அந்த வயதில் ஆணோ/பெண்ணோ மன முதிர்வு ஏற்பட்டிருக்கும் என்கிற நம்பிக்கையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் வயது. என்பது வயதாகியும் முதிராதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லாவிட்டால் குழந்தை குட்டிகளோடு ‘ஏ’ சான்றிதழ் படத்துக்கு போவார்களா? இப்படி தெரிந்தே போய்  உட்காருவது தான் பெரும் ஆபாசமாய் படுகிறது எனக்கு.