விமர்சனச் சர்ச்சைகள்
சமீபத்தில் சர்சைக்குண்டான விமர்சன விஷயத்தை தடுப்பதற்காக அப்படத்தின் இயக்குனர் ஒரு வாய்ஸ் மெசேஜை ஷேர் செய்திருந்தார். ப்ளூ சட்டை மாறன் போன்றோர் எல்லாம் முட்டைப் பூச்சிப் போல, கொசு போன்றவர்கள் என்றிருக்கிறார். மூட்டைப் பூச்சி என்றால் நசுக்கிவிடுவேன்.கொசு என்றால் அடித்துவிடுவேன். அது போலத்தான் இவரும் என்கிறார். அதற்கு திரைத்துறையிடமிருந்து மூன்று விஷயங்களை கேட்கிறார். அது கூட அவருடய படத்திற்கோ, அவரது தயாரிப்பாளருக்கோ அல்ல..வருகிற வாரம் வெளியாகப் போகும் படங்களின் தயாரிப்பாளர்களுக்காக என்றிருக்கிறார்.
1. அவருக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் விளம்பரம் கொடுக்ககூடாது என்பது.
அது சாத்தியம். தயாரிப்பாளர் சங்கம் ஒன்று பட்டு இருக்கும் பட்சத்தில். இதுக்காகவாவது நடந்தா சந்தோஷம்தான். ஆனால் இன்னொரு பக்கம் விளம்பரம் கொடுத்ததுக்காகவே சொம்படிக்கிற விமர்சகர் ஒருத்தர் நல்லா கல்லா கட்டிட்டு இருக்காரு. அவரோட பார்வையாளர்கள் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிச்சிருச்சு. ஸோ.. பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படும் விமர்சனமாகிவிட்டது. இப்படித்தான் இணையம் வருவதற்கு முன் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட பல விமர்சனங்களின் மீதான மதிப்பு, இணையம் வந்த பிறகு சினிமா பின்னணியில்லாமல் மனதில் பட்டதை எழுத ஆரம்பித்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது என்பது நிதர்சனம்.
2. இனிமேல் அவரை அவரது சேனலில் விமர்சனம் செய்ய கோர்ட்டு ஏறி தடை உத்தரவு வாங்க வேண்டும்.
அதற்கு வாய்ப்பேயில்லை என்று அவர்கள் கொடுத்த கொலை மிரட்டல் புகார் போல நிச்சயம் தெரியும். அப்படியே வாங்கினாலும் அவர் கருத்து சொல்ல வேறோர் தளத்தை பயன்படுத்த தடை வாங்க முடியாது.
3. வேறு யாரேனும் விளம்பரம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றிருக்கிறார்.
அது கற்பனைக்கும் எட்டாத சாத்தியமில்லாத விஷயம். அப்படியானால் அவரது சேனலுக்கு விளம்பரம் கொடுக்கும் யூட்யூபையே கேள்வி கேட்பதற்கு சமம். அது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனையால் அவரது விமர்சனம் ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. இதனால் அவர்களது விளம்பரதாரர்களுக்கு நல்ல விஷயம் தான்.
எந்த நிகழ்ச்சி அதிகப் பேரால் பார்க்கப் படுகிறதோ அதில் தங்கள் விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே வியாபாரிகள். மக்களிடம் சென்று சேருவது முக்கியம்.
வேறொரு தயாரிப்பு நிறுவனம் நடத்தும் விமர்சன
சேனலில் விமர்சிப்பவருக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும் என்பதை வெளிப்படுத்த
சமீபத்திய பட விமர்சனம் உதவியிருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் வாசிக்க்கும் போது
சிங்கில் இல்லையாம் நடிகர்கள். மற்ற வாத்தியங்கள் எல்லாம் சிங்கில் இருக்கிறதாம்.
மற்ற வாத்தியங்கள் எல்லாம் சின்க்கில்
இருக்கிறது என்று எப்படி கண்டு பிடித்தார்?. எல்லா வாத்தியங்களையும் வாசிக்க
தெரிந்தவரா? என்றால் இல்லை. அதே போல இவரும் தவரான தகவலைத் தருகிறார். அதாவது
உன்னால் முடியும் தம்பி படத்தைப் பற்றி பேசி தூங்காதே தம்பி தூங்காதேவை
சொல்லுகிறார். இது தவறு என்று தெரிந்திருந்தால் அந்த மூன்று நிமிட வீடியொவை ரீஷூட்
பண்ண முடியும். அது தெரியாததால் அதை அபப்டியே அப்லோட் செய்திருக்கிறார். இது தான்
இன்றைய விமர்சன உலகம். ப்ளாக் காலத்தில் கோச்சடையான் படத்தில் லொக்கேஷன்கள் எல்லாம்
அற்புதம் என்றும், ஜிகர்தண்டா படத்தில் பாசமலர் பாடல் ஒலிக்கும் அந்த பின்னணியிசை
அற்புதம் என்றும் எழுதியவர்கள் சூழ் உலகம் தான் இந்த விமர்சன உலகம். மரியாதையாக
குறை சொல்லப்பட வேண்டும் என்று சொல்வதும். அதற்கான ஆக்ஷன் எடுப்பதை விட, மிக
முக்கியமான விஷயம் இவர்கள் தரமில்லாதவர்கள் என்றால் அவர்களை
பிரபலப்படுத்துவது. ஸோ.. ஆகஷன் எடுக்குறது நல்ல விஷயம். அதை லாஜிக்கா எப்படி எடுக்கணும்னு யோசிக்கணும். லாஜிக்கோட.. :)
Post a Comment
No comments:
Post a Comment