பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்சுக்கு முன்னால் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். தோழி ஒருவர் ஊரிலிருந்து வந்திருக்க, விருந்தோம்பலுக்கான அங்கே போனோம். அதுவும் இரவு சாப்பாட்டிற்கு . அம்முறை மட்டன் தோசையும், சிக்கன் தோசையும், காடையும் ஆர்டர் செய்திருந்தோம். தோசையின் நடுவில் சிக்கன் மற்றும் மட்டன் தொக்குகளை ஸ்ப்ரெட் செய்து முறுகலாய் கொடுத்திருந்தார்கள். காடை கொஞ்சம் சவசவவென்றே இருந்தது மட்டுமில்லாமல் தித்திப்பாகவும் இருந்தது எனக்கு உவப்பாக இல்லை. அது பற்றி சொன்னேன். நீங்க மதிய சாப்பாடு சாப்ட்டிருக்கீங்களா? என்று கேட்டார் கடையின் சிப்பந்தி. இல்லை என்றேன். ஒரு நா வந்து சாப்டு போங்க என்றழைப்பு விடுத்தார்.
இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நானும் என் உதவியாளர் சுரேஷும் அகோர பசியில் மதிய சாப்பாட்டுக்கு போனோம். கிட்டத்தட்ட மூன்று மணியளவில். இலை போடப்பட்டு தயாரானவுடன், “சார்.. நெத்திலி கருவாட்டு தொக்கு போடலாமா?” என்று கேட்டு ஆரம்பித்ததுதான் வரிசைக்கிரமமாய் அயிட்டங்களின் அணிவகுப்பு. ஒரு கூட்டு, ஒரு பொரியல், சாதம், சிக்கன் தொக்கு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு, எரா தொக்கு, காடை தொக்கு, ரசம், மோர் அல்லது தயிர் என வரிசைக்கட்டியது.
சிக்கன் தொக்கில் லேசான தித்திப்பு இருந்தது. மட்டன் குழம்பு நல்ல மணத்துடன் குழம்பு பதத்தில். நண்டு குழம்பும், மீன் குழம்பும் நல்ல சுவை. காடை, மற்றும் எரா தொக்கில் லேசாய் காரம் அதிகம் எனக்கல்ல. என்னுடன் வந்தவருக்கு. சைட்டிஷாய் ஆர்டர் செய்யபட்ட மட்டன் சுக்காவில் நல்ல காம்பினேஷனாய் இருந்தது. சுக்காவில் பெப்பர் அதிகமாய் போடப்பட்டு செய்திருந்தார்கள். கூடவே ஆர்டர் செய்த கோலா ஓக்கே தான்.
பட்டுக்கோட்டை காமாட்சியை கம்பேர் செய்தால் கொஞ்சம் சுவை கூட மாடத்தான் என்றாலும் வேளச்சேரியில் நல்ல அசைவ மெஸ் டைப் உணவகம் இந்த திருச்சி சேதுராமன் மெஸ்.
1st Cross Street, 4th Main Road, Udaynagar, Velachery, Chennai - 600088
Post a Comment
No comments:
Post a Comment