எலி - என் கதை.
பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன். வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.” “கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன். ”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார். ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோட...