Posts

Showing posts from June, 2019

எண்டர் கவிதைகள் -27

அன்பு எங்கேயும் போகவில்லை. உனக்கான பிரவாகமாய்  என்னுள்ளேயே இருக்கிறது அது உனக்கு தெரிந்தே இருந்தாலும்,  கிடைக்கபெறும் அன்பின் மிகையால்  என் அன்பை தவிர்க்கிறாய் தூக்கிப் போடுகிறாய். அது ஏன் என என்னால்  புரிந்து கொள்ள முடிவதற்கான காரணம் அன்பு. எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை, என்றைக்கும் உன்னை நேசிப்பதை கைவிடுவதுமில்லை.

N.G.K - கேள்வியின் நாயகன்.

N.G.K - கேள்வியின் நாயகன். என்.ஜி.கே படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட பெரிய டெக்னீஷியன்கள் கூட்டமே என்னை செம்மத்தியாய் ஏமாற்றி விட்டார்கள் என்று கடுப்பேறி விட்டது. காரணம் படத்தில் உள்ள அபத்தங்களின் அணிவகுப்பு. முழுக்க முழுக்க ஸ்பாயிலர் பதிவு. படம் பார்க்காதவங்க ஓடி போயிருங்க. படத்தின் முதல் காட்சியில் இடி மின்னல்களுக்கு இடையே மண்ணிலிருந்து புறப்படத் தாயார் போல எழுந்து கொள்கிறார். பின்னர் வீட்டின் அருகே பைக்கை வைத்துவிட்டு, தன் வீட்டிற்கே பைப் பிடித்து ஏறுகிறார்?. ஏதாவது தீவிரவாத செயலில், புரட்சி கூட்டத்தின் தலைவனா? என்று பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. எம்.டெக், பிஎச்டி படித்துவிட்டு, ஆர்கானிக் விவசாயம் பார்க்கிறாராம். நட்ட நடு ஹாலில் அம்மாவின் முன்னால் ஒரே குல்பியை ஆளுக்கொரு முறை சப்பிக் கொள்கிறார்கள். என்.ஜி.கே இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இவரால் நான் ஆர்கானிக் வியாபாரம் படுத்துவிட்டதால் எல்லோரும் சேர்ந்து இவர் ஆர்கானிக் விவசாயம் செய்ய கூடாது என்கிறார்கள். அதனால் இவரின் வயல் வெளிகளை விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு கெடுக்கிறார்கள். வீட்டை எல்லாம் அடித்து நொறுக்குகிறார...