ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.
ஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும். செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது? இண்டர்நெட் ஏது?, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள்? அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா? என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார். அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர...