குழம்புக்கடை என்று பெயர் பார்த்ததும், சேலத்தில் ஒரு தெருவெங்கும் இம்மாதிரியான குழம்புகள் விற்கும் கடை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போலா? என்று யோசனையுடன் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். ஆம். அது போலத்தான். கறிகுழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, எறா குழம்பு, சிக்கன் மசாலா, கறி சாப்ஸ், சிக்கன் கைமா, கறி தோசை, சிக்கன் கறி தோசை, தலைக்கறி, போட்டி, இட்லி, பரோட்டா, இடியாப்பம், வடைகறி, சாம்பார், வத்தக்குழம்பு என இரவு நேரங்களில் வரிசைக்கட்டுகிறார்கள் என்றால், பகலில் வெஜ் மற்றும் நான் வெஜ் சாப்பாடும் போடப்படுகிறதாம்
சிக்கன் கறி தோசை அட்டகாசம். முட்டையோடு அடித்து ஊற்றப்பட்ட சிக்கன் கைமா நல்ல எண்ணையில் முறுகலாய் எடுக்கப்பட்டு, உடன் தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவியோடு ஒரு விள்ளல் வைத்தால் அட அட அட.. நிஜமாகவே டிவைன் தான்.
முட்டை லாபா நன்கு சாப்டான பரோட்டா மாவில் செய்யப்படுகிறது சூடாக சாப்பிடும் போது அபாரமான சுவை. உடன் மட்டன்குழம்பு ஆசம்.
ஞாயிறுகளில் ஸ்பெஷல் அயிட்டங்களாய், நண்டு, எறால், சுறா என நான் வெஜ் குழம்பு வகைகள் வரிசைக் கட்டுகிறது. எந்த குழம்பிலும் நெஞ்சைக் கரிக்கும் எண்ணைய் தாளிக்கப்பட்டோ தூக்கத்தில் எதுக்களிக்கும் எண்ணையோ இல்லை. நல்ல மசாலா மற்றும் மஞ்சள் வாசனையோடு ஹோம்லியாய் இருக்கிறது.
வெஜிட்டேரியனில் வத்தக்குழம்பு கிட்டத்தட்ட வெஜ் மீன் குழம்புதான். சாம்பார் ஓக்கே. வடைகறி மிக நல்ல சுவை.சைதை பிரபலமான மாரி ஓட்டல் வடைகறிக்கு நல்ல போட்டி என்றே சொல்ல வேண்டும். நல்ல தரமான குழம்பு மற்றும் லிமிடெட் சாப்பாடு, கறி தோசை, பரோட்டா வகைகள் அத்தனையும் ஒர் சின்னக் கடையில் தான் தயாரிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தயாரிக்கப்படுவதால் தரமும், சுவையும் மெயிண்டெயின் செய்யப்படுகிறது. மேற்கு சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது இந்தக்கடை.
குழம்புக்கடை
ரங்கபாஷ்யம் தெரு
மேற்கு சைதாப்பேட்டை
பஸ் நிலையம் அருகில்
சென்னை -15
Post a Comment
No comments:
Post a Comment