Meeku Mathrame Chepputha

தெலுங்கு படங்கள் இப்போதெல்லாம் டெம்ப்ளேட்டுகளிலிருந்து விலகி படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான ஒன்றுதான் இந்த “மீக்கு மாத்ரமே சொப்புதா” அதாவது ரகசியங்களை சொல்லும் போது உனக்கு மட்டுமே சொல்லுறேன். யார் கிட்டேயும் சொல்லிராதனு சொல்லி சொல்லுவாங்க இல்லை அதான் படத்தோட தலைப்பு. ராகேஷ் ஒர் மொக்கை டிவி சேனல் ஹோஸ்ட். இருந்திருந்து போராடி ஸ்டெப்பி எனும் டாக்டரை கரெக்ட் செய்து, வீட்டில் சம்மதிக்க வைத்து கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி, இன்னும் ரெண்டொரு நாளில் கல்யாணம் என்கிற போது. சினிமாவில் நடிக்க ஆவலாய் இருந்த காலத்தில், படமாக்கப்பட்ட ஒரே காட்சியான ஹனிமூன் பெட்ரூம் காட்சி லீக் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கண்டீஷன்களோடு காதலிக்கும் ஸ்டெப்பிக்கு தெரிந்துவிட்டால் தன் திருமணம் ஹோகயா என்று, வீடியோவை அழிக்கும் முயற்சியில் தன் உயிர் நண்பன் காமேஷ், மற்றும் ஹேக்கர் நண்பனோடு அலைகிறான். வீடியோவை அழித்தானா இல்லையா? என்பது மட்டுமல்ல கதை. க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டும் தான் கதை. ரொம்ப நாளாச்சு ஃப்ரீஸியாய் ஒர் காமெடி படம் பார்த்து. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால் படம் நெடுக புன்ம...