Gantumoote - காதலெனும் சுமை.

எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால் ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய். இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான். சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை ப...