எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால் ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய்.
இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான்.
சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை பார்த்தது முதல் சல்மான் கானின் ரசிகையாய் போன மீரா, அவனை போலவே ஹேர்ஸ்டைல் வைத்திருக்கும் மதுவின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு காதலாய் மாறுகிறது. அந்த ட்ராஸ்பர்மேஷனை ஆணாய் எப்படி உணர்வீர்கள் என்று புரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கலாம். இப்படத்தில் மீராவின் ட்ரான்ஸ்பர்மேஷன் அத்தனை விஷயங்களை மிக அழகாய் சொல்லியிருக்கிறது. மேபி.. இது மீரா போன்ற பெண்ணுக்கு மட்டுமே சாத்தியமானது என்று பெண்கள் நாங்க வேற என்று நினைத்தால் இட்ஸ் ஓக்கே.
முதல் ஸ்மூச், முதல் அணைப்பு, அது தரும் எக்ஸைட்மெண்ட். என விரிவாய் மிக மெதுவாய், கன்வர்ட் ஆகும் கணங்கள் அட்டகாசம். அதிலும் அந்த முதல் முத்தம். அந்த முத்தம் கொடுத்த சந்தோசத்தை ஆணின் எமோஷனில்லாத வெற்றி பீற்றலால் மீரா “தேவடியாவாக” விளிக்கப்பட்டு அவமானபடுவதை விட, எனக்கும் உனக்கும் மட்டுமேயானா இந்த இண்டிமேட்டான தருணத்தை எப்படி நீ இப்படி பீற்றிக் கொள்வாய் என்று கோபப்படும் இடம் அதுவும் வாய்ஸ் ஓவராய் வரும் போது.. வாய்ஸ் ஓவர் எத்தனை அழகானது என்று புரியும் படம் நெடுக, ஆங்காங்கே வாய்ஸ் ஓவர் மிக அழகாய் நம்மை அடுத்த கட்டத்திற்கு கடத்துகிறது.
பள்ளிக் காதல், இடை வரும் காதலர்கள், அவமானம், ஸ்கூல் டூர். மனதுக்கு பிடித்த ஆணின் முதல் அரை நிர்வாணம் எத்தனை எக்ஸைட்மெண்டைத் தரும்? திருட்டுத்தனம். இவர்களின் காதலை கண்டு பிடித்த ஆசிரியனின் கேரக்டர். அவரின் அட்வைஸ் எல்லாம் க்ளாஸ்.
முதல் ப்ரேமிலிருந்து இரண்டே பேர் படத்தை தங்கள் தோள்களில் ஏற்றி சுமந்து கொண்டு திரிகிறார்கள். சுமையாய் இல்லாமல் மிக சந்தோஷமாய். அது மீரா தேஷ்பாண்டேவாய் நடித்த தேஜு பெலவாடியும், இயக்குனர் ரூபா ராவும்.
குட்டிக் குட்டி ரியாக்ஷன்கள். எத்தனை வெட்கம். அந்த உதட்டை அழுந்த வைத்துக் கொள்வதில் மூலமே பல ரியாக்ஷன்களை காட்டியிருக்கிறார். குறிப்பாய் க்ளைமேக்ஸில் அவரது நடிப்பு க்ளாஸ்.
இயக்குனர் ரூபா ராவ். இவரது முந்தைய முயற்சி வெப் சிரீஸான The Other love story. யூட்யூபில் இருக்கிறது தேடிப் பாருங்கள்.அதைப் பற்றிக் கூட நான் கொத்து பரோட்டாவிலும், குமுததிலும் எழுதியிருக்கிறேன். இக்கதை போலவே 90களில் இரண்டு இளம்பெண்களின் லெஸ்பியன் காதலைப் பற்றிய மிக நுணுக்கமாய் அவர்களின் உறவை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல இக்கதையில் டீன் ஏஜ் பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் மிக அழகாய், நுணுக்கமாய் மீண்டும் வெளிபடுத்தியிருக்கிறார். குறிப்பாய் மன உணர்வுகளை காட்சிகளாய் வெளிப்படுத்தும் விஷயம். போன் பேசும் காட்சிகள் எல்லாம் கவிதை. அந்த முதல் முத்தத்தின் முதலெடுப்பு, குறுகுறுப்பு, காத்திருத்தல்... வாவ்.. வாவ்.. அட்டகாசம். நான் இங்கே எது சொன்னாலும் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வது போல தோன்றும். பட்.. படம் பார்த்த பின் உங்களுக்கும் அந்த உணர்வை தவறாமல் கொடுக்கும். நிச்சயம் கமர்ஷியல் கொண்டாட்டங்கள் விரும்புகிறவர்களுக்கு இல்லை.
படத்தின் தலைப்புக்கு அர்த்தம் சுமை. முதல் காதல் தரும் அனுபவங்கள் எல்லாமே சுமை தான். அது எப்படி இருந்தாலும். அந்த சுமையை அழகான தனிமையான இடத்தில் அசை போடுவதுதான் எத்தனை வலியும், இம்சையும் கொடுக்கும்?. வாழ்த்துக்கள் ரூபா ராவ்.
Post a Comment
6 comments:
படம் ஸ்லோவா தோணலையா??
அருமை சங்கர்.
Sir sillukaruppatti Padam parthutingala review please.
Sir sillukaruppatti Padam parthutingala review please.
நான் நேற்று அமேசான் ப்ரைமில் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை. நாயகியின் முக பாவங்கள் அருமை. அதே போல் க்ளாஸ் ரூம் காட்சிகள் அத்தனையும் மிகவும் யதாார்த்தமாக இருந்தது. பெண்ணின் பார்வையில் படமாக்கப் பட்டிருந்ததால் தான் இது சாத்தியம் என்று நம்புகிறேன். அதேபோல் தற்போது மிகவும் சிலாகிக்கப்படும் தியா கன்னடப்படமும் பார்த்தேன். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை நாயகியின் நடிப்பைத் தவிர.
படம் மிகவும் அருமை. நேற்று அமேசான் ப்ரைமில் பார்த்தேன். நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் உண்மை. நாயகியின் முகபாவங்கள் அருமை. எனது பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது இத்திரைப்படம். வகுப்பறை காட்சிகள் மிகவும் யதார்த்தமாக இருந்தது. பெண்ணின் பார்வையில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.
Post a Comment