Posts

Showing posts from 2020

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

Image
  நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் .. நன்றி மணிஜி நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi

சாப்பாட்டுக்கடை - அன்னப்பறவை

Image
இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல்,  கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்க...

Forbidden Love - anthology stories from zee5

Image
நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.  அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.  ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...

Crack Down - Hindi Web Series Review

Image
  shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,   ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது.  சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்க...

Alive - Netflix Movie

Image
கேமிங், இண்டர்நெட், ஆன்லைன், டெக்னாலஜியில் ஆழ்ந்து மூழ்கிய டீன் இளைஞன் ஒரு தூங்கி எழுந்திருக்கும் போது, வீட்டில் அப்பா, அம்மா, தங்கை என யாருமில்லை. கடைக்கு போய் வருவதாய் சிட் எழுதி வைத்து போயிருக்கிறார்கள். வீட்டின் வெளியே ஒரே ஆரவாரம். என்னவென்று பார்த்தால் மக்கள் ஜோம்பிகளாய் மாறி ஒருவரை ஒருவர் கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போன குடும்பத்துக்கு என்ன ஆனது? இவன் எப்படி இருபது நாட்களுக்கு மேலாக சர்வைவ் ஆகிறான்?. எது அவனை சர்வைவ் செய்ய வைத்தது? தப்பினானா இல்லையா என்பதுதான் கதை.  தனியறையில் மாட்டிக் கொண்ட இளைஞன். அவனது தவிப்பு. குழப்பம். டெக்னாலஜியின் பயன் மூலமாய் அறிய முற்படுவது, எதிரே ஏதோ நம்பிக்கை. நம்பிக்கையின்மை, தனியே ஒரு பெண். அவளுடனான நட்பின் மூலமாய் ஏற்படும் வாழ்க்கையின் வெளிச்சம். தப்பித்தல். என எல்லா டெம்ப்ளேட்களுடனான ஜோம்பி படம். பட் ஒன்னரை மணி நேரம் போனது தெரியவில்லை. காரணம் கிட்டத்தட்ட கோவிட் நாட்களில் தனிமையில் மாட்டிக் கொண்டவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் சுவாரஸ்யம் குறையவில்லை. டைம் பாஸ் கொரியன் படம். 

எம்மி அவார்டை வாங்கிய ஆப்பிள் சீரீஸ்

Image
சென்ற வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த ஓடிடி தளம் ஆப்பிள் +. ஆப்பிளின் ப்ளாட்பார்ம்களிலும், செட்டாப் பாக்ஸ் மூலமாய் மாதம் 5$க்கு மிகத் தரமான படங்களையும், சீரீஸ்களையும் வழங்கி வருகிறது. மார்னிங் ஷோ, டிபண்டிங் ஜேக்கப், மனோஜ் நைட் ஷியாமளனின் சர்வர்ண்ட் என வரிசைக் கட்டி சிரீஸ்கள் இருக்க, கோவிட் பாண்டமிக் நேரத்தில் டாம் ஹாங்ஸின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்த “க்ரே ஹவுண்ட்’ எனும் திரைப்படத்தை சுமார் 100 மில்லியன் கொடுத்து நேரிடை வெளியீடு வேறு செய்து பெரும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.  இவர்களின் தயாரிப்பான மார்னிங் ஷோ எனும் சீரீஸில் நடித்த கோரி எலிசன் என்கிற கேரக்டரில் நடித்த பில்லி கோட்ரப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை பெற்று இருக்கிறது. ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் 16 நாமினேஷன்களை பெற்று ஒரு விருதையும் பெற்று இருக்கிறது ஆப்பிள் +டிவி

Dolly Kitty Aur Woh Chamakte Sitare - Hindi Film Review

Image
 Lipstick under my burka  பட இயக்குனர் அலங்கிரிட்டாவின் அடுத்த படம். இந்தப்படமும் முந்தையை படம் போலவே போல்ட். டோலியும் கிட்டியும் ஒன்று விட்ட சகோதரிகள். டோலிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தை பெண் தன்மையுடன் இருக்கிறான். டோலிக்கும், அவளது கணவனுக்குமிடையே செக்ஸ் என்கிற சம்பவம் ஒன்று நடந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. காரணம் அவளின் ப்ரோசன் யோனியும், மனநிலையும். கிட்டி பிகாரிலிருந்து வரும் டோலியின் சகோதரி. டோலியின் கணவனின் அப்யூஸ் நடவடிக்கை காரணமாய் தனியாய் ஹாஸ்டல் பிடித்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளின் வாழ்க்கை, அவளின் வேலை ரொமான்ஸ் ஆப் செக்ஸ் டாக் வேலை, அதன் பின்னான காதல், அதனால் ஏற்படும் மன உளைச்சல் என இரண்டு பெண்களின் சமகால வாழ்க்கையை சொல்லியிருக்கிற படம் தான் இந்த டோலிகிட்டி அவுர் ஓ சமக்த்டே சித்தாரே. கொங்கனா சென் அத்தனை இயல்பான நடிப்பு. ஆரம்பக் காட்சியில் டோலியிடம் கிட்ட அவளின் கணவன் தன்னை தவறாக தொடுகிறான் என்று சொல்ல்லும் போது காட்டும் ரியாக்‌ஷனிலேயே நான் கொங்கனா செண்டா என்று கொடி ஏற்ற ஆரம்பித்துவிடுகிறார். அவருக்கும் கணவருக்குமிடையே இருக்கும் நெருக்கம், ...

டைம் என்ன பாஸும் சிட்காம்களும்.

Image
Situation Comedy எனப்படும் Sitcom என்கிற வகைமையில் இந்திய அளவில் நிறைய ஹிட் சீரீஸ்கள் வந்திருக்கிறது . அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் “ ஏ ஜோ ஹே ஜிந்தகி ” “ ஹம் பாஞ்ச் ” ” தேக் பாய் தேக் ” போன்றவை தூர்தர்ஷனின் பொற்காலத்தில் வெளியான சிட்காம்கள்.   சிட்காம்களின் சுவாரஸ்யமே அதில் வரும் கேரக்டர்கள்தான் . அக்கேரக்டரிகளின் ஆர்க் தான் பார்க்கும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டவோ , வாய் விட்டு சிரிக்கவோ வைக்கும் . அப்படி வைக்காவிட்டாலும் பின்னணியில் சிரிப்பொலியைப் போட்டு நம்முள் இருக்கும் நகைச்சுவை உணர்வை தூண்டிவிட்டாவது சிரிக்க வைத்துவிடுவார்கள் .  சிட்காம்களில் நகைச்சுவை பெரும்பாலும்   அப்சர்டாகத்தான் இருக்கும். காரணம் நிஜவாழ்க்கையின் அபத்தங்களிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்களுக்கானது சிட்காம்கள் . ஆங்கிலத்தில் சிட்காம்களின் வரிசை பெரிது . குறிப்பாய் “ சிம்சன்ஸ் ” “ பிக் பேங்க் தியரி ” ‘ ப்ரெண்ட்ஸ் ” எல்லாம் கல்ட் ஹிட் லிஸ்டில் அடுத்த தலைமுறை வரை வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளவை . அப்படியான ஒர் ...

Flesh - Web Series Review

Image
முதல் எபிசோடிலிருந்து கடைசி எட்டாவது எபிசோட் வரை பெரிய குறையொன்றுமில்லாத வெப் சீரீஸ். என்ன ஆங்காங்கே லாஜிக் மீறல்களும், பெனிச ஆக்‌ஷன்களும் கொஞ்சம் ப்ரேசிலியன் படமான ட்ரேடின் சாயலும் இருந்தாலும், நல்ல கிரிப்பிங் கதை, நடிப்பு எல்லாமே. சுவரா பாஸ்கர் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பட் நல்ல பர்பாமென்ஸ். வழக்கப்படி கெட்ட வார்த்தை, கொஞ்சம் வயலன்ஸ் என்று உறுத்தாமல் இருக்கிறது. நீங்க ஜியோ நம்பர் வைத்திருந்தால், ஜியோ சினிமாவில் ஈராஸ் நவ் ஓடிடி இலவசம். அதில் வந்திருக்கிறது இந்த #flesh @erosnow

Atkan Chatkan - Film Review

Image
  ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க. 1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட் 2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட் 3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட் 4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு. எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர...

பெர்முடா - நாவல் விமர்சனம் -1

Image
  பெர்முடா. விமர்சனம்#1 மூண்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாக இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார். எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள். Mohan Balu Thx sir பெர்முடா https://amzn.to/36tb8gg பெர்முடா புத்தகமாய் அமேசானில் வாங்க https://amzn.to/2QACABx

சாப்பாட்டுக்கடை -தேவி அக்கா குழம்புக்கடை

ஹைதராபாத்தில் நிறைய குழம்பு கறிஸ் கடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் சென்னையில் ஏனோ நிறைய குழம்பு கடைகள் இருந்து பார்த்ததில்லை. அவ்வப்போது சில சைவ உணவு சிறுகடைகள் குழம்பு ,கூட்டு, பொரியல், ரசம் என தனித் தனியே இருபது ரூபாய்க்கு விற்பனை செய்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் அதையே முழு நேரக்கடையாய் பார்த்ததில்லை. சில ஆண்டுகளாய் அம்மாதிரியான குழம்புக்கடைகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. முக்கியமாய் நான் வெஜ் குழம்பு கறிக்கடைகள். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொன்று முளைக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து சமைக்க ஆரம்பித்து மெல்ல வியாபாரம் பெருக, பெருக, ஆட்களை வைத்து சமைக்க ஆரம்பித்து சுவை கெட்டுப் போய் மூடிய கடைகள் ஏராளம். ஆனால் இன்றளவில் நிறைய குழம்புக்கடைகள் அவரவர்களின் ஸ்பெஷல் கைவண்ணத்திற்கு ஏற்ப அட்டகாசமான வியாபாரம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அப்படியான ஒரு கடை தான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்த தேவி அக்கா குழம்புக்கடை. என் நியாபகம் சரி என்றால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் வாய் மொழி காரணமாய் மெல்ல இந்தக்கடையில் சுவைக்கா...

24 சலனங்களின் எண். விமர்சனம் -2

Image
  விமர்சனம் #2 வணக்கம், சலணங்களின் எண் 24 , ஒரு சினிமா தொழிலின் பின்பக்கம் இப்படியா , காமிரா மேன் , அசோசியேட் டைரக்டர், கோ டைரக்டர், மாஸ்டர், ஹீரோ , ஹீரோயின், அல்லக்கைகள், தயாரிப்பாளர் இவர்களின் ஒருங்கிணைப்பு எந்தளவிற்கு ஒரு படத்தை உயிரோட்டத்துடன் வைக்கும் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை ,தயாரிப்பாளரின் சபலம் ஒரு பெண்ணை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை எழுத்தில் காட்சியாக்கி விட்டீர்கள், முதல் பட தயாரிப்பாளர் மணி ,நட்பினால் வரும் கேடு (அவரை கொலை செய்யாமலிருந்திருக்கலாம்) அதன்பின் அந்த குடும்ப உறுப்பினர்கள் அவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகளை எழுத்தாளுமையில் பார்த்தேன் . ஒரு சுய தொழில் புரிபவனாக சொல்கிறேன் , ஒரு சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளுடன் , ஆரம்பம் முதல் , டிஜிட்டல் மார்கெட்டிங் , ரைட்ஸ் &ரிலீஸ் வரை விளக்கமாக வரைந்த ஒர் ஓவியம் , டீடெய்ல்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் . வாழ்த்துக்கள். நன்றி. ஹீரோ ,நித்யா , காதல் , டைரக்டர் மன உளைச்சல்...... இன்னும் நிறைய எழுதலாம் இவ்விடம் போதாது நன்றி Venkatesan Narayanaswamy 24 சலனங்களின் எண் நாவல் கிண்டில் வர...

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?    அமேசானில் நேரிடையாய் வெளியாகி நல்ல படம் என்று பெயர் எடுத்தபடங்கள் என்று பார்த்தால் , சகுந்தலாதேவி, சீ யூ சூன் மட்டுமே . அமேசான் தெலுங்கு , தமிழ் , மலையாளம் , இந்தி என அமிதாப்பின் குலாபோசித்தாபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி , ஜோதிகாவின் பொ . ம . வ . பென்குவின் , கன்னட லா , ப்ரெஞ்சு பிரியாணி , மலையாளம் சுஜாதையும் .. , சி யூ சூன் . ஆகியவை எட்டு படங்களில் ரெண்டு ஹிட் என்பது வழக்கமாய் இந்தியாவில் தயாராகும் படங்களின் வெற்றி சதவிகித   அடிப்படையில் பார்த்தால் நல்ல ஆவரேஜ் தான் . இந்தியாவில் வெளியாகிற அத்தனை படங்களும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தது போலவும்,   இப்போது அமேசான் போன்ற ஓடீடீ தளங்களில் வெளிவந்ததினால் தான் தோல்வி என்று சீன் போடக் காரணம் . நம்பர் விளையாட்டு இவர்களால் ஆட முடிவதில்லை . இத்தனை கோடி கலெக்‌ஷன் , அத்தனை கோடி கூட்டம் , என் பொய் நம்பர் சொல்ல முடிவதில்லை . ரசிக மனப்பான்மை கோஷங்கள் இல்லை . அமேசானும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்கிற க...