விமலாதித்தனின்
சேட் பாக்ஸிலிருந்து..
“happy women’s day”
”இப்ப என்ன
நான் தேங்க்ஸ் சொல்லணுமா?”
“பெண்மையை,
பெண்களைப் போற்றுகிறோம்னு சொல்லி வாழ்த்துனா
தேங்க்ஸ் சொல்லுறதுல என்ன தப்பு?”
“வருஷத்துல
ஒரு நாளு வாழ்த்திட்டா பெண்மையை போற்றுறதா அர்த்தமா?’
“பின்ன?”
”உனக்கு பொம்பளையப்
பத்தி என்ன தெரியும்?”
“ஏன் உன்னை
தெரியுமே?”
“அஹா.. ப்ளிட்ரிங்”
“அன்பா பேசுனா
ப்ளிட்ரிங்கா?”
“ப்ளிட்டிரிங்
அன்புனு சொல்லிட்டு நீ என்ன பண்ண நினைக்கிறேன்னு எங்களுக்கு தெரியும்”
“டூ ஹார்ஷ்
பேபி. நான் என்ன செய்ய நினைக்கிறேனு எப்படி நீ முடிவு பண்ணலாம்?”
“எல்லா ஆம்பளை
சு.. க்களுக்கும் ஒரே நினைப்புத்தானே?”
“மகளிர் தினத்துக்கு
வாழ்த்து சொன்னது தப்பா?’
“எவனோ ஒரு வெள்ளைக்காரன்
கார்டு விக்குறதுக்காக கண்டுபிடிச்ச நாளு.. அதை இன்னமும் பிடிச்சி தொங்கிட்டிருக்கீங்க.
பொம்பளைய மதிக்கிறது தனி நாளு. அன்னைக்கு அஹா ஓஹோனுட்டு அடுத்த நாளே கால்ல போட்டு மிதிப்பீங்க”
“இப்ப என்ன
பண்ணனும்ங்கிற?’
“ஒரு மயிரும்
புடுங்க வேணாம்”
“ஒரு வாழ்த்து
சொன்னதுக்கு இத்தனை ஹார்ஷ் கான்வர்ஷேஷன் தேவையா? உனக்கு வேற ஏதோ ஒரு கோபம் என் மேல
போல? எதுக்கு சுத்தி வளைச்சு பேசுற. நேராவே சொல்லேன்?”
“எனக்கென்ன
பயமா? எனக்கு வாழ்த்து சொல்லிட்டிருக்கும் போதே பேஸ்புக்குல அனன்யாவுக்கு வாழ்த்து
சொல்லுறே?”
”அவளும் மகளிர்
தானே?”
“எல்லாத்தையும்
பொதுமைப் படுத்திரணும் அவ்வளவு கீழ்மையா போய்ட்டாங்க பொண்ணுங்க இல்லை?”
“இனிமே வாழ்த்தவே
இல்லை போதுமா? நீ கூடத்தான் ஆண்கள் தினத்துக்கு நிறைய பேருக்கு வாழ்த்து தெரிவிச்ச..
நான் ஏதாச்சும் கேட்டனா?”
“இத்தனை நாள்
பழகி உனக்கு என்னைப்பத்தி புரியலைன்னா என்னா வாழ்த்து மயிரு தேவை?.”
“இப்ப நான்
என்ன தப்பு பண்ணிட்டேன்?”
“இந்த ஆம்பளைங்களே
இப்படித்தான் எல்லாத்தையும் பண்ணிட்டு நான் என்ன பண்ணேன்னு எஸ்கேப் ஆகுறது.”
“அஹா..ஆம்பளை
பொம்பளை ரெண்டு பேர் நடுவுல கிடைக்கிற சந்தோஷம் துக்கம் எல்லாமே பொதுதான். சந்தோஷமெல்லாம்
ஏதோ ஆம்பளைக்கு மட்டும்தாங்குறா மாதிரியும் துக்கமெல்லாம் பொம்பளக்கு மட்டும்ங்கிறா
மாதிரி சொல்லுற?”
“அப்ப நீ சரி..
நான் தப்பு அப்படித்தானே..? பை. “
சைண்ட் அவுட்.
மகளிர் தின
வாழ்த்துக்கள்
Post a Comment
1 comment:
அருமையான பேச்சு நடை.. ஒரு படத்தின் காட்சி பார்த்த உணர்வு.
Post a Comment