Posts

Showing posts from June, 2020

லாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்

Image
”தேங்க்ஸ்” என்றாள் அனு “நோ பார்மாலிட்டி ப்ளீஸ். ரைட் சைட் உன் ரூமையே நீ எடுத்துக்கலாம். என்ன கொஞ்சம் புத்தகமெல்லாம் வச்சிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திடறேன் வையிட்” என்று கேஷுவலாய் சொல்லியபடி அந்த அறைக்குள் சென்றவனை   பார்த்தபடி தன் பையை மோடாவின் மேல் வைத்துவிட்டு, சுற்றிலும் பார்த்தாள். அதே சேகுவாரா, பாரதியார், பெரியதாய் ஒரு ஹிட்காக், அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல், குவாண்டின் ட்ரெண்டினோ மூன்று வருடங்களுக்கு முன் எங்கிருந்தார்களோ அங்கேயே இப்போதும் இருந்தார்கள். @@@@@@@@@@ “நீ சினிமாக்காரனா?” “ஏன் அப்படி கேக்குறே?” “இல்லை கமல் ஹிட்காக் படமெல்லாம் வச்சிருக்கியே? அதான் கேட்டேன்?’ “சே குவாரா படம் கூட தான் வச்சிருக்கேன். அதுக்காக நான் புரட்சியாளனா?” “இல்லியா என்ன? எதுக்கெடுத்தாலும் சண்டை போடுற? ரைட்ஸுங்குற? போலீஸ் கிட்டேயே ரூல்ஸ் பேசுறே? தென் வாட்? யூ ஆர் எ புரட்சியாளன்” ”சினிமா, இலக்கியம் எல்லாமே மக்களுக்காகத்தான். ஸோ.. இப்படியெல்லாம் பேசுனா சோஷியல் மீடியாவுல புரட்சிக்காரன் பேண்டேஜ் கட்டிருவாங்க. எனக்கு இவங்க எல்லாம்   ஆதர்சம் தட்ஸால்” @@@@@@@@@@@ “ர...

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது விளக்கேற்றியாகிவிட்டது தினமொரு சமையல் என சமையல் குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும் படங்களையும் பார்த்தாகிவிட்டது தினம் பேசும் நண்பர்களிடையே உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா? கையில பணமேயில்லை என்ன பண்ணுறது? போன்ற பேச்சுக்களைத் தவிர பேச ஏதுவுமில்லாமல் போய்விட்டது இன்னுமொரு பதினைந்து நாளே என நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ? என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து மாதங்களாகிவிட்டது. யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை புதியாய் முளைத்திருக்கும் வங்கிக் அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால் அவர்கள் தான் என் பாதுகாப்பை முக்கியமாய் நினைக்கிறார்கள். அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம் வரைக்குமாவது. அதன் பிறகு அவனும் பேசுவானா என்று தெரியவில்லை ஜெய் கொரோனா.

லாக்டவுன் கதைகள் -11- கேரக்டர் ஆர்டிஸ்ட்

“சார்.. இன்னைக்கு ஒரு வண்டி போவுது. பாஸு எல்லாம் வாங்கிட்டாங்க. நான் வீட்டை காலி பண்ணிக்கிறேன். நீங்க கிளம்புங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்றவனை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்தார் நமச்சிவாயம். நமச்சிவாயத்தை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கொஞ்சம் ரெட்டை நாடியாய் கருத்த உருவத்தோடு, வழுக்கையாய் இருப்பார்.   கண்கள் ரெண்டும் கோலி குண்டுகள் போல் பெரிதாய் இருக்கும் என்பதால் கிராமத்து பஞ்சாயத்தார், ஊர் பெருசு என பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு காலத்தில் வெகு பிஸியாய் இருந்தவர்தான் நமச்சிவாயம் ”நல்ல நடிப்பார் சார். நிறைய ட்ராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஊருல நாடகக் ட்ரூப் எல்லாம் வச்சிருந்திருக்காரு. நல்ல கேரக்டர் ரோல் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க” என்று அறிமுகப்படுத்தியவர் என் நண்பர் சிவகுமார். “நல்ல கோயில் பூசாரி மாரி இருக்கீங்க சார்” என்று பார்த்த மாத்திரத்தில் சொன்னேன். அவருக்கு நான் சொன்னது பிடித்துப் போய், சட்டென என் கை பிடித்து “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார். அவரின் வெள்ளந்தித்தனம் எனக்கு மிகவும் பிடித்துப் போக அன்றிரவே நானும் நண்பரும் சரக்கடிக்க ...