Forbidden Love - anthology stories from zee5

நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர். நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது. அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர். ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே. அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...