ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க.
1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட்
2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட்
3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட்
4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு.
எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர்கள் அங்கரிக்கபடுகிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஏகப்பட்ட குழப்பங்கள். டோலக் வாசிக்கும் அப்பா அம்மாவின் பிரச்சனை என்னவென்று யோசித்திர்கள் என்றால் அப்பா டோலக் வாசிக்கும் போது நடுவில் உட்கார்ந்து வாசிக்க, அவர் பின்னால் பாடும் பெண் உட்கார்ந்திருக்கிறார். மெல்ல அவரின் குரல் முன்னணிக்கு வந்து அவர் நடுவில் உட்கார டோலக் பின்னால் போகிறது. நிஜத்தில் டோலக்கை நடு நாயகமாய் வைத்து கச்சேரி செய்து நான் பார்த்ததில்லை. இப்படி இசையைப் பற்றிய புரிதல் பெரிதும் இல்லாமலேயே லிடியன், சிவமணி ஆகியோரை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். ரஹ்மான் வழங்கும் என்று சிவமணியின் பழக்கத்திற்காக போட்டு, ஜீ5 க்கு விற்றிருக்கிறார்கள் போல, சிவமணி, லிடியனைத் தவிர சொல்லிக் கொள்ள வேறேதும் இல்லை.
Post a Comment
No comments:
Post a Comment