Thottal Thodarum

Sep 10, 2020

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?  

அமேசானில் நேரிடையாய் வெளியாகி நல்ல படம் என்று பெயர் எடுத்தபடங்கள் என்று பார்த்தால், சகுந்தலாதேவி, சீ யூ சூன் மட்டுமே. அமேசான் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அமிதாப்பின் குலாபோசித்தாபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, ஜோதிகாவின் பொ... பென்குவின், கன்னட லா, ப்ரெஞ்சு பிரியாணி, மலையாளம் சுஜாதையும்.. , சி யூ சூன். ஆகியவை எட்டு படங்களில் ரெண்டு ஹிட் என்பது வழக்கமாய் இந்தியாவில் தயாராகும் படங்களின் வெற்றி சதவிகித  அடிப்படையில் பார்த்தால் நல்ல ஆவரேஜ் தான்.

இந்தியாவில் வெளியாகிற அத்தனை படங்களும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தது போலவும்,  இப்போது அமேசான் போன்ற ஓடீடீ தளங்களில் வெளிவந்ததினால் தான் தோல்வி என்று சீன் போடக் காரணம். நம்பர் விளையாட்டு இவர்களால் ஆட முடிவதில்லை. இத்தனை கோடி கலெக்‌ஷன், அத்தனை கோடி கூட்டம், என் பொய் நம்பர் சொல்ல முடிவதில்லை. ரசிக மனப்பான்மை கோஷங்கள் இல்லை. அமேசானும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்கிற கணக்கை வெளிப்படையாய் கொடுப்பதில்லை. கொண்டாட்டத்தை துவேஷத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாத இண்டஸ்ட்ரி ட்ராக்கர்களுக்கு வியாபாரம் போய்விட்டதால் அதையே நெகட்டிவ் பப்ளிச்சிட்டியாய் மாற்றுகிறார்கள். 

உண்மையில் சொல்லப் போனால் இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஓடீடீயில் வெளியான கண்டெண்டுகளுக்கு 100வது நாள் போஸ்டர் எல்லாம் எத்தனை அபத்தம் என்று தெரிந்தே தான் செய்கிறார்கள். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் நம்பர்கள் இவர்களின் வாழ்வாதாரம். அதில் மாற்றம் வரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் புலம்பல் தான் ஓடீடீ ரிலீஸ் எல்லாம் மொக்கை என்பது. அமேசானைப் பொறுத்தவரை, இத்தனை படங்கள் மூலமாய் கிடைத்திருக்கும் புதிய வாடிக்கையாளர்கள். தக்க வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இப்படங்களுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் லாபம். அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கண்டெண்டுகள் அந்ததந்த மாத வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தினால் போதுமானது. அதில் வெற்றி பெரும் படங்கள் அவர்களின் பார்வையாளர்களுக்கு திருப்தியைத் தரும். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் தில் பேசாரா படத்தை இலவசமாய் அனைவரும் பார்க்க வெளியிட்டார்கள். சுமார் என்பது கோடி பேர் பார்த்ததாய் டேட்டா பேஸ் கொடுக்க, அதை ஒரு கொண்டாட்டமாய், இத்தனை பேர் பார்த்தார்கள் என்று கொண்டாடினார்கள். சினிமாவிற்கு இந்த கொண்டாட்டங்கள் நம்பர்கள் தேவையாய் இருக்கிறதோ இல்லையோ வியாபாரிகளுக்கு தேவையாய் இருக்கிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியான படங்களில் தில் பேச்சார, லூட் கேஸ், குதா ஹபீஸ், சடக் 2, ஆகியவைகளில் தில்பேச்சாரா, லூட் கேஸை தவிர பெரிய ஹிட்டோ, விமர்சன ரீதியான வரவேற்போ இல்லை. இங்கேயும் அவர்களது ரிலீஸ் லிஸ்டில் இரண்டு ஹிட் இருக்கிறது.

நெட்ப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாகவே பெரிய பட்ஜெட் படங்களாய் வாங்கி வெளியிடாமல் அவர்களின் ஏ செண்டர் ஆடியன்ஸ் மார்கெட்டுக்கு ஏற்பான படங்களை தயாரித்தோ, அல்லது தயாரிக்கப்பட்ட படங்களையோ வாங்கி வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், ராத் அகேலி ஹே, கிருஷ்னா அண்ட் ஹிஸ் லீலா, சமன்பஹர், குஞ்சன் சக்சேனா, க்ளாஸ் ஆப் 84 ஆகியவை வெற்றிப் படங்களே, எட்டுக்கும் மேற்ப்பட்ட படங்களை இந்திய மொழியில் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸின் வெற்றி கணக்க்கு இது. சீரீஸ்களின் வெற்றி இதில் கணக்கில் வராது. உண்மையில் பார்த்தால் சின்னகல்லு பெத்த லாபம்.

ஜீ டிவியின் அங்கமான ஜீ5யில் கூட தமிழ் தெலுக்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி என அடித்து துவம்சம் செய்கிறார்கள். இவர்களின் வெளியீட்டில் யாரா என்கிற ஒரு ஆவரேஜ் பட்ஜெட் படம் கவனம் பெற்றது. லூசர் எனும் ஒரு வெப்சீரீஸ் கவனம் பெற்றிருக்கிறது. சுராலீ எனும் பாகிஸ்தானிய சீரீஸ் வெற்றி, சின்னச் சின்ன படங்களை சகாய விலைக்கு வாங்கி அதை ஓ.டி.டி, டிவி, டப்பிங் என எல்லா வியாபாரத்திலும் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட டேனி, காக்டெயில் போன்ற படங்களின் தோல்வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் அதே நிலைதான். லாக்கப் ஒன்று தான் தமிழில் வெளியாகி அபவ் ஆவரேஜ் கவனம் பெற்ற படமாய் அவர்களுக்கு அமைந்தது.

ஆஹா என்று ஒரு ஓ.டி.டி ப்ளாட்பார்ம் தற்போது தெலுங்கு படங்கள், கண்டெண்டுகளுகாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் ப்ரீயடில் மிகப் பெரிய அளவில் தெலுங்கு ஆடியன்ஸை கவர்ந்த ஒர் ஓடிடி என்றால் அது அஹாவைதான் சொல்ல வேண்டும். கடந்த மாதங்களில் மட்டும் ட்ரான்ஸ், போரன்ஸிக் போன்ற மலையாளப் படங்களை டப்பிங்கில் வெளியிட்டு பெரும் வெற்றி பெற்ற அதே வேளையில், சின்னப்படங்களான கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, பானுமதி ராமகிருஷ்ணா, போன்ற படங்களின் வெற்றி இன்னும் பல மாதங்களுக்கு தாங்கும்.

ஏன் உலகளவில் ஆப்பிள் டிவி டாம் ஹாங்ஸின் “க்ரே ஹவுண்ட்” எனும் படத்தை நேரிடை ஓ.டி.டி ரிலீஸ் செய்தது. சுமார் என்பது மில்லியனுக்கு விலைக்கு வாங்கியதாய் தகவல். ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த ப்ளாட்பார்மிற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்திருக்கிறது இந்த படம். அடுத்ததாய் வில் ஸ்மித் நடிக்கும் படத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது அப்பிள் டிவி.

உண்மையில் சொல்ல போனால் தெலுங்கில் வெளியான வி, இந்த க்ரே ஹவுண்ட் போன்ற படங்கள் பெரிய திரையில் பார்க்கும் போது நிச்சயம் அதற்குண்டான உற்சாகத்தை பெரும் திரை தான் தரும் என்பதில் ஐயமேயில்லை. ஆனால் அந்த உற்சாகத்தை மீறி முடிவாய் படம் கொடுக்கும் நிறைவே அதன் வெற்றி தோல்விக்கு அடிகோலும், அப்படியான வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் தோல்விதான். அதே நேரத்தில் நிச்சயம் பெரிய திரையில் பார்த்தால் இன்னொரு மடங்கு லாபம் சம்பாரிக்ககூடிய படம் தான் க்ரேஹவுண்ட். ஏனென்றால் அது போர் படம். குறிப்பாய் கடற்படையிடையே நடக்கும் போர் பற்றிய படம். அதை பெரிய திரையில் பார்த்தால் நிச்சயம் ஒர் மிக அற்புதமான அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. நாளை ஒரு வேளை மாஸ்டர் போன்ற படங்கள் இதில் வெளியானால் நிச்சயம் தியேட்டர் கொண்டாட்டம் என்பதை இழந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்

இவர்கள் எல்லோருக்கும் லாபம் வருமா? இத்தனை கோடி போட்டு படம் வாங்குகிறார்களே? எப்படி வெற்றி தோல்வியை கணக்கிடுவது? நல்ல விமர்சனம் வருவதை வைத்தா? அல்லது இத்தனை கோடி ரூபாய்க்கு விலைக்கு போன நம்பரை வைத்தா? இதே லாப நஷ்ட கணக்கை இந்த இண்டஸ்ட்ரி ட்ராக்கர்கள் வெப் சீரீஸுக்கு பார்ப்பதில்லை. ஏனென்றால் அது அந்தந்த நிறுவனங்கள் அவர்களின் பணம் போட்டு அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இல்லையேல் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கபடுகிறது உதாரணமாய் பாதாள் லோக் எனும் சீரீஸின் பட்ஜெட் என்னவாக இருக்கும்? அதன் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா முதல் காப்பி அடிப்படையில் அமேசானுக்காக தயாரித்து கொடுத்த வெப் சீரீஸ். அதில் அவருக்கு எத்தனை லாபம் வந்தது என்று யாராவது கவலைப் பட்டு பார்த்திருக்கிறீர்களா? மாட்டார்கள். ஏனென்றால் அதில் இம்மாதிரியான போலி பேக் ட்ராக்டர்களுக்கு வியாபாரம்.

சோஷியல் மீடியாவுக்கு முன்பு என்றாவது இந்த படத்தின் பத்தாவது ஆண்டு, இவருக்கு பிறந்தநாள், அதற்காக ஸ்பெஷல் டிபி, பிரபலத்தைப் பொறுத்து அதற்கு வீடியோ, ஆடியோ செய்திகள் என களேபரப்படுகிறது. இத்தனைக்கும் பின்னால் ஒரு வியாபாரம் இருக்கிறது. இதனால் ஆதாயம் அடைகிறவர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் உண்மையில் சொல்லப் போனால் கிட்டத்தட்ட துறை சார்ந்த ஒட்டுண்ணிகள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக போடப்படும் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுக்கான வியாபாரம். அதை தான் அனைவரும் விரும்புகிறார்கள். மீடியாவில் தங்களைப் பற்றிய பேச்சும் இம்மாதிரியான ஒரு நாள் பரபரப்பு அவர்களது ஆட்டத்தை நிர்ணையிப்பதாய் நினைக்க வைக்கிறார்கள் இந்த ட்ராக்கர்கள்

தியேட்டர்கள் திறந்திருந்த போது அந்தந்த பட தயாரிப்பாளர்களிடமிருந்து விளம்பரம் பணம்  வாங்கிக் கொண்டு முதல் நாளே நூறு கோடி பத்து கோடி என கலெக்‌ஷன் ரிப்போர்ட் எழுதுகிற இவர்களின் ஆண்டு ரிப்போர்ட்டில் அந்த படங்கள் இருக்கவே இருக்காது. தியேட்டர்கள் நடைபெற்ற போதும் அய்யோ நல்ல படங்கள் ஓடுவதில்லை. நல்ல படங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. பெரிய படங்கள் தொடந்து தோல்வி, வெற்றி என இவர்களின் வாழ்க்கையே நம்பர்களை வைத்துத்தான் என்றிருந்தது கொரானாவால் மாறியது. நம்பர் இல்லாமல் இவர்களுக்கு வியாபாரம்  இல்லை. உண்மையில் சினிமா ரசிகனுக்கு அவர்களுடய நம்பர் தேவையேயில்லை. அவனுக்கு தேவையானது எல்லாம் அவன் செலவு செய்யும் பணத்திற்கு கிடைக்கும் அனுபவம். அந்த பணம் நம்பராய் தெரிய வரும் போது அவன் அதிலிருந்து விலகிவிடுவான்.  எனவே நம்பர் நல்லது.

Cable Sankar


Post a Comment

No comments: