ஹைதராபாத்தில் நிறைய குழம்பு கறிஸ் கடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் சென்னையில் ஏனோ நிறைய குழம்பு கடைகள் இருந்து பார்த்ததில்லை. அவ்வப்போது சில சைவ உணவு சிறுகடைகள் குழம்பு ,கூட்டு, பொரியல், ரசம் என தனித் தனியே இருபது ரூபாய்க்கு விற்பனை செய்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் அதையே முழு நேரக்கடையாய் பார்த்ததில்லை. சில ஆண்டுகளாய் அம்மாதிரியான குழம்புக்கடைகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. முக்கியமாய் நான் வெஜ் குழம்பு கறிக்கடைகள். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொன்று முளைக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து சமைக்க ஆரம்பித்து மெல்ல வியாபாரம் பெருக, பெருக, ஆட்களை வைத்து சமைக்க ஆரம்பித்து சுவை கெட்டுப் போய் மூடிய கடைகள் ஏராளம். ஆனால் இன்றளவில் நிறைய குழம்புக்கடைகள் அவரவர்களின் ஸ்பெஷல் கைவண்ணத்திற்கு ஏற்ப அட்டகாசமான வியாபாரம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அப்படியான ஒரு கடை தான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்த தேவி அக்கா குழம்புக்கடை. என் நியாபகம் சரி என்றால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் வாய் மொழி காரணமாய் மெல்ல இந்தக்கடையில் சுவைக்காக குழம்பு வாங்க ஆரம்பித்தார்கள்.
நான் முதல் முதலாய் சிக்கன் தொக்கும், ஒரு சப்பாத்தியும் வாங்கித்தான் என் கணக்கை ஆரம்பித்தேன். தாம்பாளமாய் சப்பாத்தி ஒன்று 15 ரூபாய் கூடவே நம்மூர் சிக்கன் தொக்கு நான்கு ஐந்துபீஸ்களோடு அளவான காரம் மணத்தோடு 70 ரூபாய். வாங்கி சாப்பிட்ட மாத்திரத்தில் மிகவும் பிடித்துப் போக, பல நேரங்களில் மட்டன் தொக்கு, சிக்கன் தொக்கு ஒரு சப்பாத்தி என மதிய உணவு அவர்களிடம் என்றானது. கொஞ்சம் கூட காரலோ, வயிற்று பிரச்சனையோ வந்ததேயில்லை. கூடவே 25 ரூபாய்க்கு ஒரு ஆள் சாப்பிடும் அளவிற்கான சாதம் கொடுக்க ஆரம்பிக்க, மட்டன் குழம்பும், மீன் குழம்பும் சிறப்பை கூட்டின. எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருக்க, கொரானா வந்து மொத்த வியாபாங்களையும் புரட்டிப் போட்டிருக்க, தக்கன பிழைக்கும் என்பதற்கு ஏற்ப இவர்களது கடை குவாரண்டைன் விதிகளீன் படி பார்சல் மட்டுமே அனுமதி என்றானது இவர்களுக்குமிகவும் வசதியாய் போனது. ஏகப்பட்ட பேச்சிலர்கள், இருக்கும் ஏரியா சாலிகிராமம். குறிப்பாய் உதவி இயக்குனர்கள். 100 ரூபாய்க்கு குழம்பு, சப்பாத்தி, சாதம் சாப்பிட முடியும் அதுவும் நல்ல தரத்தோடு எனும் போது ஏன் விற்காது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாய் அருமையாய் சுவையை மெயிண்டையின் செய்து வருகிறார்கள்.
மீன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு என எல்லாவற்றிலும் நல்ல தரம் சுவை. சாலிக்கிராமம் பக்கத்தில் இருந்தா ஒரு முறை ட்ரை செய்து பார்க்கவும்
தேவி அக்கா குழம்புக்கடை\
அபுசாலி தெரு
சாலிகிராமம்
விஜய்காந்த் வீடு தாண்டி
9345876277
Post a Comment
1 comment:
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
Post a Comment