Thottal Thodarum

Sep 20, 2020

Dolly Kitty Aur Woh Chamakte Sitare - Hindi Film Review

 Lipstick under my burka  பட இயக்குனர் அலங்கிரிட்டாவின் அடுத்த படம். இந்தப்படமும் முந்தையை படம் போலவே போல்ட். டோலியும் கிட்டியும் ஒன்று விட்ட சகோதரிகள். டோலிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தை பெண் தன்மையுடன் இருக்கிறான். டோலிக்கும், அவளது கணவனுக்குமிடையே செக்ஸ் என்கிற சம்பவம் ஒன்று நடந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. காரணம் அவளின் ப்ரோசன் யோனியும், மனநிலையும். கிட்டி பிகாரிலிருந்து வரும் டோலியின் சகோதரி. டோலியின் கணவனின் அப்யூஸ் நடவடிக்கை காரணமாய் தனியாய் ஹாஸ்டல் பிடித்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளின் வாழ்க்கை, அவளின் வேலை ரொமான்ஸ் ஆப் செக்ஸ் டாக் வேலை, அதன் பின்னான காதல், அதனால் ஏற்படும் மன உளைச்சல் என இரண்டு பெண்களின் சமகால வாழ்க்கையை சொல்லியிருக்கிற படம் தான் இந்த டோலிகிட்டி அவுர் ஓ சமக்த்டே சித்தாரே.

கொங்கனா சென் அத்தனை இயல்பான நடிப்பு. ஆரம்பக் காட்சியில் டோலியிடம் கிட்ட அவளின் கணவன் தன்னை தவறாக தொடுகிறான் என்று சொல்ல்லும் போது காட்டும் ரியாக்‌ஷனிலேயே நான் கொங்கனா செண்டா என்று கொடி ஏற்ற ஆரம்பித்துவிடுகிறார். அவருக்கும் கணவருக்குமிடையே இருக்கும் நெருக்கம், ப்ரோசன் எமோஷன் காரணமாய் நடக்காமல் இருக்கும் செக்ஸுவல் உறவு. டெலிவரி பாயுடனான நெருக்கம், அதனால் ஏற்படும் குழப்பம். சிறுவயதிலேயே தன்னுடய சுய விருப்பத்துகாக தங்களை விட்டு வெளியேறிய அம்மாவிடம் காட்டும் வெறுப்பு. அவளுக்கும் டோலிக்குமிடையே நடக்கும் கேள்வி பதில் காட்சிகள் எல்லாம் க்ளாஸ். அதே நேரத்தில் தன் யோனி ப்ரோசன் இல்லை என்று டெலிவரிபாயுடனான உடல் உறவில் புரிந்து அடுத்த நாள் கணவனிடம் மாத்திரை மருந்துகளை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு இனிமே நான் ப்ரோசன் இல்லை என்று சொன்னதற்கு கணவன் அவளது அலுவலக உயரதிகாரியுடன் செக்ஸ் வைத்து புரிந்து கொண்டாயா? என்று கேட்குமிடத்தில் அவர் காட்டும் ரியாக்‌ஷன் செம்ம.  

கிட்டியின் ஆரம்ப குழப்பங்கள். ஹாஸ்டலில் உள்ள தோழி நோய்டா மாதிரியான சிட்டி வாழ்க்கையை எப்படி கையாளுவது என்று வெளிப்படுத்த அதனால் இன்ப்ளூயன்ஸ் ஆனாலும், தன் கன்னித்தன்மையை இழக்காமல் பாதுக்காக்க விழைவது. செக்ஸ் டாக் கால் செண்டர் வேலையில் பழக விழையும் நாட்களில் ஏற்படும் மனக்குழப்பம். தன்னுடய அக்கா புருஷனே தன்னிடம் ஆப் மூலம் செக்ஸ் டாக் பேசுவதை உணர்ந்து வருந்துமிடம். செக்ஸ் டாக்கில் வந்த ப்ரதீப் மூலமாய் முதல்  செக்ஸுவல் அனுபவம் ஏற்பட்டு தன் கன்னித்தன்மையை இழக்குமிடம். ஆது தனக்கு ப்ளஷராய் இல்லை என்று அக்காவிடம் வருத்தப்பட்டு பேசுமிடமாகட்டும்.பூமியின் நடிப்பு இயல்பு. 

இயக்குனர் அலங்கிரிட்டாவின் முந்தையை படம் போலவே பெண்கள் மேலான அடக்குமுறை. சமுதாய ஒழுங்கு. அவளின் கருத்து சுதந்திரம். மாரல் போலிசிங் என பல விஷயங்களை பேசுகிறது. ஆனால் இக்கதையில் நடக்கும் சம்பவங்களில் சிறு குழப்பம் இருக்கிறது. பெண் தன் வாழ்க்கையின் வசதிக்காக, மேன்மைக்காக, உடலை விற்பதிலிருந்து, காதல் வயப்படுவது வரை எல்லாவற்றையும் தன் சுயநலத்துக்காகவே செய்கிறாள். உதாரணமாய் கிட்டியின் மீதான டோலியின் கணவரின் அப்ரோச் அவரின் செக்ஸுவல் வறட்சியின் காரணமாய் என்று அவளுக்கு ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கலாம், ஆனால் டோலிக்கும் அவருக்கு செக்ஸ்வல் உறவு நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் என்று தெரிய வந்ததும், திடீரென போன் செக்ஸில் பேசும் அக்கா புருஷனிடம் நீ உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுறே? என்று விக்டிம் ப்ளேமிங் செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்று புரியவில்லை. அதே நேரத்தில் அவள் காதலித்தவனால் ஏமாற்றப்பட்டு அவளின் செக்ஸுவல் அர்ஜுக்காகவும், அவளின் தோழியின் பாய் ப்ரெண்டுடன் உறவு கொள்வதாகட்டும், கலாச்சாரகாவலர்களால் அடித்துடைக்கப்பட்ட நிறுவனத்தின் நிற்பதாகட்டும் நல்ல காட்சிகள். ஆனால் அதே நேரத்தில் கொங்கனாவின் செயல்களை நியாயப்படுத்த எந்த அழுத்தமான காரணமும் இல்லை. தன்னை உணர நல்ல புரிந்துணர்வும் எமோஷனல் கணெக்டும் உள்ள இளைஞன் மூலமாய் தன் இத்தனை நாள் செக்சுவல் உணர்வை, சந்தோஷத்தை அவள் உணர்ந்ததாய் வைத்துக் கொண்டாலும், ஒரு முறை தன் தங்கையை தொட்டான், செக்ஸ் ஆப்பில் சாட் செய்தான்  என்பதை தான் வேறு ஒரு பையனிடம் படுத்ததை விட பெரிய குற்றமாய் தன்னை விக்டிமாய் காட்டிக் கொண்டு குடும்ப உறவை அறுப்பது நியாயமாகும்?. 

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்பதை எல்லாம் நல்லது கெட்டதுகளோடும் சொல்லாமல் கொஞ்சம் பெண்ணிய ஜல்லி அடித்திருப்பது தான் இழுவையாக இருக்கிறது. 


Post a Comment

No comments: