Forbidden Love - anthology stories from zee5


நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது. 

அனாமிகா

பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர். 

ரூல்ஸ் ஆப் கேம்ஸ்

பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவுத்ரிக்கு முதல் ஓடிடி படம். க்ளைமேக்ஸில் தன் இருப்பை காட்டியிருக்கிறார்.

டைகனைஸிஸ் ஆப் லவ்

ஹர்ஷ் குமார் பிரபல சர்ஜன். அவனின் பர்சனல் வாழ்க்கையில் ஒர் கரும்புள்ளி இருக்கிறது. அதை மீறி டாக்டர் சுதா அவளின் ஆஸ்பிட்டலில் சர்ஜனாய் சேர்க்கிறாள். அவனின் அபார திறமை அவளை இம்ப்ரஸ் செய்கிறது. அவளது வயதான கணவன் வைபவுக்கு பிரச்சனையாகிறது. அவருக்கு உதவ வருகிறான் ஏசிபி ஆதித்யா. ஹர்ஷ்க்கும் சுதாவுக்குமிடையே நெருக்கம் உண்டாக என்னவாகிறது என்பதுதான் கதை. மகேஷ் மஞ்ச்ரேக்கரின் வழக்கம் போல டார்க் வகை கதை. மிக சுலபமாய் கையாண்டுள்ளார். ரைமா சென்னின் நடிப்பு பெரிதாய் சோபிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அரேஞ்ச்ட் மேரேஜ்

ஹோமோ செக்ஸுவல் காதலர்கள். சமூகத்தின் அழுத்தம் தாங்காமல், திருமண பந்தத்தில் கியாவுடன் இணைகிறான். மெல்ல அவளுக்கு தெரிய வருகிறது தன் கணவனின் செக்ஸுவல் பிரச்சனை குறித்து. அதுவும் தன் தம்பி முறை இருக்கிறவனுடன் எனும் போது அதிர்ச்சி மேலோங்குகிறது. ஹோமோ செக்ஸுவாலிட்டி ஒரு வியாதி என்றும் நம்பும் சைக்காட்ரிஸ்டிடம் கூட்டி செல்கிறாள். பின்பு என்னவானது என்பது தான் கதை. கியாவின் மேல் செக்ஸுவல் ஆர்வம் வரவில்லை என்பதற்காக அவளை வளர்ந்த ஆண்டி ப்ராத்தல் வீட்டிற்குள் அழைத்துப் போய் அனுபவ பாடம் படிக்க வைக்கும் இடங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் ஆனாலும், அந்த ஆண்டியின் கேரக்டரை வடிவமைக்க வைக்கப்பட்ட காட்சிகள் .செம்ம. ப்ரதீப் சர்காரின் இயக்கம். கொல்கத்தாவின் தெருக்கள். ஏரியல் ஷாட்கள் எல்லாமே என்கேஜிங்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒர் அந்தாலஜி.

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.