Posts

Showing posts from October, 2020

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

Image
  நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் .. நன்றி மணிஜி நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi

சாப்பாட்டுக்கடை - அன்னப்பறவை

Image
இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல்,  கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்க...