இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல், கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்கும். கொரானா காரத்தில் நல்ல சூடான இதமான சுக்கு மல்லி காப்பி நல்லது. பயத்தம் உருண்டை, வேர்கடலை உருண்டை, பயறு சுண்டல், பருப்பு பாயசம், தேங்காய் பாயசம் என எல்லா அயிட்டங்களும் வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை பயன்படுத்தியே தயாரிக்கிறார்கள். சில நாட்களில் ஒக்காரை எனும் ஒரு அயிட்டம் பழைய கால ஆட்களிடம் கேட்டால் சொல்வார்கள். ஒரு நாள் சாப்பிட்டு பாருங்கள். தரமான நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட ஒக்காரை அருமையாய் இருக்கும்.
மதியம் கொள்ளு ரசம், போன்ற பாரம்பரிய அயிட்டங்களுடனான சாப்பாடு வெறும் எழுபது ரூபாய்க்கு அன்லிமிட்டெட். நான் சாப்பாடு இன்னும் சுவைக்காததால் நண்பர்களின் ரெகமெண்டேஷனை வைத்து சொல்கிறேன் செமையாக இருக்கிறதாம்.
மாலையில் டிபன் வகைகள் தோசை, பீட்ரூட் சப்பாத்தி, இட்லி, அதற்கு என வித்யாசமான குருமாக்கள். சட்னி என வரிசைக்கட்டுகிறார்கள். இந்த கொரானா காலத்தில் நிறைய சினிமா தொழிலாளர்கள் உணவகங்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று முன்பே சொல்லியிருந்தேன். அது போல இக்கடை ஒரு ப்ரொடக்ஷன் மேனேஜரின் குடும்பம் ஆரம்பித்திருக்கிறது. அவரின் மனைவியும் அம்மாவும் நம் கண் முன்னே சமைத்து பரிமாறுகிறார்கள். நல்ல சுவையான, தரமான, ஆரோக்கியமான உணவு வேண்டுகிறவர்களும், வித்யாசமான பாரம்பரிய உணவுகளை சுவைக்க விரும்புகிறவர்களும் தவறாமல் சாப்பிட வேண்டிய கடை.
அன்னப்பறவை
காமராஜர் சாலை.
விருகம்பாக்கம்
மேக்கப் யூனியன் அருகில்.
Post a Comment
No comments:
Post a Comment