Posts

Showing posts from 2021

சாப்பாட்டுக்கடை - பிகானீர்வாலா

Image
 சென்ற வாரம் நுங்கம்பாக்கம் பக்கம் போன போது  பிகானீர்வாலா கடையின் வாசலில் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் காத்திருந்தது. கார்கள் அணிவரிசை கட்டியிருந்தார்கள். வெஜிட்டேரியன் உணவகங்களில் வட இந்தியர்கள் க்யூ கட்டி நிற்கிறார்கள் என்றால் நிச்சயம் தரமானதான் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. சாதாரணமாய் க்யு கட்ட மாட்டார்கள். அடுத்த ஒரு வார நாளில் சென்று பார்த்த போது அட்டகாசமான க்ரவுண்ட் ப்ளோர் டிஸ்ப்ளேவே கண்ணைக் கட்டியது. அத்தனை விதமான ஸ்வீட், கார வகைகள். கிலோ கணக்கில் ஏகப்பட்ட ஆபர்களோடு. ஒரு ப்ளோர் முழுக்க இந்த அயிட்டங்களுக்கு என்று ஒதுக்கியிருக்க, மாடியில் விஸ்தாரமான உணவகம். ரொம்பவும் விஸ்தாரமான மெனு இல்லை என்றாலும் இருக்கும் மெனுவில் சோளாபூரியை ஆர்டர் செய்தேன். அட்டகாசமான ரெண்டு பூரிக்களோடு சென்னா, பன்னீர் மற்றும் உருளைப் போட்டு கொடுத்தார்கள். அட்டகாசமான சுவை. கூடவே தொட்டுக் கொள்ள பிகானீர் ஊறுகாய்.  ப்ளேட்டர் மீல்ஸ் தருகிறார்கள். அதில் ஒரு ஸ்வீட், ஒரு ரைஸ், மூன்று சப்ஜிக்கள், ஒரு ரைத்தா, ஒரு அப்பளம், மூன்று ரொட்டிக்கள், எல்லாம் சேர்த்து 370 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான். பாவ்...

சாப்பாட்டுக்கடை - மஞ்சள்

Image
இதே பெயரில் சில வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கம் ஐந்து விளக்கு அருகில் ஒரு பழைய வீட்டில் உணவகமொன்றை ஆரம்பித்திருந்தார்கள். பின்பு சில மாதங்களில் அது காலியாகிப் போக போன மாதம் ரஷ்யன் கல்சுரல் அருகில் போக வேண்டியிருக்க, அப்போதுதான் பார்த்தேன். ஏகப்பட்ட கார்களும், வாசலில் நிறைய பேர் காத்திருந்தார்கள். சரி வேறொரு நாள் போய்க் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். திபாவளிக்கு அடுத்தநாள் அந்த ஏரியாவில் ஒரு மீட்டிங். மதிய உணவுக்கு அங்கே போகலாம் என்று நண்பரிடம் சொன்னேன். “நீங்க அங்க சாப்ட்டு இருக்கீங்களா?” என்று கேட்டார். இல்லை இன்னைக்குத்தான் ட்ரை பண்ணப் போறேன் என்று சொல்ல, அப்ப நீங்க சாப்டு சொல்லுங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று கிளம்பிவிட்டார். போன போது வழக்கம் போல வாசலில் கூட்டம் நின்றிருந்தது.  உள்ளே போய் பெயரைக் கொடுத்துவிட்டு வரலாம் என்று போன போது ஒரு சீட்தானே இருக்கு என்று உடனடியாய் இடம் ஏற்பாடு செய்ய.. சிறிது நேரம் கழித்து ஆர்டர் எடுக்க ஆளை கூப்பிட்டு வரச் சொல்ல வேண்டியதாய் போனது.  முணியாண்டி விலாஸ் பாணியில் பெரிய நான்வெஜ் அயிட்டங்களின் தட்டை நம் முன் வைத்து இதில் எது தேவை எ...

சாப்பாட்டுக்கடை - அப்புகுட்டி வெரைட்டி ரைஸ் - சாலிகிராமம்

Image
கொரோனா எத்தனை விதமான அழிவை கொடுத்ததோ அதே அளவிற்கு புதிய நம்பிக்கைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது. அதில் முக்கியமான சர்வைவல் நம்பிக்கை புதிய, சிறிய உணவகங்கள். கொரோனா காலங்களில் ஏகப்பட்ட சிறு, குறும் உணவங்கள், முக்கியமாய் பார்சல் மட்டுமே இருந்த காலத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்ட ஏழை, நடுத்தர குடும்பங்கள் உணவு தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். நிறைய சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் உணவு பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றி நடை போடுவதை கண் கூடாக பார்க்கிறேன். நொந்து நூலாகிப் போனவர்களையும் பார்க்கிறேன். இந்தக்கடை கொரானா காலத்தில் மிகப் பிரபலமாய் பேசப்பட்டது. குறிப்பாய் உதவி இயக்குனர்களுக்கு வருமானமில்லாத காலத்தில் அம்மா உணவகமும், கைவிட்ட நிலையில் சகாய விலையில் நல்ல தரமான உணவு கிடைத்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?. சாலிகிராமம். அருணாசலம் ரோடு. ப்ரசாத் ஸ்டூடியோ வாசலில் ஒரு குட்டி யானை வண்டியில் இவர்களது விற்பனை ஆரம்பமானது. கொரோனா காலம் இவர்களை பிரபலப்படுத்தியது. முப்பது ரூபாய்க்கு நல்ல எலுமிச்சை புளிப்போடு சிக்கன் தொக்கு, முட்டை தொக்கு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு பார்சல் வாங்கி வந்...

சாப்பாட்டுக்கடை - கார்த்திக் டிபன் செண்டர்

Image
அண்ணாநகர் ஏரியாவில் மிகப் பிரபலமான கையேந்திபவன் உணவகம். என்னது அண்ணாநகரில் கையேந்தி பவனா? என்று ஆச்சர்யப்படுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் சென்னையில் உணவகங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டு வகை. உயர்தர ஸ்டைலிஷ் உணவகங்கள். மற்றொன்று நடுத்தர மக்களின் உணவகங்கள். முதல் லிஸ்டில் உள்ள உணவங்கள் அவர்களது ரெஸ்டாரண்டுகளை ஆரம்பிக்க விழையும் இடம் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோடு. இரண்டாவது வகையினர் ஆரம்பிக்க விழையும் இடம் அண்ணாநகர், அதிலும் சாந்தி காலனி என்றால் அது மிகையில்லை. புதிது புதிதாய் உணவங்கள் தோன்றுவதும், மறைவதும் இந்த இரண்டு ஏரியாக்களில் மிக சகஜம். அப்படியான ஒரு ஏரியாவில் வருடங்களாய் மிகவும் பிரபலமான சைவ உணவகம். அதுவும் சைவ கையேந்திபவன் என்றால் அது இந்த கார்த்திக் டிபன் செண்டர் தான். கையேந்திபவன் என்று சொல்வதால் அதன் தரம் குறைவாக இருக்குமென்று நினைக்க வேண்டாம். பொடி, நெய் பொடி, பட்டர் பொடி, பட்டர் பொடி க்ரீன் பீஸ் மசாலா, பட்டர் தோசை, பட்டர் பொடி வடகறி, பட்டர் வடகறி, சுடச் சுட பொங்கல், கிச்சடி என காலை முதல் இரவு பதினோரு மணி வரை படு பிஸியான கடை தான் இந்...

Asst புராணம் -2

  அஸிஸ்டெண்ட் புராணம் -2 ”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது.  படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான். “என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?” “ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க.  ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இ...

Asst புராணம்.-1

அஸிஸ்டெண்ட் புராணம் -1 ஒரு இயக்குனருக்கு உதவியாளர்கள் அமைவது என்பது வரம். பல சமயம் நாம் அவருக்கு உதவியா இருக்கிறோமா? இல்லை அவர் நமக்கா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உதவியாளர்கள் அமைவது உண்டு. ஒவ்வொரு உதவியாளரும் ஒவ்வொரு யுனிக் கேரக்டர்கள். அவர்களின் ஆட்டிட்டியூட், சினிமா, அது பற்றிய புரிதல் என எல்லாமே தனித்துவமாய்த்தான் இருக்கும். பெண்களை புரிந்து கொள்வதில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் இவர்களுக்கும் உண்டு. முதல் படத்திற்கு நான்காவது படத்திற்கிடையே இவர்களது தனித்துவமான விஷயங்கள் எல்லாம் உதிர்ந்து போய், வெறும் கூடாய் நிற்பவர்கள் அதிகம்.  சரி விஷயத்துக்கு வருவோம். வாரத்துக்கு நான்கு பேராவது “ சார் .. உங்க கிட்ட வேலை செய்யணும் . வாய்பிருந்தா சொல்லுங்க ” என்று இன்பாக்ஸிலோ , மெசேஜிலோ கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள் . ஒரு கதையையோ, திரைக்கதையையோ, எழுதி முடிக்கும் வரை எனக்கு எப்போதும் உதவியாளர்கள் தேவையில்லை . முன்கள வேலை ஆரம்பிக்கும் போதுதான் உதவியாளர்களை அமைத்துக் கொள்வேன் . தினம் , டீ வாங்கி வருவதற்கோ , அல்லது வண்டியோட்டுவதற்கோ உதவியாளர்களை வைத்துக் கொள்வதில் ...

24 சலனங்களின் எண். விமர்சனம் -9

Image
 24 சலனங்களின் எண் நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலனின் பேச்சு.

பெர்முடா - விமர்சனம் -5

Image
  #பெர்முடா விமர்சனம்#5 ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்திங்கங்கன்னு முருகதாசை கேட்டப்ப "கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதை சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும்தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத்தான் அவரை முடிவு பன்னேன்" னு சொல்லிருப்பார். ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரிதான், சில கதைகளையும் சிலர் சொன்னாதான் நல்லாருக்கும். சிலரால மட்டும்தான் அந்த கதைகளை சொல்லவே முடியும். பெர்முடா முக்கோணத்தை பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாம காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு. சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தா காமம். அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சை தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராத விதமாக அவர் இத்தனை நாள் தவறவிட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம...

24 சலனங்களின் எண்.விமர்சனம்-10

Image
  பு(து)த்தகம் - 24 - சலனங்களின் எண் ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர். ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது. நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில். ஒரு திரைப்படம் உ...

பெர்முடா - விமர்சனம்-4

Image
  Sumana 5.0 out of 5 stars   A must-read writer. Reviewed in India on 10 November 2019 Cable Shankar is a gripping writer with so much passion that reflects in his writing. A very easy language employed to make The readers experience the writing with more images of their own. He is a "go-to" and a very important writer of the present generation. Bermuda   Kindle link https://amzn.to/3mQCgxA Bermuda Book Link: https://amzn.to/3lRilx0