ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவல் நாவலாக மட்டுமல்லாமல் புதிதாக சினிமா எடுக்க வருபவர்களுக்கு சினிமா உலகில் உள்ள அரசியலையும் மனிதர்களின் நுணுக்கமான ஈகோவை புரிந்துகொண்டு வெற்றிகரமாக காய் நகர்த்த உதவும் ஒரு சிறந்த புத்தகமாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.தலைவர் கேபிள் சங்கர் அவர்கள் வலைப்பூவுலகின் சுஜாதா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அவரது தனித்துவபாணி எழுத்தின் மூலம். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரின் கொத்துபரோட்டாவை சுவைத்த திருப்தி. ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவலில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கட்டுரைத்தொனி தென்பட்டாலும் மிக சுவாரஸ்யமான நடையால் மீண்டும் கதைக்குள் இழுத்து விடுகிறார். கதை நகர நகர அதற்குப் பின்புலமான உண்மைச் சம்பவங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைரம்' நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தாலும் அதன் சுவை குறையவே இல்லை. 'நான் ஷர்மி வைரம்'தலைவரின் வலைப்பூ வாசகர்களின் ஜாங்கிரி அதை அப்படியே சாப்பிட்டு விடுங்கள்
.வாழ்த்துக்கள் தலைவரே அடுத்து உங்கள் தனித்துவமான பாணி திரைப்படத்திற்காக காத்திருக்கிறோம். திரைத்துறையிலும் சமரசமின்றி சாதித்திட வாழ்த்துக்கள் தலைவரே. புத்தகத் திருவிழா சமயங்களில் பரபரப்பாக வெளியிட்டு எழுத்துப் பிழைகளோடு வரும் புத்தகங்களுக்கு மத்தியில் ஒரு சில எழுத்துப் பிழைகளை தவிர பக்காவான வடிவமைப்பு மற்றும் எழுத்துப் பிழையற்ற புத்தகம் நீண்ட நாட்களுக்கு பிறகு.அதற்காகவே தனியொரு ஸ்பெஷல் சல்யூட் தல. வலைப்பூ உலகம் ,யூட்யூப் சேனல் திரைப்படத்துறை ,தொடர்ந்து பப்ளீஷராகவும் வெற்றி கொண்டுள்ள அன்பு தலைவருடன் என்றென்றும் கரம்பற்றி கோர்த்திருப்போம்