சாப்பாட்டுக்கடை - கறி தோசை

சாலிகிராமத்தில் ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே பிரபல டீக்கடையான காவேரி கார்னர் பக்கத்தில் சட்டென தெரியாத வண்ணம் ஒரு கறி தோசை கடை உதயமாகியிருப்பதை கண்டு கொண்டேன். சரி ஒரு நடை போய் பார்ப்போம் என்று மெனுவைப் பார்த்ததில் கறி தோசையில் சிக்கன், மட்டன் கறி தோசை வகைகள் மட்டுமில்லாமல், பன் பரோட்டா எல்லாம் போட்டிருந்தார்கள். சரி முதல் முயற்சியாய் மட்டன் கறி தோசை சாப்பிடுவோம் என்று ஆர்டர் செய்தேன். அதற்கு முன்னால் ஒரே ஒரு பன் பரோட்டா டேஸ்ட் செய்வோம் என்று ட்ரை செய்ததில் பரோட்டாவை பன்னாக செய்து ஹாட் பேக்கில் போட்டு வைத்திருந்ததினால் பன் அமுங்கிப் போயிருந்தாலும், கூட தொட்டுக் கொள்ள, மட்டன், நாட்டுக்கோழி க்ரேவி, மீன் குழம்பு, குடல் குழம்பு என அதகளப்படுத்தினார்கள். டிபிக்கல் கிராமத்து ஸ்டைலில் இருந்தது குழம்பு வகைகள். குறிப்பாய் மட்டன் மற்றும் நாட்டுக் கோழி குழம்பைச் சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்த பின் மட்டன் கறி தோசை பிட்ஸா போல வெட்டப்பட்ட பீஸ்களாய் வந்தது. வழக்கமாய் கொஞ்சம் தடிமனாய் இருக்கும் கறி தோசை கொஞ்சம் மெலிந்திருந்தார்ப் போல இருந்தது. அடித்தளம் நல்ல கிரிஸ்பியாகவும், ...